திருப்புகழ் 1312 வாரண முகம்  (பழமுதிர்ச்சோலை)
Thiruppugazh 1312 vAraNamugam  (pazhamudhirchOlai)
Thiruppugazh - 1312 vAraNamugam - pazhamudhirchOlaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தந்த தந்த தானதன தந்த தந்த
     தானதன தந்த தந்த ...... தனதான

......... பாடல் .........

வாரண முகங்கி ழிந்து வீழவு மரும்ப லர்ந்து
     மால்வரை யசைந்த நங்கன் ...... முடிசாய

வாளகிரி யண்ட ரண்ட கோளமுற நின்றெ ழுந்து
     மாதவ மறந்து றந்து ...... நிலைபேரப்

பூரண குடங்க டிந்து சீதகள பம்பு னைந்து
     பூசலை விரும்பு கொங்கை ...... மடவார்தம்

போக சயனந் தவிர்ந்து னாடக பதம்ப ணிந்து
     பூசனைசெய் தொண்ட னென்ப ...... தொருநாளே

ஆரண முழங்கு கின்ற ஆயிர மடந்த வங்கள்
     ஆகுதி யிடங்கள் பொங்கு ...... நிறைவீதி

ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை
     யாரமர வந்த லம்பு ...... துறைசேரத்

தோரண மலங்கு துங்க கோபுர நெருங்கு கின்ற
     சூழ்மணிபொன் மண்ட பங்கள் ...... ரவிபோலச்

சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
     சோலைமலை வந்து கந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வாரண முகம் கிழிந்து வீழவும் அரும்பு அலர்ந்து ... (இவர்களது
மார்பகங்களை) யானைக்கு ஒப்பிடலாம் என்றால், அதன் முகம் ஒரு
காலத்தில் (சிவபெருமானால்) கிழிபட்டு விழுந்தது. அரும்பை
ஒப்பிடலாம் என்றால் அது மலர்ந்து வாடுகின்றது.

மால் வரை அசைந்து அநங்கன் முடி சாய ... பெரிய
மலையாகிய கயிலையை ஒப்பிடலாம் என்றால் அது (ராவணனால்)
அசைக்கப்பட்டது. மன்மதனுடைய கிரீடத்துக்கு ஒப்பிடலாம் என்றால்
அது (சிவ பெருமான் எரித்த போது) சாய்ந்து விழுந்தது.

வாள கிரி அண்டர் அண்ட கோளம் உற நின்று எழுந்து ...
சக்ர வாள கிரி போல, தேவ லோகம் அண்ட கோளம் இவைகளை
எட்டும்படி நிமிர்ந்து எழுந்து,

மா தவம் அறம் துறந்து நிலை பேரப் பூரண குடம் கடிந்து
சீத களபம் புனைந்து
... பெரிய தவசிகளும் தரும நெறியைக்
கைவிட்டு நிலை குலைய, பூரணமாகத் திரண்ட குடத்தையும் வென்று,
குளிர்ந்த சந்தனக் கலவையை அணிந்து,

பூசலை விரும்பு(ம்) கொங்கை மடவார் தம் போக சயனம்
தவிர்ந்து
... காமப் போரை விரும்பும் மார்பகங்களை உடைய
விலைமாதர்களின் இன்பப் படுக்கையை விட்டு நீங்கி,

உன் ஆடக பதம் பணிந்து பூசனை செய் தொண்டன் என்பது
ஒரு நாளே
... உனது கூத்துக்கு இயன்ற திருவடியை வணங்கி, அதைப்
பூஜிக்கும் தொண்டன் இவன் என்று கூறும்படியான ஒரு நாள் வருமோ?

ஆரண(ம்) முழங்குகின்ற ஆயிரம் மடம் தவங்கள் ஆகுதி
இடங்கள் பொங்கு நிறை வீதி
... வேதங்கள் முழங்குகின்ற ஆயிரக்
கணக்கான மடங்களும், தவங்கள் வேள்விச் சாலைகள் விளங்குகின்ற
நிறைவான வீதிகளும்,

ஆயிரம் முகங்கள் கொண்ட நூபுரம் இரங்கு(ம்) கங்கை*
ஆர அமர வந்து அலம்பு துறை சேர
... பல கிளைகளாகப் பரந்து
வரும், நூபுரம் ஒலிக்கும் ஆகாய கங்கையாகிய சிலம்பாறு அமைதியாக
வந்து ததும்பி ஒலிக்கும் படித்துறைகளும் பொருந்த,

தோரணம் அலங்கு துங்க கோபுர(ம்) நெருங்குகின்ற சூழ்
மணி பொன் மண்டபங்கள்
... தோரணங்கள் அசையும் உயர்ந்த
கோபுரங்களும், நெருங்கி நின்று சூழ்ந்துள்ள முத்து மணிகள் பதித்த
பொலிவுள்ள மண்டபங்களும்,

ரவி போல சோதியின் மிகுந்த செம் பொன் மாளிகை
விளங்குகின்ற சோலை மலை வந்து உகந்த பெருமாளே.
...
சூரியனைப் போல சோதி மிகுந்த அழகிய பொன் மாளிகைகளும்
விளங்கும் சோலை மலையில் வந்து மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே.


* நூபுரம் இரங்கு கங்கை - சிலம்பாறு பாயும் தென்திருமாலிருஞ் சோலையைக் குறிக்கும்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1083  pg 1.1084 
 WIKI_urai Song number: 438 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1312 - vAraNa mugam (pazhamuthirchOlai)

vAraNamu kangki zhinthu veezhavuma rumpa larnthu
     mAlvaraiya saintha nangan ...... mudisAya

vALakiri yaNda raNda kOLamuRa ninRe zhuntha
     mAthavama Ranthu Ranthu ...... nilaipErap

pUraNaku dangka dinthu seethakaLa pampu nainthu
     pUsalaivi rumpu kongai ...... madavArtham

pOkasaya nantha virnthu nAdakapa thampa Ninthu
     pUsanaisey thoNda nenpa ...... thorunALE

AraNamu zhangu kinRa Ayirama dantha vangaL
     Akuthiyi dangaL pongu ...... niRaiveethi

Ayiramu kangaL koNda nUpurami rangu gangai
     yAramara vantha lampu ...... thuRaisErath

thOraNama langu thunga kOpurane rungu kinRa
     cUzhmaNipon maNda pangaL ...... ravipOlac

chOthiyinmi kuntha sempon mALikaivi Langu kinRa
     sOlaimalai vanthu kantha ...... perumALE.

......... Meaning .........

vAraNa mukam kizhinthu veezhavum arumpu alarnthu: (If one begins to find comparisons for their bosom,) the elephant is incomparable as its face was once torn apart by Lord SivA and fell down; it cannot be compared to the lotus bud, as it droops after blossoming;

mAl varai asainthu anangan mudi sAya: comparing it with the huge mount Kailash is futile as it was once shaken (by RAvaNan); if one chose the crown of Manmathan, the God of Love, for comparison, it fell off when Lord SivA burnt him down;

vALa kiri aNdar aNda kOLam uRa ninRu ezhunthu: like the mount ChakravALa, it stands up erect reaching up to the celestial and terrestrial world;

mA thavam aRam thuRanthu nilai pErap pUraNa kudam kadinthu seetha kaLapam punainthu: it makes even the great sages give up their righteous path; it surpasses the fullness of a huge pot and is smeared with cool paste of sandalwood;

pUsalai virumpu(m) kongai madavAr tham pOka sayanam thavirnthu: it belongs to the whores who take pleasure in passionate duels; will I ever leave their enchanting beds

un Adaka patham paNinthu pUsanai sey thoNdan enpathu oru nALE: and begin to worship Your hallowed dancing feet? Will there be a day when I shall be referred to as one devoted to the worship of Your feet?

AraNa(m) muzhangukinRa Ayiram madam thavangaL Akuthi idangaL pongu niRai veethi: (In this place,) there are thousands of monasteries where vEdAs are chanted and there are many streets filled with sites for sacrificial rites and penances;

Ayiram mukangaL koNda nUpuram irangu(m) gangai* Ara amara vanthu alampu thuRai sEra: the lilting river flows like Gangai in the sky (known as ChilambARu) gushing into many branches and serenely touching the broad flight of stairs situated in the riverbank;

thOraNam alangu thunga kOpura(m) nerungukinRa cUzh maNi pon maNdapangaL: decorative festoons flutter on top of the tall temple-towers which abound in this place along with vast halls studded with precious stones;

ravi pOla sOthiyin mikuntha sem pon mALikai viLangukinRa sOlai malai vanthu ukantha perumALE.: shining like the sunlight, bright red palaces with golden walls are found in this town called Pazhamuthir cOlai where You are seated with relish, Oh Great One!


* nUpuram irangu(m) gangai refers to the lilting river called the Gangai in the sky which refers to the river ChilambARu in Pazhamuthir cOlai which is also a seat of Lord VishNu.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1312 vAraNa mugam - pazhamudhirchOlai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]