Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 43  கவியால் கடல்
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 43  kaviyAl kadal
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 43 ... கவியால் கடல்

கவியாற் கடலடைத் தோன்மரு கோனைக் கணபணக்கட்
   செவியாற் பணியணி கோமான் மகனைத் திறலரக்கர்
      புவியார்ப் பெழத்தொட்ட போர்வேன் முருகனைப் போற்றியன்பாற்
         குவியாக் கரங்கள்வந் தெங்கே யெனக்கிங்ஙன் கூடியவே.

......... சொற்பிரிவு .........

கவியால் கடல் அடைத்தோன் மருகோனைக் கணபணக் கட்-
   செவியால் பணிஅணி கோமான் மகனைத் திறல் அரக்கர்
      புவிஆர்ப்பு எழத் தொட்ட போர்வேல் முருகனைப்போற்றி அன்பால்
         குவியாக் கரங்கள் வந்து எங்கே எனக்கு இங்ஙன் கூடியவே.

......... பதவுரை .........

வானர வீரர்களைக்கொண்டு கடலில் அணைகட்டி அமைந்த
[இராமபிரானாக அவதரித்த] திருமாலின் திருமருகராகிய திருமுருகப்
பெருமானைக் கூட்டமான படங்களைத் தலைகளாகக் கொண்ட
பாம்பை அணிகலனாக அணிந்துள்ள சிவபெருமானின் திருமைந்தரை,
வலியுடைய அரக்கர்கள் வாழும் உலகங்கள் எல்லாம் அச்சத்தால்
கதறுதலால் பெரிய ஒலியுண்டாக ஏவிய போர்த்தொழிலில் வல்ல
வேலாயுதத்தையுடைய திருமுருகப்பெருமானை அன்போடு
வணங்கிக் கும்பிடாத கைகள் அடியேனுக்கு எவ்விதம் இங்கு
வந்து சேர்ந்தன?

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.48   pg 4.49 
 WIKI_urai Song number: 43 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 43 - kaviyAl kadal

kaviyAl kadal adaiththOn marugOnaik kaNapaNak kat-
   cheviyAl paNi aNi kOmAn maganaith thiRal arakkar
      puvi Arppu ezhath thotta pOrvEn muruganaippOtRi anbAl
         kuviyAk karangkaL vandhu engkE enakku inggan kUdiyavE.

O' Lord, You are the nephew of Lord ThirumAl, who [as Sri RAmA] had the causeway built across the sea [to LankA] with the help of simian warriors; You are the Divine Son of Lord SivaperumAn, who is adorned with a serpent with a cluster of hoods as heads; You are the Lord who hurled the war-worthy lance against the mighty demons causing them to scream with fear with a great roaring noise in all the worlds. How did I ever get these hands of mine, which do not join together to make obeisance, and worship Lord ThirumurugapperumAn with love?
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 43 - kaviyAl kadal

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]