திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 50 படிக்கும் திருப்புகழ் Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 50 padikkum thiruppugazh |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 50 ... படிக்கும் திருப்புகழ் படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற் பிடிக்கும் பொழுதுவந் தஞ்லென் பாய்பெரும் பாம்பினின்று நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை இடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே. ......... சொற்பிரிவு ......... படிக்கும் திருப்புகழ் போற்றுவன்; கூற்றுவன் பாசத்தினால் பிடிக்கும்பொழுது வந்து 'அஞ்சல்' என்பாய், பெரும்பாம்பில் நின்று நடிக்கும் பிரான் மருகா, கொடும் சூரன் நடுங்க வெற்பை இடிக்கும் கலாபத் தனிமயில் ஏறும் இராவுத்தனே. ......... பதவுரை ......... தேவரீரின் திருப்புகழை எப்பொழுதும் போற்றி ஓதுபவன் அடியேன். [எனவே] இயமன் வந்து பாசக் கயிற்றை வீசி அடியேனின் உயிரைப் பிடிக்கும் வேளையில் எழுந்தருளிவந்து, 'அஞ்சாதே' என்று கூறி அடியேனை ஆட்கொள்வாயாக. [காளிங்கன் என்னும்] பெரிய பாம்பின் படத்தின்மீது நின்று கூத்தாடும் திருமாலின் திருமருகரே! கொடிய சூரபன்மன் நடுங்குமாறு கிரௌஞ்சமலையைத் தன் பெரிய தோகையால் இடித்த தனியொரு மயிலின்மீது ஏறிவரும் சேவகரே! |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.55 pg 4.56 WIKI_urai Song number: 50 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 50 - padikkum thiruppugazh padikkum thiruppugazh pOtRuvan; kUtRuvan pAsaththinAl pidikkumpozhudhu vandhu 'anjal' enbAi, perumpAmbil nindRu nadikkum pirAn marugA, kodum sUran nadunga veRppai idikkum kalAbath thanimayil ERum irAvuththanE. O' Lord, I am a devotee, who always recites Your sacred praise fervently. [Therefore] at the time when the messenger of death throws the noose around my neck to catch hold of my life, please do come and say 'Do not be afraid!' and kindly accept me as Your devotee. You are the nephew of Lord ThirumAl, who dances on the hood of the great serpent [KAlingan]! O' Warrior-Lord, You are riding the unique peacock with great tail-feathers that shattered the krauncha-hill with such force as to make the demon SUrapanman shiver. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |