திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 90 மாலோன் மருகனை Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 90 mAlOn maruganai |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 90 ... மாலோன் மருகனை மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற் சேலார் வயற்பொழிற் செங்கோடனைச்சென்று கண்டுதொழ நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே. ......... சொற்பிரிவு ......... மாலோன் மருகனை மன்று ஆடி மைந்தனை வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில் சேல் ஆர் வயல் பொழில் செங்கோடனைச் சென்று கண்டு தொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே! ......... பதவுரை ......... திருமாலின் திருமருகரை, கனக சபையில் திருநடனம்புரியும் சிவபெருமானின் திருப்புதல்வரை, தேவர்களுக்கும் உயர்வான தேவ தேவரை உண்மை அறிவின் வடிவாகிய முழுமுதற்கடவுளை, இவ்வுலகில் கெண்டை மீன்கள் நிறைந்த வயல்களும் சோலைகளும் சூழ்ந்த திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக்கும் திருமுருகப் பெருமானை அவருடைய திருக்கோயிலுக்குச் சென்று கண்குளிரக் கண்டு வணங்கும் பொருட்டு அந்தப் பிரம்மதேவன் அடியேனுக்கு நாலாயிரம் கண்களைப் படைக்கவில்லையே! |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.94 pg 4.95 WIKI_urai Song number: 90 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
கௌமாரம் குழுவினர் The Kaumaram Team பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 90 - mAlOn maruganai mAlOn maruganai mandRu Adi maindhanai vAnavarkku mElAna dhEvanai meinjAna dheivaththai mEdhiniyil sEl Ar vayal pozhil sengkOdanaich chendRu kaNdu thozha nAlAyiram kaN padaiththilanE andha nAnmuganE! ThirumurugapperumAn is the divine nephew of Lord ThirumAl; He is the beloved Son of Lord SivaperumAn, who is performing the sacred cosmic dance in the golden arena; He is the Supreme Lord of all the celestial beings; He is the Supreme Lord of Real-Wisdom; and He abides at ThiruchchengkOdu, which is surrounded by paddy fields full of carp-fish, and umbrageous groves. Alas, the four-faced BrahmA has not endowed me with four-thousand eyes for me to go to the sacred shrine of the Lord ChengkOdan to have His sacred vision and worship Him there! |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |