Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 30  பால் என்பது மொழி .
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 30  pAl enbadhu mozhi.
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 30. ... பால் என்பது மொழி

பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையற்கண்
   சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை
      வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக்
         காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே.

......... சொற்பிரிவு .........

பால் என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர் கண்
   சேல் என்பது ஆகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை
      வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித் தண்டைக்
         கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே?

......... பதவுரை .........

பாலை ஒத்தது [பெண்களின்] சொல், பஞ்சை ஒத்தது பாதம், கண்கள்
கெண்டை மீனை ஒத்தவை என்று எண்ணி மயங்கித் திரிகின்ற மனமாகிய
நீ, திருச்செந்தூர்த் திருமுருகப்பெருமானின் திருக்கையில் விளங்கும்
வேலாயுதமே என்று சொல்கின்றாயில்லை; வெற்றிபொருந்திய மயில்
என்றும் சொல்கின்றாயில்லை; வெட்சி மலரையும் தண்டையையும்
அணிந்த திருவடிகள் என்கின்றாயில்லை. [ஆதலால்] நீ முத்திப் பேற்றை
அடைவது எங்ஙனமோ?

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.37 
 WIKI_urai Song number: 30 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 30. - pAl enbadhu mozhi

pAl enbadhu mozhi, panju enbadhu padham, pAvaiyar kaN
   sEl enbadhu Agath thirigindRa nee sendhilOn thirukkai
      vEl enkilai kotRa mayUram enkilai vetchith thaNdaik
         kAl enkilai manamE engganE muththi kANbadhuvE?

O' mind, you wander around with the delusion that women's speech is as sweet as milk, their feet are soft as cottonwool, and their eyes are like the shape of carp-fish. [However] you do not speak of the lance which is prominent in the Sacred Hand of ThirumurugapperumAn of ThiruchchendhUr, nor of the Lord's victorious peacock, nor of the vetchi-blossoms, and the tandai-anklet adorning the Lord's Sacred Feet. [So] how are you then going to attain 'mukthi' [liberation]?
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 30 - pAl enbadhu mozhi.

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]