திருப்புகழ் 1313 ஆசை நாலுசதுர  (பழமுதிர்ச்சோலை)
Thiruppugazh 1313 AsainAlusadhura  (pazhamudhirchOlai)
Thiruppugazh - 1313 AsainAlusadhura - pazhamudhirchOlaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தானதன தத்ததன தத்ததன
     தான தானதன தத்ததன தத்ததன
          தான தானதன தத்ததன தத்ததன ...... தந்ததான

......... பாடல் .........

ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி
     வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி
          ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு ...... மிந்துவாகை

ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி
     யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத
          ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் ...... விந்துநாத

ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக
     மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு
          மோது வேதசர சத்தியடி யுற்றதிரு ...... நந்தியூடே

ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற
     மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர்
          யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை ...... யின்றுதாராய்

வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ்
     வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள்
          மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண ...... செங்கையாளி

வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை
     வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென்
          மாசு சேரெழுபி றப்பையும றுத்தவுமை ...... தந்தவாழ்வே

காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி
     ஆரூர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல்
          காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல் ...... செந்தில்நாகை

காழி வேளுர்பழ நிக்கிரி குறுக்கைதிரு
     நாவ லூர்திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ்
          காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

ஆசை நாலு சதுர கமல முற்றின் ஒளி வீசி ... திக்குகள் நான்கு
பக்கங்களாகக் கொண்ட சதுரமான மூலாதாரக் கமலத்தில் பொருந்தி
இனிய ஒளி வீசிட,

ஓடி இரு பக்கமொடு உற செல் வளி ... இரண்டு பக்கங்களிலும்
பொருந்தி (இடை கலை, பிங்கலை என்னும் இரு நாடிகளின் வழியாக)
ஓடுகின்ற பிராண வாயு*

ஆவல் கூர மண் முதல் சலசம் ... விருப்பம் மிக்கெழ சுவாதிஷ்டான**
(கொப்பூழ்) முதல் ஆக்கினை (புருவநடு) ஈறாக உள்ள ஐவகைக்
கமலங்களிலும் ஓட வைத்து,

பொன் சபையும் இந்து வாகை ஆர ... (தில்லையில் நடனம் செய்யும்
நடராஜரின்) கனக சபையும் சந்திர காந்தியால் நிரம்பி விளங்க,

மூணு பதியில் கொள நிறுத்தி ... மூன்று (அக்கினி, ஆதித்த, சந்திர)
மண்டங்களிலும் பொருந்த நிறுத்தி,

வெளி ஆரு சோதி நூறு பத்தினுடன் எட்டு இதழாகி ...
வெளிப்படும் சோதியான ஆயிரத்து எட்டு இதழோடு கூடிய,

ஏழும் அளவு இட்டு ... (பிரமரந்திரம் - பிந்து மண்டலம், ஹஸ்ராரம் -
அதனுடன் கூடிய ஆறு ஆதாரங்களுடன் மொத்தம்) ஏழு இடங்களையும்
கண்டறிந்து,

அருண விற்பதியில் ... சிவந்த ஒளியுடன் கூடிய பன்னிரண்டாம்
(துவாதசாந்த) ஆதாரத்தில்,

விந்து நாத ஓசை சாலும் ... சிவசக்தி ஐக்கிய நாத ஓசை நிறைந்துள்ள

ஒரு சத்தம் அதிகப் படிகமோடு கூடி ... ஒப்பற்ற சத்தம் மிகுந்த
பளிங்கு போன்ற காட்சியுடன் கூடியதாய்,

ஒருமித்து அமுத சித்தியொடும் ... ஒன்று சேர்ந்து மதி
மண்டலத்தினின்றும் பெருகிப் பாயும் கலா அமிர்தப் பேற்றுடன்,

ஓது வேத சர சத்தி அடி உற்ற திரு நந்தி ஊடே ... புகழ்ந்து
சொல்லப்படும் வேத வாசி சக்திக்கு ஆதாரமாக உள்ள திரு நந்தி
ஒளிக்குள்ளே,

ஊமையேனை ஒளிர்வித்து உனது முத்தி பெற ... ஊமையாகிய
என்னை விளங்க வைத்து நீ அருளும் முத்தியைப் பெற,

மூல வாசல் வெளி விட்டு உனது உரத்தில் ஒளிர் ... பிரமரந்திரம்
எனப்படும் மூலவாசல் வெளியிட்டு விளங்க, உனது அருளாற்றலால்
ஒளிர்கின்ற

யோக பேதவகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று
தாராய்
... யோக விதங்கள்*** எட்டும் இதில் பொருந்தும் வகையை
நான் அறியுமாறு இன்று தந்தருளுக.

வாசி வாணிகன் என குதிரை விற்று மகிழ் ... குதிரை வியாபாரி
என வந்து குதிரைகளை விற்று மகிழ்ச்சிகொண்ட

வாத ஊரன் அடிமை கொளு க்ருபை கடவுள் ...
திருவாதவூரராகிய மாணிக்க வாசகரை அடிமையாகக் கொண்ட
கிருபாகர மூர்த்தி,

மாழை ரூபன் முக மத்திகை விதத்து அருண செம் கையாளி ...
பொன் உருவத்தினன், குதிரைச் சேணம், சவுக்கு வகைகளைப் பிடித்த
செவ்விய திருக்கையைக் கொண்டவனாகிய சிவபெருமானுடைய

வாகு பாதி உறை சத்தி கவுரி குதலை வாயின் மாது ... இடது
பக்கத்தில் உறைகின்ற சக்தி, கெளரி, மழலைச் சொல் பேசும் மாது,

துகிர் பச்சை வடிவி சிவை ... பவளமும் பச்சை நிறமும் கொண்ட
வடிவினள்,

என் மாசு சேர் எழு பிறப்பையும் அறுத்த உமை தந்த
வாழ்வே
... என்னுடைய குற்றம் நிறைந்த ஏழு பிறப்புகளையும் அறுத்த
உமா தேவியார் ஈன்ற செல்வமே,

காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி ... காசி, இராமேசுரம்,
திருவாட்போக்கி, திருச்செங்கோடு,

ஆரூர் வேலூர் தெவூர் கச்சி மதுரை பறியல் ... திருவாரூர்,
வேலூர், தேவூர், காஞ்சீபுரம், மதுரை, திருப்பறியல்,

காவை மூதூர் அருண கிரி திருத்தணியல் செந்தில் நாகை ...
திருவானைக்கா, திருப்புனைவாசல், திருவண்ணாமலை, திருத்தணிகை,
திருச்செந்தூர், நாகப்பட்டினம்,

காழி வேளூர் பழநிக்கிரி குறுக்கை ... சீர்காழி, வைத்தீஸ்வரன்
கோவில் (வேளூர்), பழநிமலை, திருக்குறுக்கை,

திரு நாவலூர் திருவெ(ண்)ணெய் பதியில் மிக்க திகழ் ...
திருநாவலூர், திருவெண்ணெய் நல்லூர் முதலிய தலங்களில் விளங்கும்,
(மேலும்)

காதல் சோலை வளர் வெற்பில் உறை முத்தர் புகழ்
தம்பிரானே.
... உனக்கு விருப்பமான சோலை மலையிலும் உறைகின்ற
ஜீவன் முக்தர்கள் புகழ்கின்ற தம்பிரானே.


* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:

நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு
'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று
பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள்,
சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம
கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும்.
இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும்
ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த
ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி,
ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை,
சுழுமுனை முதலியன) உள்ளன.

'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.

'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.

'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.

'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும்
ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.

சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால்
மன அமைதி ஏற்படும்.


** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆதாரம்

மூலாதாரம்


சுவாதிஷ்டானம்



மணிபூரகம்



அநாகதம்



விசுத்தி



ஆக்ஞா


பிந்து சக்கரம்
(துவாதசாந்தம்,
ஸஹஸ்ராரம்,
பிரமரந்திரம்)
இடம்

குதம்


கொப்பூழ்



மேல்வயிறு



இருதயம்



கண்டம்



புருவத்தின் நடு


கபாலத்தின்
மேலே


பூதம்

மண்


அக்கினி



நீர்



காற்று



ஆகாயம்



மனம்






வடிவம்

4 இதழ் கமலம்
முக்கோணம்

6 இதழ் கமலம்
லிங்கபீடம்
நாற் சதுரம்

10 இதழ் கமலம்
பெட்டிப்பாம்பு
நடு வட்டம்

12 இதழ் கமலம்
முக்கோணம்
கமல வட்டம்

16 இதழ் கமலம்
ஆறு கோணம்
நடு வட்டம்

3 இதழ் கமலம்


1008
இதழ் கமலம்


அக்ஷரம்

ஓம்


ந(கரம்)



ம(கரம்)



சி(கரம்)



வ(கரம்)



ய(கரம்)






தலம்

திருவாரூர்


திருவானைக்கா



திரு(வ)
அண்ணாமலை


சிதம்பரம்



திருக்காளத்தி



காசி
(வாரணாசி)

திருக்கயிலை




கடவுள்

விநாயகர்


பிரமன்



திருமால்



ருத்திரன்



மகேசுரன்



சதாசிவன்


சிவ . சக்தி
ஐக்கியம்




*** அஷ்டாங்க யோகம் என்ற எட்டு வகை யோகங்கள் பின்வருமாறு:

1.   இயமம் - பொய்யாமை, கொல்லாமை, திருடாமை, காமுறாமை, பிறர் பொருள்
      வெஃகாமையுடன் புலன் அடக்குதல்.

2.   நியமம் - தவம், தூய்மைத் தத்துவம் உணர்தல், புனிதம், தானம், சைவ முறைகள்,
      சைவ சித்தாந்த ஞானம், யாகம்.

3.   ஆசனம் - உடலால் செய்யும் யோக முறைகள் - குறிப்பாக பத்ம, சிம்ம, பத்ர,
      கோமுக ஆசனங்கள்.

4.   ப்ராணாயாமம் - ரேசகம், கும்பகம், பூரகம் என்ற வகைகளிலே மூச்சை அடக்கி
      ஆளும் முறை.

5.   ப்ரத்யாஹாரம் - இந்திரியங்களை விஷயங்களிலிருந்து திருப்பி, இறைவனை
      உள்முகமாகப் பார்த்தல்.

6.   தாரணை - மனத்தை ஒருநிலைப் படுத்தி முதுகு நாடியிலுள்ள ஆறு சக்ர
      ஆதாரங்களிலும் இறைவனை பாவித்தல்.

7.   தியானம் - ஐம்புலன்கள், பஞ்ச பூதங்கள், மனம், சித்தம் முதலிய அந்தக்கரணங்கள்
      - இவற்றை அடக்கி தியானித்தல்.

8.   சமாதி - மனத்தைப் பரம்பொருளோடு நிறுத்தி ஸஹஸ்ராரத்தில்
      சிவ சக்தி ஐக்கியத்தோடு ஒன்றுபடல்.

ஆதாரம் ... 'திருமந்திரம்', திருமூலர் அருளியது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1085  pg 1.1086  pg 1.1087  pg 1.1088  pg 1.1089  pg 1.1090 
 WIKI_urai Song number: 439 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
M.S. Balashravanlakshmi - Puducherry
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி
புதுச்சேரி

M.S. Balashravanlakshmi
Puducherry
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1313 - Asai nAlusadhura (pazhamudhirchOlai)

Aasai nAlu chathurak kamalam utrin oLi
     veesi Odi iru pakkamod uRa chel vaLi
          Aval kUra maNmudhaR jalaja poRsabaiyum ...... indhuvAgai

Aara mUNupathiyiR koLa niRuththi veLi
     Aru jOthi nuRupaththin udan ettu idha
          zhAgi Ezhum aLavit aruNaviR padhiyin ...... vindhu nAdha

Osai sAlum oru sadhdham adhikap padigam
     Odu kUdi orumith amudha sidhdhiyodum
          Odhu vEdha sarasaththi adiyutra thiru ...... nandhiyUdE

Umai Enai oLirvith unadhu muththi peRa
     mUla vAsal veLi vit unadh uraththil oLir
          yOga bEdha vagai ettum idhil ottum vagai ...... indruthArAy

vAsi vANigan enak kudhirai vitru magizh
     vAdha vUran adimaik koLu krupaik kadavuL
          mAzhai rUpan muga maththigai vidhatharuNa ...... sengaiyALi

vAgu pAdhi uRai saththi gavurik kudhalai
     vAyin mAdhu thugir pachchai vadivi sivai en
          mAsu sErezhu piRappaiyum aRuththa umai ...... thandha vAzhvE

kAsi rAmesuram rathnagiri sarpagiri
     ArUr vElur dhevur kachchi madhuraip paRiyal
          kAvai mUdhur aruNagiri thiruththaNiyal ...... sendhil nAgai

kAzhi vELur pazhanik giri kuRukkai thiru
     nAvalUr thiru veNeyp padhiyin mikka thigazh
          kAdhal sOlai vaLar veRpil uRai muththar pugazh ...... thambirAnE.

......... Meaning .........

Asai nAlu chathurak kamalam utrin oLi veesi: In the square whose four sides are the four directions, there is a lotus (MUlAdhAra ChakrA) on which pleasant light spreads;

Odi iru pakkamod uRa chel vaLi: the Pranic air (oxygen) that starts running from both sides of the chakrA (through the nAdis -nerves- called ida kala and pingala)*

Aval kUra maNmudhaR jalaja: eagerly rises from the chakrA SwadhishtAnam** (navel) right up to AgnyA (between the eyebrows) flowing through all the five kinds of lotus;

poRsabaiyum indhuvAgai: the golden shrine (where NadarAjar dances) is filled with moonlight;

Ara mUNupathiyiR koLa niRuththi: the air is properly held in the three zones (namely, the sun, the moon and the fire zones);

veLi Aru jOthi nuRupaththin udan ettu idhazhAgi: the resultant effulgence spreads in the 1008 - petal lotus in

Ezhum aLavitttu: [Brahmarandhiram (BindhumaNdalam, SahsrAram) plus the six chakrAs making] a total of seven centres - all of which are witnessed;

aruNaviR padhiyin vindhu nAdhaOsai sAlum: over those centres, in the twelfth (DwAdhasAntha) centre which is enriched with red light, where the merged Siva-Sakthi unison is resonating with great music,

oru sadhdham adhikap padigamOdu kUdi orumith amudha sidhdhiyodum: and where the vision is like a matchless marble with a powerful reverberation; all of these merge to cause the nectar from the Moon Zone to gush out and seep through;

Odhu vEdha sarasaththi adiyutra thiru nandhiyUdE: in the celebrated light from the great Nandhi which is said to be the foundation of all the VEdAs,

Umai Enai oLirvith unadhu muththi peRa: kindly bless and enlighten me, this dumb and mute one, so that I am liberated! For this,

mUla vAsal veLi vittu: In the primordial gate known as Brahmarandhram,

unadh uraththil oLir yOga bEdha vagai ettum idhil ottum vagai indruthArAy: the yOgAs of eight kinds*** which are ebullient by Your kind grace, will have to be synchronised; please show me the method by which this can be accomplished.

vAsi vANigan enak kudhirai vitru magizh: He came happily in the disguise of a horse-trader and

vAdha vUran adimaik koLu krupaik kadavuL: took control of VadhavUrar (MAnikkavAacakar); He is the most compassionate one;

mAzhai rUpan muga maththigai vidhatharuNa sengaiyALi: His complexion is that of gold; in His hallowed reddish hands, He held many varieties of saddles and whips of the horses; He is Lord SivA;

vAgu pAdhi uRai saththi gavurik kudhalai vAyin mAdhu: concorporate in half of His body is ParAsakthi, Gowri, Mother who prattles like a child;

thugir pachchai vadivi sivai: She has a complexion combining coral and emerald-green hues; She is the Consort of SivA;

en mAsu sErezhu piRappaiyum aRuththa umai thandha vAzhvE: She severed my seven births filled with blemishes; She is UmAdEvi; and You are Her Treasure, Oh Lord!

kAsi rAmesuram rathnagiri sarpagiri: KAsi, RAmEswaram, Rathnagiri (ThiruvAtpOkki), the Snake Mountain (ThiruchchengkOdu),

ArUr vElur dhevur kachchi madhuraip paRiyal: ThiruvArUr, Vellore, ThEvUr, KAnchipuram, Madhurai, ThiruppaRiyal,

kAvai mUdhur aruNagiri thiruththaNiyal sendhil nAgai: ThiruvAnaikkA, ThiruppunaivAsal, ThiruvaNNAmalai, ThiruththaNigai, ThiruchchendhUr, NagappatiNam,

kAzhi vELur pazhanik giri kuRukkai: SeegAzhi, Vaitheeswaran KOyil (VELUr), Mount Pazhani, ThirukkuRukkai,

thirunAvalUr thiru veNeyp padhiyin mikka thigazh: ThirunAvalUr and ThiruveNNainallUr - these are a few places where You have Your abode, and

kAdhal sOlai vaLar veRpil uRai muththar pugazh thambirAnE.: Your favourite residing place is the mountain in Pazhamuthir cOlai; the realised souls living in all these centres praise You, Oh Great One!


* In this song, several Siva-yOgA principles are explained:

The inhaled air is known as 'pUragam' and the exhaled air is 'rechagam'. The retained air is 'kumbagam'. The oxygen that enters the body climbs up step by step through several centres, known as 'chakrAs' and ultimately reaches 'sahasrAram' or 'bindhuchakram' on the top of the skull. At that point of union, nectar flows from that chakrA and seeps through and soaks the six centres of the body and returns to the basic chakrA, 'mUlAthAram'. Three zones (namely, the sun zone, the moon zone and the fire zone) and ten nerves ('nAdis') govern the six centres; the principal nerves are 'susumna', 'idaikala' and 'pingala'.

idakala: one of the ten 'nAdis' (nerves), when inhalation takes place through the left nostril;
pingala: one of the ten 'nAdis' (nerves), when inhalation takes place through the right nostril;
susumna: one of the ten 'nAdis' (nerves), situated between the above two 'nadis', and running through the spinal chord covering all the six centres of 'kundalini'. ('idakala' and 'pingala' are entwined around 'susumna').

If breathing is controlled through a yOgA called 'praNAyAmA', the mind becomes tranquil.


** The names of the chakrA centres, the deities, the elements, the zones of the body where they are located, the shape of the chakrAs, the description of the flowers in the chakrAs, the letters of the ManthrA governing them and the temple-towns representing them are given in the following chart:

ChakrA

mUlAthAram


swAthishtAnam



maNipUragam



anAgatham



visudhdhi



AgnyA


Bindu chakkaram
(DhwAdhasAntham,
SahasrAram,
Brahma-ranthiram)

Body Zone

Genitals


Belly-button



Upper belly



Heart



Throat



Between the
eyebrows

Over
the skull



Element

Earth


Fire



Water



Air



Sky



Mind






Shape

4-petal lotus
Triangle

6-petal lotus
Lingam
Square

10-petal lotus
cobra in box
central circle

12-petal lotus
Triangle
lotus circle

16-petal lotus
Hexagon
central circle

3-petal lotus


1008-petal
lotus


Letter

Om


na



ma



si



va



ya






Temple

ThiruvArUr


ThiruvAnaikkA



Thiru
aNNAmalai


Chidhambaram



ThirukkALaththi



VaranAsi
(kAsi)

Mt. KailAsh



Deity

VinAyagar


BrahmA



Vishnu



RUdhran



MahEswaran



SathAsivan


Siva-Sakthi
Union



*** The eight kinds of yOgAs 'ashtAnga yOgAs', are as follows:

1.   'iyamam' - non-lying, non-killing, non-stealing, non-yielding to lust and greed; complete control of sensory organs.

2.   'niyamam' - meditation, realising the value of purity, holiness, charity, vows in Saiva ways, knowledge of Saiva Sidhdhantha, sacrifices etc.

3.   'Aasanam' - bodily postures, chief among which are 'padma' (lotus), 'simha' (lion), 'bhadra' (happy), 'gomuka' etc.

4.   'prAnAyAmam' - Control of breath through 'rechagam', 'pUragam' and 'kumbagam'.

5.   'pratyAhAram' - Withdrawing the mind from the objects of the senses and looking inward.

6.   'dharaNai' - Concentration on the six chakras and on the ChidakAsam within the spinal colums.

7.   'dhyAnam' - When the five elements, the five senses and the internal organs like mind, intellect etc. are contained and meditation is undertaken.

8.   'samAdhi' - The final stage of yOgA involving the attainment of 'sahasrArA' and union with Siva-Sakthi.

- source: 'Thirumandhiram' by ThirumUlar.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1313 Asai nAlusadhura - pazhamudhirchOlai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]