திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 11 குசை நெகிழா Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 11 kusai negizhA |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 11 ... குசை நெகிழா குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்பக் கசையிடு வாசி விசை கொண்ட வாகனப் பீலியின்கொத் தசைபடு கால்பட் டசைந்தது மேரு அடியிடவெண் டிசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டதே. ......... சொற்பிரிவு ......... குசை நெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர் குழம்பக் கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின் கொத்து அசைபடு கால்பட்டு அசைந்தது மேரு அடியில் எண்- திசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டது. ......... பதவுரை ......... கடிவாளமானது தளராது பிடித்தவாறு வெற்றியை உடைய வேலினை ஏந்திய திருமுருகப்பெருமான், அசுரர்களின் குடல்கள் கலங்குமாறு, சவுக்கினால் அடித்து விரட்டபட்ட குதிரையின் வேகத்திலும் மிக்க வேகத்தைக் கொண்ட மயில்வாகனத்தின் தோகையின் தொகுதி அசைதலினால் உண்டாகின்ற காற்று பட்டு மகாமேரு மலை அசைவுபட்டது. அந்த மயில் அடி எடுத்துவைக்க எட்டுத்திசைகளிலும் உள்ள மலைகள் துகள்பட்டு அழிந்தன. அந்தத் துகளினால் கடலானது மேடாகிவிட்டது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.20 pg 4.21 WIKI_urai Song number: 11 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 11 - kusai negizhA kusai negizhA vetRi vElOn avuNar kudar kuzhambak kasaiyidu vAsi visaikoNda vAganap peeliyin koththu asaipadu kAlpattu asaindhadhu mEru adiyil eN- thisaivarai thULpatta aththULin vAri thidarpattadhu. ThirumurugapperumAn with the victorious lance tightly held the bridle and rode His vehicle of peacock at a speed very much faster than a horse which was urged on with the lash of a whip, so that the entrails of the demons ruffled. The fierce blowing of wind, caused by the moving of the cluster of peacock's tail-feathers, made the great MahAmEru-mountain shake; and as the peacock took a few steps, the hills in all the eight directions of the world were reduced to dust, and because of the dust, the sea became a high-ground. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |