திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 85 காட்டில் குறத்தி Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 85 kAttil kuRaththi |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 85 ... காட்டில் குறத்தி காட்டிற் குறத்தி பிரான்பதத் தேகருத் தைப்புகட்டின் வீட்டிற் புகுதன் மிகவெளிதே விழிநாசிவைத்து மூட்டிக் கபாலமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளே ஓட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே. ......... சொற்பிரிவு ......... காட்டில் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின் வீட்டில் புகுதன் மிக எளிதே விழி நாசிவைத்து மூட்டிக் கபால மூலாதார நேர் அண்ட மூச்சை உள்ளே ஓட்டிப்பிடித்து எங்கும் ஒடாமற் சாதிக்கும் யோகிகளே. ......... பதவுரை ......... காட்டில் வாழும் குறவர் மடந்தையாகிய வள்ளியம்மையாரின் தலைவராகிய திருமுருகப்பெருமானின் திருவடிகளின் மீது உள்ளத்தைச் செலுத்தினால் முக்தி உலகிற்கு செல்லுதல் மிகவும் எளிதான செயலாகும், [அவ்வாறு செய்யாமல்] கண் பார்வையை மூக்கின் நுனியில் வைத்து, கபாலத்திற்கும் மூலாதாரத்திற்கும் நேரே பொருந்துமாறு சுவாசத்தை இழுத்து அப்பிராணவாயு வேறு எங்கும் போய் விடாமல் பிடித்துவைக்கும் சாதனையைப் புரியும் யோகிகளே! |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.90 pg 4.91 WIKI_urai Song number: 85 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 85 - kAttil kuRaththi kAttil kuRaththi pirAn padhaththE karuththaip pugattin veettil pugudhan miga eLidhE vizhi nAsivaiththu mUttik kabAla mUlAdhAra nEr aNda mUchchai uLLE Ottippidiththu engkum OdAmaRt sAdhikkum yOgigaLE. Directing one's mind to the Sacred Feet of ThirumurugapperumAn, Who is the Lord of the hunter's maiden VaLLi-ammai dwelling in the woods, is an easy way of reaching the world of mukthi [liberation], O' YOgis, instead of performing the feat of directing the eyesight to the point of nose, drawing in and holding up the breath between the skull and mUlAdhAram ['the first region of the body'] without letting it go anywhere else! |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |