Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 63  பாதித் திருவுரு
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 63  pAdhith thiruvuru
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 63 ... பாதித் திருவுரு

பாதித் திருவுருப் பச்சென் றவர்க்குத்தன் பாவனையைப்
   போதித்த நாதனைப் போர்வேல னைச்சென்று போற்றியுய்யச்
      சோதித்த மெய்யன்பு பொய்யோ அழுது தொழுதுருகிச்
         சாதித்த புத்திவந் தெங்கே யெனக்கிங்ஙன் சந்தித்ததே.

......... சொற்பிரிவு .........

பாதித் திருவுரு பச்சென்றவர்க்குத் தன்பாவனையைப்
   போதித்த நாதனைப் போர்வேலனைச் சென்று போற்றி உய்யச்
      சோதித்த மெய்யன்பு பொய்யோ? அழுது தொழுது உருகிச்
         சாதித்த புத்தி வந்து எங்கே எனக்கு இங்ஙன் சந்தித்ததே?

......... பதவுரை .........

தமது திருமேனியின் இடப் பாகத்தில் உமாதேவியார் உள்ளதால் அந்தப்
பகுதி பச்சை நிறமாகக் காட்சியளிக்கும் சிவபெருமானுக்குப் பிரணவ
மந்திரத்தை உபதேசித்தவரும் வேலாயுதத்தை உடையவருமான
திருமுருகப்பெருமானை அவர் சந்நிதியை அடைந்து போற்றி வணங்கி
உய்வுபெறவேண்டி சோதிக்கப் பெற்ற அடியேனின் உண்மையான
அன்பு பொய்யாகுமோ? அழுது, தொழுது, உள்ளம் உருகி உறுதி செய்த
அறிவானது இவ்விடத்தில் அடியேனுக்கு எவ்வாறு வந்தது?

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.69 
 WIKI_urai Song number: 63 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 63 - pAdhith thiruvuru

pAdhith thiruvuru pachchendRavarkkuth thanbAvanayaip
   bOdhiththa nAdhanaip pOrvElanaich sendRu pOtRi uiyyach
      sOdhiththa meiyanbu poiyO? azhudhu thozhudhu urugich
         sathitha budhthi vandhu engkE enakku inggan santhiththadhE?

ThirumurugapperumAn, who bears the warring-lance, expounded the PraNava-mantrA to Lord SivaperumAn, the left-half of whose sacred body is of greenish complexion [because of the sacred presence therein of Goddess UmAdhEvi]. Is the tested sincere love, shown by me when praising Lord ThirumurugapperumAn in His sacred presence for my soul's liberation, a false-one? How did I get the intellect, which proved my sincerity when I wept, and worshipped the Lord with my melting-heart in this place?
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 63 - pAdhith thiruvuru

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]