![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 42 நிணம் காட்டும் Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 42 niNam kAttum |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் mp3 ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 42 ... நிணம் காட்டும் நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்கநிற்குங் குணங்காட்டி யாண்ட குருதே சிகனங் குறச்சிறுமான் பணங்காட்டு மல்குற் குருகுங் குமரன் பதாம்புயத்தை வணங்காத் தலைவந்தி தெங்கே யெனக்கிங்ஙன் வாய்த்ததுவே. ......... சொற்பிரிவு ......... நிணம் காட்டும் கொட்டிலைவிட்டு ஒரு வீடு எய்தி நிற்க நிற்கும் குணம் காட்டி ஆண்ட குருதேசிகன் அம் குறச் சிறுமான் பணம் காட்டு அல்குற்கு உருகும் குமரன் பத அம்புயத்தை வணங்காத்தலை வந்து இது எங்கே எனக்கு இங்ஙன் வாய்த்ததுவே? ......... பதவுரை ......... கொழுப்புடன் கூடிய தசைகள் மிகுதியாகத் தோன்றுகின்ற தொழுவமாகிய உடலைவிட்டு அகன்று ஒப்பற்ற முக்தியை அடைந்து நிலைபெற்று இருத்தற்குரிய வழியைக் காட்டியருளி அடியேனை ஆட்கொண்ட குருநாதரும், குறவர் குலத்தில் தோன்றிய அழகிய இளமான் போன்ற வள்ளியம்மையின் பொருட்டு உள்ளம் உருகுகின்றவருமான திருமுருகப்பெருமானின் தாமரை மலர் போன்ற திருப்பாதங்களைப் பணியாத தலையானது எவ்விதமாக வந்து அடியேனுக்குக் கிடைத்தது? |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.47 pg 4.48 WIKI_urai Song number: 42 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 42 - niNam kAttum niNam kAttum kottilaivittu oru veedu eiydhi niRkka niRkkum guNam kAtti ANda gurudhEsigan am kuRach siRumAn paNam kAttu alkuRkku urugum kumaran padha ambuyaththai vaNangkAththalai vandhu idhuengkE enakku inggan vAiththadhuvE? O' Lord, You are the Divine Preceptor, who graciously accepted me as a devotee, and showed me the way of attaining unique and eternal salvation after forsaking the cattle-shed-like body of much flesh and fat. [I wonder] How did I ever obtain a head, which does not bow at the lotus-flower-like Sacred Feet of the Lord, Who pines for the young pretty fawn-like maiden VaLLi-ammai of the kuravar-clan? |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |