Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 89  பங்கேருகன் எனை
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 89  pangkErugan enai
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 89 ... பங்கேருகன் எனை

பங்கே ருகனெனைப் பட்டோ லையிலிடப் பண்டுதளை
   தங்காலி லிட்ட தறிந்தில னோதனி வேலெடுத்துப்
      பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்பவரும்
         எங்கோ னறியி னினிநான் முகனுக் கிருவிலங்கே.

......... சொற்பிரிவு .........

பங்கேருகன் எனைப் பட்டு ஓலையில் இட பண்டு தளை
   தம் காலில் இட்டது அறிந்திலனோ? தனி வேல் எடுத்துப்
      பொங்கு ஓதம் வாய்விடப் பொன் அம் சிலம்பு புலம்ப வரும்
         எம் கோன் அறியின் இனி நான்முகனுக்கு இரு விலங்கே.

......... பதவுரை .........

தாமரை மலரில் வாழும் பிரம்மதேவன் அடியேனைத் தனது விதியேட்டில்
எழுத முற்காலத்தில் தமது காலில் விலங்கு பூட்டியதை அறியானோ?
ஒப்பற்ற வேலாயுதத்தை எடுத்துப் பொங்கும்படியான கடலானது
வாய் விட்டு அலறவும் பொன்னுருவான கிரௌஞ்சமலை கதறவும்
வருகின்ற எமது இறைவனாகிய திருமுருகப்பெருமான் அறிவாராயின்
இனிமேல் நான்கு முகங்களுடைய பிரம்மதேவனுக்கு இரண்டு
விலங்குகள் பூட்டப்படும்!

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.93   pg 4.94 
 WIKI_urai Song number: 89 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 89 - pangkErugan enai

pangkErugan enaip pattu Olaiyil ida paNdu thaLai
   tham kAlil ittadhu aRindhilanO? thani vEl eduthhthup
      pongku Odham vAividap pon am silambu pulamba varum
         em kOn aRiyin ini nAnmuganukku iru vilangkE.

O' Lord, is the lotus-flower-dwelling BrahmA who recorded my fate in his book of destiny, not aware that his feet were chained in the ancient time [for not knowing the meaning of the PraNava-mantrA]? My God ThirumurugapperumAn had taken the incomparable lance and hurled it at the demons, thereby causing the sea to scream aloud, and the krauncha-hill to cry aloud; if the Lord comes to know what has befallen me, the four-faced BrahmA will have his feet fastened with two fetters!
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 89 - pangkErugan enai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]