![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 86 வேலாயுதன் சங்கு Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 86 vElAyudhan sangku |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் mp3 ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 86 ... வேலாயுதன் சங்கு வேலா யுதன்சங்கு சக்ராயு தன்விரிஞ் சன்னறியாச் சூலா யுதன் தந்த கந்தச் சுவாமி சுடர்க்குடுமிக் காலா யுதக்கொடி யோனரு ளாய கவசமுண்டென் பாலா யுதம்வரு மோயம னோடு பகைக்கினுமே. ......... சொற்பிரிவு ......... வேலாயுதன் சங்கு சக்கராயுதன் விரிஞ்சன் அறியாச் சூலாயுதன் தந்த கந்தச்சுவாமி சுடர்க்குடுமிக் கால் ஆயுத கொடியோன் அருள் ஆய கவசம் உண்டு என் பால் ஆயுதம் வருமோ யமனோடு பகைக்கினுமே. ......... பதவுரை ......... வேலாயுதத்தை உடைய கந்தப்பெருமான், சங்கையும் சக்கராயுத்தையும் ஆயுதமாகக் கொண்டுள்ள திருமாலும் பிரம்மதேவனும் அறிந்து கொள்ள முடியாத திரிசூலத்தை உடைய சிவபெருமான் பெற்றருளிய திருமைந்தர் ஆவார். ஒளிவீசும் உச்சிக் கொண்டையையும் ஆயுதமாகப் பயன்படுகின்ற காலையும் உடைய சேவலைக் கொடியாகக்கொண்ட கந்தப்பெருமானது திருவருளாகிய கவசம் அடியேனின் உடலில் இருக்கின்றது. [ஆதலால்] இயமனோடு பகைத்தாலும் என்னிடத்தில் அவனுடைய ஆயுதம் வருமோ? |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.91 WIKI_urai Song number: 86 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 86 - vElAyudhan sangku vElAyudhan sangku sakrAyudhan virinjan aRiyAch sUlayudhan thandha kandhasuvAmi sudarkkudumik kAl Ayudha kodiyudaiyOn aruL Aya kavasam uNdu en pal Ayudham varumO yamanOdu pagaikkinumE. The lance-bearer Lord KandhapperumAn is the beloved Son of the trident-bearer Lord SivaperumAn, who could not be fathomed either by the conch-and-discus-bearer Lord ThirumAl, or by Lord BrahmA. I have in my body the gracious shield of protection of Lord KandhapperumAn, who is bearer of the flag of the brightly-crested rooster, which uses its leg as a weapon. [Therefore] will the weapon of Yaman [death] come against me even if I were to offend him? [It will not!] |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |