திருப்புகழ் 1282 என்பந்த வினை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1282 enbandhavinai  (common)
Thiruppugazh - 1282 enbandhavinai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தந்த தனத்தன தாத்தன ...... தனதான

......... பாடல் .........

என்பந்த வினைத்தொடர் போக்கிவி ...... சையமாகி

இன்பந்தனை யுற்றும காப்ரிய ...... மதுவாகி

அன்புந்திய பொற்கிணி பாற்கட ...... லமுதான

அந்தந்தனி லிச்சைகொ ளாற்பத ...... மருள்வாயே

முன்புந்தி நினைத்துரு வாற்சிறு ...... வடிவாகி

முன்திந்தி யெனப்பர தாத்துட ...... னடமாடித்

தம்பந்த மறத்தவ நோற்பவர் ...... குறைதீரச்

சம்பந்த னெனத்தமிழ் தேக்கிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

என்பந்த வினைத்தொடர் போக்கி விசையமாகி ... என்னைச்
சூழ்ந்து கட்டியுள்ள வினை எனப்படும் சங்கிலித் தொடரை அறுத்து யான்
வெற்றி பெற்று,

இன்பந்தனை யுற்று மகாப்ரியம் அதுவாகி ... இன்ப நிலையை
அடைந்து, நிரம்பப் பிரியம் கொண்டு,

அன்பு உந்திய பொற்கிணி பாற்கடல் அமுதான ... அன்பு
பெருகிய நிலையிலே பொற்கிண்ணத்தில் உள்ள பாற்கடல் அமிர்தத்திற்கு
நிகரான

அந்தந்தனில் இச்சைகொள் ஆற்பதம் அருள்வாயே ... முடிவான
பேரின்பப் பொருள் மீது ஆசையைக் கொள்கின்ற ஆதார நிலையை
நீ தந்தருள்வாயாக.

முன் புந்தி நினைத்து உருவாற் சிறு வடிவாகி ... முன்பு, சூரனை
அழிக்க மனத்தினில் எண்ணி, உருவத்தில் சிறியனாக, பால
குமாரனாக, அவதரித்து,

முன்திந்தியெனப் பரதாத்துடன்நடமாடி ... சூர சம்ஹார காலத்தில்
திந்தி என்ற தாளத்தில் பரத சாஸ்திரப்படி துடி என்னும் கூத்தினை
நடனமாடி*,

தம்பந்தம் அறத் தவ நோற்பவர் குறைதீர ... தங்களது பாச பந்தம்
அகல்வதற்காக தவநிலையில் இருப்பவர்களது குறைகள் நீங்க,

சம்பந்தன் எனத்தமிழ் தேக்கிய பெருமாளே. ...
திருஞானசம்பந்தனாக** அவதரித்து தமிழை நிரம்பப் பருகி தேவாரமாக
உலகுக்குத் தந்த பெருமாளே.


* முருகன் சிதம்பரத்தில் நடனமாடிய குறிப்பு பல திருப்புகழ்ப் பாடல்களில் வருகிறது.


** சைவக் குரவர் நால்வரில் ஒருவரான சம்பந்தர் முருகனின் அவதாரம் என்று
சுவாமிகள் உறுதியாக நம்புகிறார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.656  pg 3.657  pg 3.658  pg 3.659 
 WIKI_urai Song number: 1281 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1282 - enbandha vinai (common)

enbandha vinaith thodar pOkki ...... vijaiyamAgi

inbandhanai utru mahApriyam ...... adhuvAgi

anbundhiya poRkiNi pARkadal ...... amudhAna

anthanthanil ichchaikoL ARpadham ...... aruLvAyE

munpundhi ninaithth uruvAR siRu ...... vadivAgi

mun thindhiyenap baradhAth thuda ...... natamAdith

thambandham aRaththava nORpavar ...... kuRaitheera

sambandhan enath thamizh thEkkiya ...... perumALE.

......... Meaning .........

enbandha vinaith thodar pOkki vijaiyamAgi: I should conquer the bondage of my karma and attachments by severing it.

inbandhanai utru mahApriyam adhuvAgi: I should reach a blissful state of mind and remain highly devoted.

anbundhiya poRkiNi pARkadal amudhAna anthanthanil: Propelled by love, I must desire to taste the Divine Nectar of Sublime ecstacy in the golden cup of my heart,

ichchaikoL ARpadham aruLvAyE: and to accomplish that, the basic foundation must be provided by You!

mun pundhi ninaithth uruvAR siRu vadivAgi: Once, with the thought of destroying SUran, You took the form of a little boy (BAla KumAran),

mun thindhiyenap baradhAth thuda natamAdith: and, after killing SUran, You danced to the meter of "Dhin Dhi" according to Bharatha Natya rules*!

thambandham aRaththava nORpavar kuRaitheera: In order to fulfill the desires of Your devotees who do penance for removal of their bondages,

sambandhan enath thamizh thEkkiya perumALE.: You came into this world as ThirugnAna Sambandhan**, learned the essence of Tamil and composed immortal hymns (ThEvAram) for the benefit of the world, Oh Great One!


* The dancing pose of Murugan at Chidhambaram has been described by SwAmigaL in many songs.


** SwAmigal firmly believes that Sambandhar, one of the four Saivite Pillars, is none other than the incarnation of Murugan.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1282 enbandha vinai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]