திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 65 வெட்டும் கடா Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 65 vettum kadA |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 65 ... வெட்டும் கடா வெட்டுங் கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடுங் கயிற்றாற் கட்டும் பொழுது விடுவிக்க வேண்டுங் கராசலங்கள் எட்டுங் குலகிரி யெட்டும்விட் டோடவெட் டாதவெளி மட்டும் புதைய விரிக்குங் கலாப மயூரத்தனே. ......... சொற்பிரிவு ......... வெட்டும் கடா மிசைத்தோன்றி வெம் கூற்றன் விடும் கயிற்றால் கட்டும்பொழுது விடுவிக்கவேண்டும் கர அசலங்கள் எட்டும் குலகிரி எட்டும் விட்டு ஓட எட்டாத வெளி மட்டும் புதைய விரிக்கும் கலாப மயூரத்தனே! ......... பதவுரை ......... வெட்டுகின்ற எருமைக் கடாவின் மீது வருகின்ற வெம்மையாகிய இயமன் வீசுகின்ற பாசக் கயிற்றினால் அடியேனைக் கட்டிப்பிடிக்கும்போது தேவரீர் தோன்றி விடுவித்து காப்பாற்றியருளவேண்டும். கைகளையுடைய மலைபோன்ற திக்கு யானைகள் எட்டும் குலமலைகள் எட்டும் தத்தம் இடம் விட்டு விலகும்படி கண்களுக்கு எட்டாத ஆகாய வெளி வரைக்கும் மறையும்படி விரிக்கின்ற தோகையையுடைய மயிலை வாகனமாக உடையவரே! |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.70 pg 4.71 WIKI_urai Song number: 65 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 65 - vettum kadA vettum kadA misaiththOndRi vem kUtRan vidum kayitRAl kattumbozhudhu viduvikkavENdum kara asalangkaL ettum kulagiri ettum vittu Oda ettAdha veLi mattum pudhaiya virikkum kalAba mayUraththanE! O' Lord, You must graciously come and protect me when death comes riding the male buffalo with slashing horns, throws his noose and catches hold of me. You are riding the peacock whose feathery-tail spreads and covers the whole outer space of the sky beyond the reach of one's vision, so much so that the mountain-like elephants with arms at the eight directions of the universe, and the eight legendary mountains of the world have shifted from their respective location. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |