![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 9 தேன் என்று Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 9 thEn endRu |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் mp3 ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 9 ... தேன் என்று தேனென்று பாகென்றுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று தானன்று நானன் றசரீரி யன்று சரீரியன்றே. ......... சொற்பிரிவு ......... தேன் என்று பாகு என்று உவமிக்க ஒணா மொழித் தெய்வவள்ளி கோன் அன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு கூறவன்றோ வான் அன்று, கால் அன்று, தீ அன்று, நீர் அன்று, மண்ணும் அன்று, தான் அன்று, நான் அன்று, அசரீரி அன்று, சரீரி அன்றே. ......... பதவுரை ......... தேன் என்றும் கற்கண்டு என்றும் ஒப்புமை சொல்வதற்கு இயலாத இனிய மொழியை உடைய தெய்வமடந்தையாகிய வள்ளிநாயகியாரது கணவராகிய திருமுருகப்பெருமான் அடியேனுக்குக் குருவாக வந்து உபதேசித்து அருளிய மெய்ப்பொருள் ஒன்று உள்ளது. [அஃது] ஆகாயம் அன்று, காற்று அன்று, நெருப்பு அன்று, தண்ணீர் அன்று, மண்ணும் அன்று, தான் அன்று, நான் அன்று, உருவமில்லாதது அன்று, உருவத்தை உடையதும் அன்று. [அஃது, ஒன்றும் அற்ற ஒன்று]. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.18 pg 4.19 WIKI_urai Song number: 9 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page | ![]() |
Song 9 - thEn endRu thEn endRu pAgu endRu uvamikka oNA mozhith dheivavaLLi kOn andRu enakku ubadhEsiththadhu ondRu uNdu kURavandRO vAn andRu, kAl andRu, thee andRu, neer andRu, maNNum andRu, thAn andRu, nAn andRu, asareeri andRu, sareeri andRE. Neither honey, nor the treacle of sugar-candy can be [an adequate] simile for the sweet speech of the divine maiden VaLLi-ammai. There is one Real Truth, which Her divine Lord ThirumurugapperumAn graciously expounded to me. If I were to say what it is, it concerns neither the sky, nor the wind, nor the fire, nor the water, nor the earth, nor Himself, nor myself, nor any formless being, nor any being with a form. [It is ONE, that is NONE OTHER, because it is beyond everything else]. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |