ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
பஜனைப் பாடல்கள்

Bajan Songs for
Lord Murugan

Sri Kaumara Chellam
 வா வா வா வா முருகையா
vA vA vA vA MurugaiyA
 
Poems Songs for Lord MuruganSingapore S Janaki    'சிங்கப்பூர்' செல்வி ஜானகி

   Singapore S Janaki
 English 
 in PDF format 

 PDF வடிவத்தில் 

mp3 image
previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
search

(வா வா வா வா முருகையா
     வடிவே லழகா முருகையா
          வா வா வா வா முருகையா
               வடிவே லழகா முருகையா)

வேளுர் வளரும் முருகையா
     வேண்டும் வரங்கள் தாருமையா
          போருர் வளரும் முருகையா ... உன்னைப்
               போற்றி வாழ அருளையா ...... (வா வா ...)

வடபழனி வளரும் முருகையா ... நான்
     வாழும் வகைதான் அருளையா
          வயலுார் வளரும் முருகையா ... உன்னை
               வாழ்த்தி வாழ அருளையா ...... (வா வா ...)

கந்த கோட்டத்துக் கந்தையா ... நான்
     களிப்புடன் வாழ அருளையா
          கதிர் காமத் துறை கந்தையா ... உன்
               கழலடி வாழ்த்த அருளையா ...... (வா வா ...)

திருத்தணி வளரும் முருகையா ... நான்
     தினமும் வாழ அருளையா
          திருச் செந்துார் வேல் முருகையா ... உன்
               திருவருள் போற்ற அருளையா ...... (வா வா ...)

பழனி மலை வாழ் பரம் பொருளே ... உன்
     பதமலர் பாட பணித்திடுவாய்
          பரம சிவன் திரு அருட் குமரா ... உன்னைப்
               பரவித் துதித்திடஅருள் புரிவாய் ...... (வா வா ...)

குமரமலை வாழ் குருபரனே ... என்
     குறைகளை எல்லாம் தீர்ப்பவனே
          குருபரனே சிவ சண்முகனே ... என்
               குடி முழுதாளும் குருபரனே ...... (வா வா ...)

வரங்களை எல்லாம் வழங்கிடுவாய் ... நல்ல
     வளங்களை எல்லாம் தந்திடுவாய்
          வடிவேலைக் கையில் ஏந்திடுவாய் ... உயர்
               வள்ளி தெய்வானையோ டுறைந்திடுவாய் ...... (வா வா ...)

திருமலை எல்லாம் உறைந்திடுவாய் ... உயர்
     திருவேலைக் கையில் ஏந்திடுவாய்
          திருப் புகழ் தன்னைக் கேட்டிடுவாய் ... உயர்
               திருவருள் மாரிபொழிந் திடுவாய் ...... (வா வா ...)

ஆனைமுகன் தனக் கிளையோனே ... அருள்
     ஆறு முகந்தனை உடையோனே
          ஆறு படை வீடுடையோனே ... உயர்
               ஆடும் மயில் மிசை வருவோனே ...... (வா வா ...).

Singapore S Janaki
'சிங்கப்பூர்'
செல்வி ஜானகி

'Singapore'
S Janaki


(vA vA vA vA murugaiyA
     vadivE lazhagA murugaiyA
          vA vA vA vA murugaiyA
               vadivE lazhagA murugaiyA)

vELUr vaLarum murugaiyA
     vENdum varangkaL thArumaiyA
          pOrUr vaLarum murugaiyA ... unnaip
               pOtri vAzha aruLaiyA ...... (vA vA ...)

vadapazhani vaLarum murugaiyA ... nAn
     vAzhum vagaidhAn aruLaiyA
          vayalUr vaLarum murugaiyA ... unnai
               vAzhththi vAzha aruLaiyA ...... (vA vA ...)

kandha kOttaththuk kandhaiyA ... nAn
     kaLippudan vAzha aruLaiyA
          kadhir gAmath thuRai kandhaiyA ... un
               kazhaladi vAzhththa aruLaiyA ...... (vA vA ...)

thiruththaNi vaLarum murugaiyA ... nAn
     dhinamum vAzha aruLaiyA
          thiruch chendhUr vEl murugaiyA ... un
               thiruvaruL pOtra aruLaiyA ...... (vA vA ...)

pazhani malai vAzh param poruLE ... un
     padhamalar pAda paNiththiduvAi
          parama sivan thiru arut kumarA ... unnaip
               paravith thudhiththida aruL purivAi ...... (vA vA ...)

kumaramalai vAzh gurubaranE ... en
     kuRaigaLai ellAm theerppavanE
          gurubarnE siva saNmuganE ... en
               kudi muzhudhALum gurubaranE ...... (vA vA ...)

varangaLai ellAm vazhangiduvAi ... nalla
     vaLangkaLai ellAm thandhiduvAi
          vadivElaik kaiyil EndhiduvAi ... uyar
               vaLLi dheivAnaiyO duRaindhiduvAi ...... (vA vA ...)

thirumalai ellAm uRaindhiduvAi ... uyar
     thiruvElaik kaiyil EndhiduvAi
          thirup pugazh thannaik kEttiduvAi ... uyar
               thiruvaruL mAripozhindhiduvAi ...... (vA vA ...)

Anaimugan thanak kiLaiyOnE ... aruL
     ARu mugandhanai udaiyOnE
          ARu padai veedudaiyOnE ... uyar
               Adum mayil misai varuvOnE ...... (vA vA ...).
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer



 intro with mp3 audio 

cat Green  அணிந்துரை 
 Thiruppugazh 6 muththaiththaru with mp3 audio cat Green  திருப்புகழ் 6 முத்தைத்தரு 
 MurugA MurugA MurugA with mp3 audio cat Green  முருகா முருகா முருகா 
 vEluNdu vinaiyillai with mp3 audio cat Green  வேலுண்டு வினையில்லை 
 vA vA vA vA MurugaiyA with mp3 audio cat Green  வா வா வா வா முருகையா 
 SakthivEl SakthivEl with mp3 audio cat Green  சக்திவேல் சக்திவேல் 

go to top
 பட்டியல்   PDF வடிவத்தில் 
 List   in PDF format 

Poems and Songs for Lord Murugan

vA vA vA vA MurugaiyA
Songs by Singapore S. Janaki


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top