Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 14  குப்பாச வாழ்க்கை
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 14  kuppAsa vAzhkkai
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 14 ... குப்பாச வாழ்க்கை

குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த
   இப்பாச நெஞ்சனை யீடேற்று வாயிரு நான்குவெற்பும்
      அப்பாதி யாழ்விழ மேருங் குலுங்கவிண் ணாருமுய்யச்
         சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே.

......... சொற்பிரிவு .........

குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த
   இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய் இருநான்கு வெற்பும்
      அப்பாதியாய் விழ மேரும் குலுங்க விண்ணாரும் உய்யச்
         சப்பாணிகொட்டியகை ஆறுஇரண்டு உடைச் சண்முகனே.

......... பதவுரை .........

மண்ணுலக மாய வாழ்க்கை இதுவே நிலைபெறுடையது என்று களித்துக்
கூத்தாடும் ஐம்புலன்களினால் சுழற்சியுற்ற இத்தகைய பாசத்தோடு
கூடிய மனத்தையுடைய அடியேனை திருவருள் நெறி காட்டி உய்யும்படிச்
செய்வீராக; எட்டு குலமலைகளும் சரிபாதிகளாய்ப் பிளந்து விழவும்
மேருமலையும் நிலைகுலைந்து குலுங்கவும் தேவர்கள் சிறைநீங்கி
பிழைக்கவும் சப்பாணிகொட்டிய பன்னிரண்டு திருக்கரங்களையுடைய
ஆறுமுகப்பெருமானே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.22   pg 4.23 
 WIKI_urai Song number: 14 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 14 - kuppAsa vAzhkkai

kuppAsa vAzhkkaiyuL kUththAdum aiyavaril kotpu adaindha
   ippAsa nenjanai eedEtRuvAi irunAngku veRppum
      appAdhiyAi vizha mErum kulungka viNNArum uiyyach
         chappANikottiyakai ARuiraNdu udaich saNmuganE.

O' Lord, please grant me Your compassionate grace of liberating me from my mind's deceptive swirling, caused by the five-sense-organs, which are gleefully dancing by saying that this illusory life on earth is an eternal one. You are the Lord of Six Faces with twelve Sacred Hands that clapped with open palms when, as a result of Your victorious attack against the demons, the legendary eight hills were split open into two equal halves, and the stability of the MahAmEru-mountain was disturbed and the great mountain quivered; the celestials were rescued from their imprisonment.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 14 - kuppAsa vAzhkkai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]