Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 106  கொள்ளித் தலையில்
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 106  koLLith thalaiyil
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 106 ... கொள்ளித் தலையில்

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
   உள்ளத் துயரை யொழித்தரு ளாயொரு கோடிமுத்தந்
      தெள்ளிக் கொழிக்குங் கடற்செந்தின் மேவிய சேவகனே
         வள்ளிக்கு வாய்த்தவ னேமயிலேறிய மாணிக்கமே.

......... சொற்பிரிவு .........

கொள்ளித் தலையில் எறும்பு அதுபோலக் குலையும் என்றன்
   உள்ளத் துயரை ஒழித்து அருளாய் ஒருகோடி முத்தம்
      தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே
         வள்ளிக்கு வாய்த்தவனே மயில் ஏறிய மாணிக்கமே!

......... பதவுரை .........

இருதலைக் கொள்ளியின் இடையில் அகப்பட்டுக் கொண்ட
எறும்பைப் போல துன்புறுகின்ற அடியேனுடைய மனத் துயரை நீக்கி
அருள்வீராக! ஒருகோடி முத்துக்களை தெள்ளிக் கொழிக்கும்படியான
கடற்கரையில் அமைந்திருக்கும் திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும்
வீரரே! வள்ளியம்மையின் அன்புக் கணவராய் வாய்த்த தலைவரே!
மயில்மீது ஏறிவரும் மாணிக்கமே!

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.109 
 WIKI_urai Song number: 106 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 106 - koLLith thalaiyil

koLLith thalaiyil eRumbu adhupOlak kulaiyum endRan
   uLLath thuyarai ozhiththu aruLAi orukOdi muththam
      theLLik kozhikkum kadal sendhil mEviya sEvaganE
         vaLLikku vAiththavanE mayil ERiya mANikkamE!

O' Lord, I am like an ant, which is caught between the two burning ends of a firebrand; please grant me the grace of removing my mind's affliction! O' Lord, You are the great victorious warrior having Your abode at ThiruchchendhUr on the seashore, where the waves are casting ashore millions of pearls. You are the beloved Lord-Spouse of VaLLi-ammai. You are the Gem of Ruby riding the peacock.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 106 - koLLith thalaiyil

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]