Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 67  பெறுதற்கு அரிய
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 67  peRuthaRku ariya
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 67 ... பெறுதற்கு அரிய

பெறுதற் கரிய பிறவியைப் பெற்றுநின் சிற்றடியைக்
   குறுகிப் பணிந்து பெறக்கற் றிலேன்மத கும்பகம்பத்
      தறுகட் சிறுகட் சங்க்ராம சயில சரசவல்லி
         இறுகத் தழுவுங் கடகா சலபன் னிருபுயனே.

......... சொற்பிரிவு .........

பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும் நின் சிறு அடியைக்
   குறுகிப்பணிந்து பெறக் கற்றிலேன் மதம் கும்பம் கம்பத்
      தறுகண் சிறுகண் சங்கிராம சயில சரசவல்லி
         இறுகத் தழுவும் கடக அசல பன்இரு புயனே.

......... பதவுரை .........

பெறுவதற்கு மிகவும் அருமையான இந்த மானிடப் பிறவியைப் பெற்றும்
தேவரீரது சிறிய திருவடிகளை அடைந்து தொழுது முக்தியைப்
பெறுவதற்கு கற்றேன் இல்லை. மதநீர் ஒழுகுவதும் கும்பஸ் தலத்தை
உடையதும் அசைந்துகொண்டே இருக்கும் தன்மையுடையதும்
அஞ்சாமையையும் சிறிய கண்களையும் உடையதுமான யானையை
வாகனமாகக் கொண்டு விளங்கும் போர்வீரரே, மலையில் பிறந்து
வளர்ந்தவரும் விளையாடல் புரிபவரும் கொடிபோன்றவருமாகிய
வள்ளியம்மையாரின் மார்பினை இறுகத் தழுவும், வீரக் கடகங்களை
அணிந்துள்ளனவும் மலைபோல் விளங்குவதுமாகிய பன்னிரண்டு
புயங்களை உடையவரே!

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.72   pg 4.73 
 WIKI_urai Song number: 67 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 67 - peRuthaRku ariya

peRuthaRku ariya piRaviyaip petRum nin siRu adiyaik
   kuRugippaNindhu peRak katRilEn madham kumbam kambath
      tharukaN siRukaN sangkrAma sayila sarasavalli
         iRugath thazhuvum kadaga asala pan iru puyanE.

O' Lord, even though I have been born as a human being, which is indeed a rare achievement, I have not learnt how to attain liberation by reaching and worshipping Your sacred little feet. You are the Warrior-Lord, riding a rutting, fearless, and moving elephant with frontal globes and slender eyes; and You have rock-like twelve-shoulders, adorned with armlets, which closely embrace the mountain-born-creeper-like-and-playful VaLLi-ammai!
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 67 - peRuthaRku ariya

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]