திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1318 வாதினை அடர்ந்த (பழமுதிர்ச்சோலை) Thiruppugazh 1318 vAdhinaiadarndha (pazhamudhirchOlai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானதன தந்த தானதன தந்த தானதன தந்த ...... தனதான ......... பாடல் ......... வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து ...... தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து ...... பணியேனே ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று ...... தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப ...... தறியேனே நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம லைந்து ...... திரிவேனே நாகமணி கின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று ...... தொழுகேனே சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற சோகமது தந்து ...... எனையாள்வாய் சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் ... வம்பு செய்வது போன்று அடர்ந்து நெருங்கி வேலொத்த கண்களை உடைய பெண்களின் மாயமது ஒழிந்து தெளியேனே ... மயக்குதல் என்னை நீங்கி நான் தெளிவு பெறவில்லையே. மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து ... நல்ல மலர்களால் ஆன மாலைகளைத் தொடுத்து மாபதம் அணிந்து பணியேனே ... நின் சீரிய அடிகளில் சூட்டி நான் பணியவில்லையே. ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ... முதலில் தொடங்கி இறுதி வரை உள்ள சகல நலன்களும் ஆறுமுக மென்று தெரியேனே ... ஆறுமுகம்* என்ற உண்மையை நான் தெரிந்து கொள்ளவில்லையே. ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டது ... ஒப்பற்ற ஓங்கார மந்திர ரூபநிலை கொண்டது ஆடுமயி லென்பது அறியேனே ... ஆடுகின்ற நிலையிலுள்ள மயில்தான் என்று அறியவில்லையே. நாதமொடு விந்து வானவுடல் கொண்டு ... நாதமும் விந்துவும் சேர்ந்து உருவாக்கிய இவ்வுடலால் நானிலம் அலைந்து திரிவேனே ... உலகமெல்லாம் அலைந்து திரிகின்றேனே. நாகம் அணிகின்ற நாதநிலை கண்டு ... குண்டலினியாக ஓடும் பிராணவாயு அடைகின்ற ஆறாவது நிலையை (ஆக்ஞாசக்ரமாகிய ஒளி வீசும் ஞான சதாசிவ நிலையைக்) கண்டு தரிசித்து** நாடியதில் நின்று தொழுகேனே ... விருப்புற்று அந்த நிலையிலே நின்று நான் தொழவில்லையே. சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற ... அந்த ஞான ஒளியை உணர்கின்ற வாழ்வே சிவ வாழ்வு என்ற சோகமது தந்து எனையாள்வாய் ... ( +அகம்) அதுவே நான் என்ற நிலை தந்து, என்னை ஆள்வாய். சூரர்குலம் வென்று வாகையொடு சென்று ... சூரர் குலத்தை வென்று வெற்றியோடு போய் சோலைமலை நின்ற பெருமாளே. ... பழமுதிர்ச்சோலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. |
* ஆறுமுகம் என்ற தத்துவம்: 1. அ, உ, ம், நாதம், விந்து, சக்தி. 2. சிவனது ஐந்து முகங்களும் தேவியின் ஒரு முகமும். 3. ஆதி, இச்சா, கிரியா, பரா, ஞான, குடிலா சக்திகள் என்ற ஆறு சக்திகள். 4. ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்ற ஆறு குணங்கள். |
** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. | ||||||
ஆதாரம் மூலாதாரம் சுவாதிஷ்டானம் மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆக்ஞா பிந்து சக்கரம் (துவாதசாந்தம், ஸஹஸ்ராரம், பிரமரந்திரம்) | இடம் குதம் கொப்பூழ் மேல்வயிறு இருதயம் கண்டம் புருவத்தின் நடு கபாலத்தின் மேலே | பூதம் மண் அக்கினி நீர் காற்று ஆகாயம் மனம் | வடிவம் 4 இதழ் கமலம் முக்கோணம் 6 இதழ் கமலம் லிங்கபீடம் நாற் சதுரம் 10 இதழ் கமலம் பெட்டிப்பாம்பு நடு வட்டம் 12 இதழ் கமலம் முக்கோணம் கமல வட்டம் 16 இதழ் கமலம் ஆறு கோணம் நடு வட்டம் 3 இதழ் கமலம் 1008 இதழ் கமலம் | அக்ஷரம் ஓம் ந(கரம்) ம(கரம்) சி(கரம்) வ(கரம்) ய(கரம்) | தலம் திருவாரூர் திருவானைக்கா திரு(வ) அண்ணாமலை சிதம்பரம் திருக்காளத்தி காசி (வாரணாசி) திருக்கயிலை | கடவுள் விநாயகர் பிரமன் திருமால் ருத்திரன் மகேசுரன் சதாசிவன் சிவ . சக்தி ஐக்கியம் |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.1101 pg 1.1102 pg 1.1103 pg 1.1104 WIKI_urai Song number: 444 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி Singapore B. Subhashini பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு L. வசந்த குமார் Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1318 - vAdhinai adarndha (pazhamudhirchOlai) vAdhinai adarndha vEl vizhiyar thangaL mAyamadh ozhindhu ...... theLiyEnE mA malargaL koNdu mAlaigaL punaindhu mA padham aNindhu ...... paNiyEnE Adhi odum antham Agiya nalangaL ARumugam endru ...... theriyEnE Ana thani manthra rUpa nilai koNdadh Adu mayil enbadh ...... aRiyEnE nAdhamodu vindhu Ana udal koNdu nAnilam alaindhu ...... thirivEnE na aham aNigindra nAtha nilai kaNdu nAdi adhil nindru ...... thozhugEnE jOthi uNargindra vAzhvu sivam endra sOham adhu thandhu ...... enaiyALvAy sUrar kulam vendru vAgaiyodu sendru sOlai malai nindra ...... perumALE. ......... Meaning ......... vAdhinai adarndha vEl vizhiyar: With challenging eyes that look like spears, these women thangaL mAyamadh ozhindhu theLiyEnE: enchant me; and I am unable to get over that passion. mA malargaL koNdu mAlaigaL punaindhu: Making garlands from beautiful and fragrant flowers, mA padham aNindhu paNiyEnE: I have never decorated Your two hallowed feet nor worshipped. Adhi odum antham Agiya nalangaL: From the very beginning till the very end, all good things ARumugam endru theriyEnE: are entirely due to ARumugam (Six Faces)* - this Truth I did not know. Ana thani manthra rUpa nilai koNdadh: The shape of the Sacred and Unique ManthrA OM is Adu mayil enbadh aRiyEnE: that of the dancing peacock - even this I never knew. nAdhamodu vindhu Ana udal koNdu: With this body made out of a sperm (NAtham) and an egg (Vinthu) nAnilam alaindhu thirivEnE: I have been roaming the entire world. na aham aNigindra nAtha nilai kaNdu: Raising my Kundalini through breathing to reach the final scintillating stage (of AgnyA ChakrA) and viewing the Cosmic Light**, nAdi adhil nindru thozhugEnE: I failed to concentrate on it for a steady worship. jOthi uNargindra vAzhvu sivam endra: The realization of that Light in my life is seeing SivA; and sOham adhu thandhu enaiyALvAy: then He becomes Me - You have to bless me with that state. sUrar kulam vendru vAgaiyodu sendru: After destroying the SUras, You marched victoriously to sOlai malai nindra perumALE.: PazhamuthirchOlai, on whose mount You stand, Oh Great One! |
* ARumugam (Six faces) of MurugA signify: 1. The letters a, u, and m, nAdham (Sperm), Vindhu (Egg) and Shakthi (Energy). 2. SivA's five faces combined with DEvi PArvathi's face. 3. Adhi, ichchA, kriyA, parA, gnAna and kudilA Sakthis (six forms of Energy). 4. aiswaryam (Wealth), veeryam (Valour), pugazh (Fame), thiru (Grace), gnAnam (Wisdom) and vairAkkiyam (Determination). |
** The names of the chakrA centres, the deities, the elements, the zones of the body where they are located, the shape of the chakrAs, the description of the flowers in the chakrAs, the letters of the ManthrA governing them and the temple-towns representing them are given in the following chart: | ||||||
ChakrA mUlAthAram swAthishtAnam maNipUragam anAgatham visudhdhi AgnyA Bindu chakkaram (DhwAdhasAntham, SahasrAram, Brahma-ranthiram) | Body Zone Genitals Belly-button Upper belly Heart Throat Between the eyebrows Over the skull | Element Earth Fire Water Air Sky Mind | Shape 4-petal lotus Triangle 6-petal lotus Lingam Square 10-petal lotus cobra in box central circle 12-petal lotus Triangle lotus circle 16-petal lotus Hexagon central circle 3-petal lotus 1008-petal lotus | Letter Om na ma si va ya | Temple ThiruvArUr ThiruvAnaikkA Thiru aNNAmalai Chidhambaram ThirukkALaththi VaranAsi (kAsi) Mt. KailAsh | Deity VinAyagar BrahmA Vishnu RUdhran MahEswaran SathAsivan Siva-Sakthi Union |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2017-2030 [xhtml] 0504.2022[css]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact us if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by us (the owners and webmasters of www.kaumaram.com), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., we are NOT responsible for any damage caused by downloading any item from this website. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |