Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 34  பொட்டாக வெற்பை .
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 34  pottAga veRppai.
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 34. ... பொட்டாக வெற்பை

பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்
   கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப்
      பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்
         கட்டாரி வேல்விழி யார்வலைக் கேமனங் கட்டுண்டதே.

......... சொற்பிரிவு .........

பொட்டுஆக வெற்பைப் பொருத கந்தா, தப்பிப் போனது ஒன்றற்கு
   எட்டாத ஞானகலை தருவாய்; இரும் காம விடாய்ப்
      பட்டார் உயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்கும்
         கட்டாரி வேல்விழியார் வலைக்கே மனம் கட்டுண்டதே.

......... பதவுரை .........

நுழைவழியாகுமாறு கிரௌஞ்ச மலையுடன் போரிட்ட கந்தக் கடவுளே,
அடியேனைவிட்டுத் தப்பிப் போனதாகிய [அன்பன்றி வேறு] ஒன்றிற்கும்
எட்டாத மெய்யறிவு வித்தையை தந்தருள்வீராக! பெரிய காமமாகிய
தாகம் கொண்டவருடைய உயிரை முறுக்கி எடுத்துக் குடித்துத் தமது
பசியைத் தணித்துக் கொள்ளும் வாளாயுதத்தையும் வேலாயுதத்தையும்
ஒத்த கண்களையுடைய பெண்களின் வலையினில் அடியேனின் மனம்
அகப்பட்டுக் கொண்டு கட்டுப்பட்டுவிட்டதே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.40   pg 4.41 
 WIKI_urai Song number: 34 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 34. - pottAga veRppai

pottu Aga veRppaip porudha kandhA, thappip pOnadhu ondRaRku
   ettAdha njAnakalai tharuvAi; irum kAma vidAip
      pattAr uyiraith thirugip parugip pasithaNikkum
         kattAri vElvizhiyAr valaikkE manam kattuNdathE.

O' Lord KandhA, You warred against the krauncha-hill and made it a thoroughfare. Please grant me the art of gaining Real Knowledge, which escaped from me, but cannot reach anyone else except one, who has sincere love for You. O' Lord, my mind has been caught and bound by the net of women's sword-and-lance-like eyes, which, in order to satisfy their hunger, twist and drink up the lives of those men, who have the thirst for inordinate lust.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 34 - pottAga veRppai.

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]