![]() | ![]() முருகனுக்கான Bajan Songs for | ![]() |
|---|
| முருகா முருகா முருகா MurugA MurugA MurugA |
![]() | ![]() | 'சிங்கப்பூர்' செல்வி ஜானகி Singapore S Janaki | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
(முருகா முருகா முருகா ...... ஓம் முருகா முருகா முருகா ...... ஓம்) வள்ளி நாயக ஷண்முகனே வடிவேல் ஏந்திடும் ஷண்முகனே (...... முருகா) வைத்தியநாதன் திருமகனே வரமதை வழங்கிடும் குருபரனே (...... முருகா) தையல் நாயகி மகிழ் மகனே ஐயன் எனையாள் ஆறுமுகனே (...... முருகா) வழிபடும் அடியவர் வாழ்ந்திடவே வழங்கிடுவாய் நல்ல அருள்தனையே (...... முருகா) குமரா முருகா குருபரனே குறைகளை எல்லாம் தீர்ப்பவனே (...... முருகா) கருணையைப் பொழிந்திடும் கந்தனே வா கதிதனைத் தந்திட வா வா வா (...... முருகா) பக்தியைத் தந்திட வா வா வா பரமகுருபரனே வா வா வா (...... முருகா) ஆண்டருள் செய்வாய் ஆறுமுகா ஆதரித் தருள்வாய் ஆறுமுகா (...... முருகா) பாடும் பணியே பணியாக பார்த்தருள் புரிவாய் பரம்பொருளே (...... முருகா) தொழுவார் துயர்களைத் துடைத்திடவே தோகை மயிலில் வந்திடுவாய் (...... முருகா) வறுமையும் பிணியும் வாட்டிடுவாய் வாழ்வில் நலமே வழங்கிடுவாய் (...... முருகா) துன்பங்கள் எல்லாம் துடைத்திடுவாய் இன்பங்கள் எல்லாம் ஈந்திடுவாய் (...... முருகா) ஆடிடும் மயிலில் அமர்ந்திடுவாய் அமைதியும் இன்பமும் அருளிடுவாய் (...... முருகா) நாட்டில் நலங்கள் பெருகிடவே நல்லருள் தன்னை நல்கிடுவாய் (...... முருகா) தெய்வ நலங்கள் பெருகிடவே தெய்வமே நல்லருள் தந்திடுவாய் (...... முருகா) உன்னை வணங்கிடும் உத்தமர்கள் உலகினில் உயர்ந்திடச் செய்திடுவாய் (...... முருகா) வாழ்ந்திடுவோரை வாழவைப்பாய் வாழ்வில் நலமே பெருகவைப்பாய் (...... முருகா) சைவமதம் என்றும் வாழ்ந்திடவே சைவமுதற் குரு அருள்புரிவாய் (...... முருகா) உன்னையே சிந்தனைச் செய்திடுவோர் உலகினில் ஏனோ உழல்கின்றார் (...... முருகா) குமரா என்றுனைக் கும்பிடுவோர் குடும்பம் தழைக்கச் செய்திடுவாய் (...... முருகா). |
![]() |
'சிங்கப்பூர்' செல்வி ஜானகி 'Singapore' S Janaki |
(murugA murugA murugA ...... Om) vaLLi nAyaga shaNmuganE vadivEl Endhidum shaNmuganE (...... murugA) vaiththiyanAdhan thirumaganE varamadhai vazhangkidum gurubaranE (...... murugA) thaiyal nAyagi magizh maganE aiyan enaiyAL ARumuganE (...... murugA) vazhibadum adiyavar vAzhndhidavE vazhangkiduvAi nalla aruLdhanaiyE (...... murugA) kumarA murugA gurubaranE kuRaigaLai ellAm theerppavanE (...... murugA) karuNaiyaip pozhindhidum kandhanE vA gadhithanaith thandhida vA vA vA (...... murugA) bakthiyaith thandhida vA vA vA paramagurubaranE vA vA vA (...... murugA) ANdaruL seivAi ARumugA Adharith tharuLvAi ARumugA (...... murugA) pAdum paNiyE paNiyAga pArththaruL purivAi paramboruLE (...... murugA) thozhuvAr thuyargaLaith thudaiththidavE thOgai mayilil vandhiduvAi (...... murugA) vaRumaiyum piNiyum vAttiduvAi vAzhvil nalamE vazhangkiduvAi (...... murugA) thunbangkaL ellAm thudaiththiduvAi inbangkaL ellAm eendhiduvAi (...... murugA) Adidum mayilil amarndhiduvAi amaidhiyum inbamum aruLiduvAi (...... murugA) nAttil nalangkaL perugidavE nallaruL thannai nalgiduvAi (...... murugA) dheiva nalangkaL perugidavE dheivamE nallaruL thandhiduvAi (...... murugA) unnai vaNangkidum uththamargaL ulaginil uyarndhidach seidhiduvAi (...... murugA) vAzhndhiduvOrai vAzhavaippAi vAzhvil nalamE pergavaippAi (...... murugA) saivamadham endrum vAzhndhidavE saivamuthaRt guru aruLpurivAi (...... murugA) unnaiyE sindhanai seidhiduvOr ulaginil Eno uzhalgindRAr (...... murugA) kumarA endrunaik kumbiduvOr kudumbam thazhaikkach seidhiduvAi (...... murugA). |
| இப்பாடகரின் ஒலிப்பதிவுகள் recordings by this singer | |
intro | |
| Thiruppugazh 6 muththaiththaru | |
| MurugA MurugA MurugA | |
| vEluNdu vinaiyillai | |
| vA vA vA vA MurugaiyA | |
| SakthivEl SakthivEl | |
| பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |