Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 84  மைவரும் கண்டத்தர்
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 84  maivarum kaNdaththar
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 84 ... மைவரும் கண்டத்தர்

மைவருங் கண்டத்தர் மைந்தகந் தாவென்று வாழ்த்துமிந்தக்
   கைவருந் தொண்டன்றி மற்றறி யேன்கற்ற கல்வியும் போய்ப்
      பைவருங் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்
         ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன் னடைக்கலமே.

......... சொற்பிரிவு .........

மைவரும் கண்டத்தர் மைந்த 'கந்தா' என்று வாழ்த்தும் இந்தக்
   கைவரும் தொண்டு அன்றி மற்று அறியேன் கற்ற கல்வியும் போய்ப்
      பை வரும் கேளும் பதியும் கதறப் பழகி நிற்கும்
         ஐவரும் கைவிட்டு மெய்விடும்போது உன் அடைக்கலமே.

......... பதவுரை .........

ஆலகால விடத்தை உண்டதனால் கரிய நீல நிறமாகிய கழுத்தை உடைய
சிவபெருமானது திருமைந்தராகிய 'கந்தப்பெருமானே!' என்று துதித்து
வாழ்த்துகின்ற இந்தப் பழக்கத்திற்கு வந்த தொண்டினை அல்லாமல் வேறு
ஒன்றையும் அறிந்தேனில்லை. [அடியேன்] கற்ற கல்வியும் நீங்கி,
துன்பமுறும் சுற்றத்தினரும் ஊராரும் ஓலமிட்டு அழ, அடியேன் நன்றாகப்
பழகியுள்ள ஐம்பொறிகளும் என்னைக் கைவிட்டுச் செல்ல, அடியேன்
உயிரும் உடலை விட்டுப் போகும் காலத்து தேவரீரின் அடைக்கலமே
ஆவேன்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.88   pg 4.89 
 WIKI_urai Song number: 84 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 84 - maivarum kaNdaththar

maivarum kaNdaththar maindha 'kandhA' endRu vAzhththum indhak
   kaivarum thoNdu andRi matRu aRiyEn katRa kalviyum pOip
      pai varum kELum padhiyum kadhaRap pazhagi niRkkum
         aivarum kaivittu meividumbOdhu un adaikkalamE.

O' Lord, I do not know any other way of serving You except to praise You as 'Lord KandhA', the beloved Son of Lord SivaperumAn of dark-hued-neck [because of swallowing the deadly AlakAla-poison in order to save all beings]. When my learning departs, my sorrowful relatives and village-folk cry aloud, my well-known acquaintances of five-sensory-organs desert me, and my soul also leaves the body, I can only seek refuge in Your Lordship.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 84 - maivarum kaNdaththar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]