![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 52 சிகர அத்ரி கூறு Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 52 sigara athri kURu |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் mp3 ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 52 ... சிகர அத்ரி கூறு சிகராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற் பகரார்வமீ பணி பாசசங் க்ராம பணாமகுட நிகராட் சமபட்ச பட்சி துரங்க ந்ருபகுமரா குகராட் சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே. ......... சொற்பிரிவு ......... சிகர அத்ரி கூறு இட்ட வேலும் செம் சேவலும் செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ பணி பாச சங்க்ராம பணா மகுட நிகராட்சம் பட்ச பட்சி துரங்க ந்ருப குமரா குக ராட்சச பட்ச விட்சோப தீர குணதுங்கனே. ......... பதவுரை ......... சிகரங்களையுடைய கிரௌஞ்ச மலையைப் பிளந்த வேலாயுதத்தையும் செம்மையான சேவற்கொடியையும் செந்தமிழ்ப் பாடல்களால் பாடித் துதிக்கின்ற விருப்பத்தை அடியேனுக்குக் தந்தருள்வீராக. பாசக் கயிறு போன்றதும் போர் செய்வதற்குரியதுமாகிய பாம்பின் படத்தின் மகுடங்களைப் பொடியாக்குவதற்குரிய சிறகுகளுடன் கூடிய குதிரை போன்ற மயிலை வாகனமாக உடையவரே, தலைவரே, குமாரக் கடவுளே, குகையில் வசிப்பவரே, அரக்கர்கள் மீது வெறுப்புடையவரே, தைரியமானவரே, தூய அருட்குணத்தை உடையவரே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.57 pg 4.58 pg 4.59 WIKI_urai Song number: 52 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 52 - sigara athri kURu sigara athri kURu itta vElum sem sEvalum senthamizhAl pagar Arvam ee paNi pAsa sangkrAma paNA maguda nigarAtcham patcha patchi thurangka nruba kumarA guga rAtchasa patcha vitchOba theera kuNathungkanE. O' Lord, please grant me the wish to praise Your lance, which split the krauncha-hill with towers, and Your reddish rooster-flag with songs of classical Tamil language. You have the horse-like peacock with wings of feathers, which can reduce the noose-and-war-like-serpent's hoods to dust. O' Lord, You are our Divine King; You are Kumaran; You are abiding in caves of hills [hearts of devotees]; You bear hatred against the demons; You are the most daring one; and You have the pure characteristic of being gracious to Your devotees. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |