திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 13 ஒருவரைப் பங்கில் Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 13 oruvaraip pangkil |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 13 ... ஒருவரைப் பங்கில் ஒருவரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர் திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர் வெருவரத் திக்குச் செவிடுபட் டெட்டுவெற் புங்கனகப் பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே. ......... சொற்பிரிவு ......... ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரனுடை மணிசேர் திருவரைக் கிண்கிணி ஓசைபடத் திடுக்கிட்டு அரக்கர் வெருவரத் திக்குச் செவிடுபட்டு எட்டு வெற்பும் கனகப் பருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர் பயம் கெட்டதே. ......... பதவுரை ......... தனிப்பெருந்தலைவராகிய சிவபெருமானைத் தமது வலப் பக்கத்தில் உடையவராகிய உமாதேவியாரது திருப்புதல்வராகிய திருமுருகப்பெருமானின் உடைக்குமேல் கட்டும் மணிகள் பொருந்திய அழகிய இடையில் விளங்குகின்ற கிண்கிணியின் ஒலிபட்ட மாத்திரத்தில் அசுரர்கள் துணுக்குற்று அஞ்சி நடுங்கவும், எட்டுத்திசையில் உள்ளவர்களும் செவிடாகவும், குலமலைகள் எட்டும் பெரிய பொன்மலையாகிய மேருமலையும் அடிபெயர்ந்து அதிர்ந்துபோயின. தேவர்களுக்கு அசுரர்களால் ஏற்பட்ட பயமும் அழிந்துவிட்டது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.21 pg 4.22 WIKI_urai Song number: 13 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 13 - oruvaraip pangkil oruvaraip pangkil udaiyAL kumAranudai maNisEr thruvaraik kiNkiNi Osaipadath thidukkittu arakkar veruvarath thikkuch chevidupattu ettu veRppum kanagap paruvaraik kundRam adhirndhana dhEvar bayam kettathE. Goddess UmAdhEvi has the unique Lord SivaperumAn on her right side, and her divine Son is ThirumurugapperumAn. The moment the tinkling bells of jeweled-KiNkiNi around the pretty waist of the Infant-Lord sounded, the demons were startled and they were afraid and trembled; those, who were dwelling in all the eight directions of the world became deaf; the legendary eight hills surrounding the circular continents, as well as the great golden mountain of MahAmEru, moved from their base, and shook; and the celestials' fear of the demons also perished. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |