Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 88  வணங்கித் துதிக்க
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 88  vaNangkith thudhikka
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 88 ... வணங்கித் துதிக்க

வணங்கித் துதிக்க அறியா மனித ருடனிணங்கிக்
   குணங்கெட்ட துட்டனை யீடேற்றுவாய் கொடி யுங்கழுகும்
      பிணங்கத் துணங்கை யலகை கொண்டாடப் பிசிதர்தம்வாய்
         நிணங்கக்க விக்ரம வேலா யுதந்தொட்ட நிர்மலனே.

......... சொற்பிரிவு .........

வணங்கித் துதிக்க அறியா மனிதருடன் இணங்கிக்
   குணம் கெட்ட துட்டனை ஈடேற்றுவாய் கொடியும் கழுகும்
      பிணங்கத் துணங்கை அலகை கொண்டாடப் பிசிதர்தம் வாய்
         நிணம் கக்க விக்கிரம வேலாயுதம் தொட்ட நிர்மலனே.

......... பதவுரை .........

தேவரீரின் திருவடிகளைப் பணிந்து திருப்புகழைப் பாடிப் பரவுவதற்கு
அறியாத மனிதர்களோடு சேர்ந்து நற்குணம் அற்றுப் போன தீயவனாகிய
அடியேனைக் கடைத் தேறச்செய்து அருள்புரிவீராக! [போர்க்களத்தில்]
காக்கைகளும் கழுகுகளும் ஒன்றோடொன்று சண்டையிட்டுக்
கொள்ளவும் பேய்கள் துணங்கைக் கூத்தினை மகிழ்ந்து ஆடவும்,
அரக்கர்கள் தம் வாயிலிருந்து கொழுப்பினை உமிழவும் வீரம்பொருந்திய
வேலாயுதத்தை அவர்கள் மீது விடுத்து அருளிய நிர்மலனே!

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.92   pg 4.93 
 WIKI_urai Song number: 88 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 88 - vaNangkith thudhikka

vaNangkith thudhikka aRiyA manidharudan iNangkik
   guNam ketta thuttanai eedEtRuvAi kodiyum kazhugum
      piNangkath thuNangkai alagai koNdAda pisdhartham vAi
         niNam kakka vikrama vElAyudham thotta nirmalanE.

O' Lord, I am a characterless wicked person, because I associated with people, who did not know how to pay homage to Your Sacred Feet, and sing Your sacred praise. Please grant me the grace of redeeming me from all evil. [On the battle-field] the crows and the eagles fought against each other, and the goblins celebrated merrily by dancing the devil-dance, for You, as the immaculate Supreme Being, hurled the heroic lance at the demons, causing the ejection of fat from their mouths.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 88 - vaNangkith thudhikka

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]