திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 91 கருமான் மருகனை Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 91 karumAn maruganai |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 91 ... கருமான் மருகனை கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு வருமா குலவனைச் சேவற்கைக் கோளனை வானமுய்யப் பொருமா வினைச்செற்ற போர்வேல னைக்கன்னிப் பூகமுடன் தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே. ......... சொற்பிரிவு ......... கருமால் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு வரும் ஆகுலவனைச் சேவல் கைக்கோளனை வானம் உய்யப் பொரும் மாவினைச் செற்ற போர்வேலனைக் கன்னிப் பூகம் உடன் தருமா மருவு செங்கோடனை வாழ்த்துகை சால நன்றே. ......... பதவுரை ......... கரிய திருமாலுக்கு திருமருகனாகவும் செம்மையான மான் போன்ற வள்ளியம்மையை களவு ஒழுக்கத்தால் திருமணம் புரிந்து கொண்டு வந்த வேட மூர்த்தியாகவும், சேவற்கொடியைத் திருக்கரத்தில் உடையவராகவும், விண்ணுலகத்தோர் பிழைக்குமாறு மாமரமாக உருவெடுத்து நின்ற சூரபன்மனை எதிர்த்து போரிட்டுச் சிதைத்தப் போரில்வல்ல வேலாயுதத்தையுடைய வீர மூர்த்தியாகவும் விளங்குவதோடு, இளமையான பாக்கு மரங்களும் மாமரங்களும் செழித்து வளர்ந்துள்ள திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியுள்ளவருமான திருச்செங்கோடனை [திருமுருகப் பெருமானை] வாயார வாழ்த்துதல் மிகவும் நல்லது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.95 pg 4.96 WIKI_urai Song number: 91 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 91 - karumAn maruganai karumAn(l) maruganaich chemmAn magaLaik kaLavukoNdu varum Agulavanaich sEval kaikkOLanai vAnam uiyyap porum mAvinaich chetRa pOrvElanaik kannip pUgam udan tharumA maruvu sengkOdanai vAzhththugai sAla nandRE. Lord ThirumurugapperumAn is the divine nephew of dark-hued Lord ThirumAl; He is the Hunter-Lord, who wedded red-deer-like VaLLi-ammai secretly. He holds in His Sacred Hand the flag of rooster; He is the bearer of the warring lance, with which He fought against the demon SUrapanman, who stood in the guise of a mango-tree, and demolished him, so that the celestial beings could be saved from his tyranny. It is very good to praise Lord ThiruchchengkOdan, who abides on the hill of ThiruchchengkOdu, endowed with young areca-palms and mango-trees. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |