Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 66  நீர்க் குமிழிக்கு
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 66  neerk kumizhikku
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 66 ... நீர்க் குமிழிக்கு

நீர்க் குமிழிக்கு நிகரென்பர் யாக்கைநில் லாதுசெல்வம்
   பார்க்கு மிடத்தந்த மின்போலு மென்பர் பசித்துவந்தே
      ஏற்கு மவர்க்கிட வென்னினெங் கேனு மெழுந்திருப்பார்
         வேற் குமரற் கன்பிலாதவர் ஞான மிகவுநன்றே.

......... சொற்பிரிவு .........

நீர்க் குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை நில்லாது செல்வம்
   பார்க்கும் இடத்து அந்த மின்போலும் என்பர் பசித்துவந்தே
      ஏற்கும் அவர்க்கு இட என்னின் எங்கேனும் எழுந்திருப்பார்
         வேல் குமரற்கு அன்பு இலாதவர் ஞானம் மிகவும் நன்றே!

......... பதவுரை .........

'இந்த உடலானது நீரின்மீது தோன்றி மறையும் குமிழிக்கு ஒப்பாகும்'
என்றும், 'பொருட்செல்வம் என்றென்றும் நிலைபெற்றிராது; ஆராய்ந்து
பார்க்கும்போது அப்பொருட்செல்வம் மின்னலைப்போன்றது' என்றும்
கூறுவார்கள் [அறிஞர்கள்]. மிகவும் பசியால் வாடி வந்து, 'அன்னமிடுங்கள்'
என்று யாசிப்பவர்களுக்கு 'ஏதாவது கொடுங்கள்' என்று சொன்னால்
எங்காவது போய்விடலாம் என்று எழுந்து போய்விடுவார்கள் [சிலர்].
வேலாயுதத்தையுடைய திருமுருகப்பெருமான்பால் பக்தி இல்லாத
அத்தகைய மனிதர்களது [போலி] 'ஞானம்' மிகவும் நன்றாக இருக்கின்றது!

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.71   pg 4.72 
 WIKI_urai Song number: 66 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 66 - neerk kumizhikku

neerk kumizhikku nigar enbar yAkkai nillAdhu selvam
   pArkkum idaththu andha minpOlum enbar pasiththuvandhE
      ERkkum avarkku ida ennin enggEnum ezhundhiruppAr
         vEl kumaraRku anbu ilAdhavar njAnam migavum nandRE!

[Learned people say]: 'This body of ours is like a bubble on water which appears and disappears'; 'Material wealth does not last for ever; indeed, if you examine it further, it is like a flash of lightning!' If one were to tell someone, 'please give something to a hungry person who asks for food', that someone will quickly rise and leave the place to go elsewhere. The 'wisdom' of such people, who have no sincere love for ThirumurugapperumAn, who has the lance, seems to be 'very good' [though such 'wisdom' is of only a false kind]!
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 66 - neerk kumizhikku

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2017-2030

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact us if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by us (the owners and webmasters of www.kaumaram.com),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
we are NOT responsible for any damage caused by downloading any item from this website.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[xhtml] 2503.2022 [css]