திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 6 பெரும் பைம் Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 6 perum paim |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 6 ... பெரும் பைம் பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பும் குமரனை மெய்யன்பி னான்மெல்ல மெல்லவுள்ள அரும்புந் தனிப்பர மானந்தத் தித்தித் தறிந்தவன்றே கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே. ......... சொற்பிரிவு ......... பெரும் பைம் புனத்தினுள் சிறு ஏனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பும் குமரனை மெய் அன்பினால் மெல்லமெல்ல உள்ள அரும்பும் தனி பரம ஆநந்தம் தித்தித்து அறிந்த அன்றே கரும்பும் துவர்த்து செம் தேனும் புளித்து அறக் கைத்ததுவே. ......... பதவுரை ......... பசுமையுடைய பெரிய தினைப் புனத்தில் சிறிய தினைக் கொல்லையைக் காவல் செய்யும் [ஜீவான்மாவாகிய] வள்ளியம்மையை விரும்புகின்ற திருமுருகப்பெருமானை உண்மையான அன்புடன் மெல்லமெல்ல நினைக்க, அந்த நினைப்பினால் ஒப்பற்ற பேரின்பத்தை அடியேன் துய்த்து, அதன் இனிமையை உணர்ந்தபொழுது இனிய கரும்பும் துவராகி, செவ்விய தேனும் புளித்து மிகவும் கசந்துவிட்டது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.15 pg 4.16 WIKI_urai Song number: 6 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திருமதி வே. மாலதி, சென்னை Mrs. Malathi Velayudhan, Chennai பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 6 - perum paim perum paim punaththinuL siRu Enal kAkkindRa pEdhai kongkai virumbum kumaranai mei anbinAl mellamella uLLa arumbum thani parama Anandham thiththiththu aRindha andRE karumbum thuvarththu sem thEnum puLiththu aRak kaiththadhuvE. When, with true love, I began to think little by little of ThirumurugapperumAn, who is fond of VaLLi-ammai [who is indeed the personification of soul], watching over a small patch of millet in a vast greenish millet-field, I partook of the unique eternal bliss that arose from such a thought, and when I realized how eternally sweet it was, the usually sweet sugar-cane tasted astringent and the good honey tasted sour and very bitter. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |