Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 51  மலை ஆறு கூறு
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 51  malai ARu kURu
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 51 ... மலை ஆறு கூறு

மலையாறு கூறெழ வேல்வாங்கி னானை வணங்கியன்பின்
   நிலையான மாதவஞ் செய்குமி னோநும்மை நேடிவருந்
      தொலையா வழிக்குப் பொதிசோறு முற்ற துணையுங்கண்டீர்
         இலையா யினும்வெந்த தேதா யினும்பகிர்ந் தேற்றவர்க்கே.

......... சொற்பிரிவு .........

மலை ஆறு கூறு எழ வேல்வாங்கினானை வணங்கி அன்பின்
   நிலையான மாதவம் செய்குமின் நும்மை நேடிவரும்
      தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்றதுணையும் கண்டீர்
         இலையாயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்து ஏற்றவர்க்கே.

......... பதவுரை .........

கிரௌஞ்சமலையின் நடுப்பாகம் பிளவுபட்டு அங்கு வழிதோன்றுமாறு
வேலாயுதத்தை ஏவியருளிய திருமுருகப்பெருமானை அன்புடன் வணங்கி,
[யாசிப்பவர்களுக்குத் தானம் செய்வதாகிய] நிலையான பெருந்தவத்தைச்
செய்வீர்களாக. [இத்தகைய தவத்தின் பயனானது], உங்களைத் தேடிவரும்
தொலையாத [இறுதியாத்திரை] வழிக்கு கட்டமுதுபோன்ற பொருத்தமான
துணையாக அமையும் என்பதை உணர்வீர்களாக; உம்மிடம் வந்து
யாசித்தவர்களுக்கு இலைக் கறியாயினும், வெந்தது எதுவாயினும்,
பகிர்ந்து கொள்ளுங்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.56   pg 4.57 
 WIKI_urai Song number: 51 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 51 - malai ARu kURu

malai ARu kURu ezha vElvAngkinAnai vaNangki anbin
   nilaiyAna mAthavam seigumin nummai nEdivarum
      tholaiyA vazhikkup pothisORum utRathuNaiyum kaNdeer
         ilaiyAyinum vendhadhu EdhAyinum pagirndhu EtRavarkkE.

Lord ThirumurugapperumAn hurled the lance to split the krauncha-hill, and make a passage through the hill. While worshipping the Lord with love, you'd better do the eternal penance of being charitable to others; You will realize that the result of such charity will be, indeed, the right kind of help, like a packet of cooked-rice, along the never-ending road of [last-journey], which will be looking for you; Even if it is only a meal of vegetables or any boiled-food, you'd better share it with others in need.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 51 - malai ARu kURu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]