திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1277 வரிவிழி பூசலாட (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1277 varivizhipUsa (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தான தான, தனதன தான தான தனதன தான தான ...... தனதான ......... பாடல் ......... வரிவிழி பூச லாட இருகுழை யூச லாட வளர்முலை தானு மாட ...... வளையாட மணிவட மாலை யாட முருகவி ழோதி யாட மதுரமு தூறி வீழ ...... அநுராகம் இருவரு மேக போக மொருவர்த மாக மாக இதமொடு கூடி மாயை ...... படுபோதும் இருகர மாறு மாறு மறுமுக நீப மார்பு மிருகழல் தானு நானு ...... மறவேனே திருநட மாடு காளி பயிரவி மோடி சூலி திரிபுர நீற தாக ...... அனல்மோதுஞ் சிவைகயி லாச வாசி மலைமகள் நாரி பாரி திருமுலை யாயி தாயி ...... யருள்பாலா குருபர நாத னாகி யரனொரு காதி லோது குணநிதி யாசை நேச ...... முருகோனே குறமக ளார பார முகிழ்முலை மீது தாது குலவிய மாலை மேவு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... வரி விழி பூசல் ஆட இரு குழை ஊசலாட ... ரேகைகளைக் கொண்ட கண்கள் காமப் போரை விளைவிக்க, இரண்டு குண்டலங்களும் ஊஞ்சல் ஆடுவது போல் ஆட, வளர் முலை தானும் ஆட வளை ஆட மணி வட மாலை ஆட முருகு அவிழ் ஓதி ஆட ... எழுந்தோங்கு மார்பகங்களும் ஆட, வளையல்கள் ஆட, ரத்தின சரங்களாகிய மாலைகள் ஆட, நறுமணம் வீசிக் கமழும் கூந்தல் ஆடி அலைய, மதுர அமுது ஊறி வீழ அனுராகம் இருவரும் ஏக போகம் ஒருவர் தம் ஆகம் ஆக ... இனிமையான அமுதம் ஊறுகின்ற மொழிகள் சிதறி வெளிவர, காமப் பற்றுடன் ஆணும் பெண்ணுமாகிய இருவரும் ஒன்றாய்க் கலத்தலில் இருவர் உடல்களும் ஓருடலாக, இதமொடு கூடி மாயை படு போதும் இரு கரம் ஆறும் ஆறும் அறு முக(ம்) நீப(ம்) மார்பும் இரு கழல் தானு(ம்) நானு(ம்) மறவேனே ... இவ்வாறு இன்ப சுகத்துடன் கூடிப் புணர்ந்து உலக மாயையில் நான் அகப்பட்டிருக்கும் போதும், பெருமை பொருந்திய உனது பன்னிரண்டு கைகளும், ஆறு திரு முகங்களும், கடப்ப மாலை அணிந்துள்ள மார்பும், இரண்டு திருவடிகளும் நான் மறக்க மாட்டேன். திரு நடம் ஆடும் காளி பயிரவி மோடி சூலி திரிபுர(ம்) நீறு அதாக அனல் மோதும் சிவை ... திருநடனம் ஆடுகின்ற காளி, பைரவி, துர்க்கை, சூலம் ஏந்தியவள், திரிபுரங்களையும் சாம்பல் ஆகும்படி நெருப்பை வீசித் தாக்கிய சிவாம்பிகை, கயிலாச வாசி மலை மகள் நாரி பாரி திரு முலை ஆயி தாயி அருள் பாலா ... கைலாயத்தில் வாழ்பவள், இமயமலையின் குமாரி, நாரீமணியாகிய பெரியவள், திருமுலைப் பால் தந்த தாய் பார்வதி பெற்றருளிய குழந்தையே, குரு பர நாதன் ஆகி அரன் ஒரு காதில் ஓது குணநிதி ஆசை நேச முருகோனே ... குருபர மூர்த்தியாய் சிவபெருமானது செவியில் பிரணவத்தை உபதேசம் செய்த குணச் செல்வனே, அன்பும் நண்பும் மிகக் கொண்ட முருகவேளே, குற மகள் ஆரம் பார முகிழ் முலை மீது தாது குலவிய மாலை மேவு பெருமாளே. ... குறமகளாகிய வள்ளியின் முத்துமாலை அணிந்ததும், பாரமானதும், வெளித் தோன்றுவதுமான மார்பகங்களின் மேல், மகரந்தப் பொடி படியும் உனது மாலைகள் பொருந்தப் பெற்ற பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.646 pg 3.647 WIKI_urai Song number: 1276 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1277 - varivizhi pUsalAda (common) varivizhi pUsa lAda irukuzhai yUsa lAda vaLarmulai thAnu mAda ...... vaLaiyAda maNivada mAlai yAda murukavi zhOthi yAda mathuramu thURi veezha ...... anurAkam iruvaru mEka pOka moruvartha mAka mAka ithamodu kUdi mAyai ...... padupOthum irukara mARu mARu maRumuka neepa mArpu mirukazhal thAnu nAnu ...... maRavEnE thirunada mAdu kALi payiravi mOdi cUli thiripura neeRa thAka ...... analmOthum sivaikayi lAsa vAsi malaimakaL nAri pAri thirumulai yAyi thAyi ...... yaruLbAlA gurupara nAtha nAki yaranoru kAthi lOthu kuNanithi yAsai nEsa ...... murukOnE kuRamaka LAra pAra mukizhmulai meethu thAthu kulaviya mAlai mEvu ...... perumALE. ......... Meaning ......... vari vizhi pUsal Ada iru kuzhai UsalAda: Their eyes, with reddish capillary blood vessels, wage a war of passion; their twin dangling ear-studs sway like a swing; vaLar mulai thAnum Ada vaLai Ada maNi vada mAlai Ada muruku avizh Othi Ada: their bulging breasts shake; their bangles jingle; their strings of precious gems swerve; exuding fragrance, their hair moves from side to side; mathura amuthu URi veezha anurAkam iruvarum Eka pOkam oruvar tham Akam Aka: sweet, nectar-like words spurt out from their mouth; with romantic attachment, the man and the woman are in unison as if the two bodies have fused into one; ithamodu kUdi mAyai padu pOthum iru karam ARum ARum aRu muka(m) neepa(m) mArpum iru kazhal thAnu(m) nAnu(m) maRavEnE: even while I am enjoying carnal pleasure like this, being ensnared in the worldly delusion, I will never forget Your twelve hallowed arms, six sacred faces, the broad chest wearing the garland of kadappa flowers and the twin lotus feet, Oh Lord! thiru nadam Adum kALi payiravi mOdi cUli thiripura(m) neeRu athAka anal mOthum sivai: She is KALi performing the great dance; She is Bhairavi and Durga, holding the trident in Her hand; She is the Consort of Lord SivA who burnt down Thiripuram turning them to ashes; kayilAsa vAsi malai makaL nAri pAri thiru mulai Ayi thAyi aruL pAlA: Her abode is Mount KailAsh; She is the daughter of Mount HimavAn; She is the greatest gem among women; You are the dear child delivered and breast-fed by that Mother PArvathi, Oh Lord! guru para nAthan Aki aran oru kAthil Othu kuNanithi Asai nEsa murukOnE: As the great Master of Lord SivA, You preached into His ear the PraNava ManthrA, Oh Treasure of all virtues! You are Lord MurugA with immense love and friendship! kuRa makaL Aram pAra mukizh mulai meethu thAthu kulaviya mAlai mEvu perumALE.: She is VaLLi, the damsel of the KuRavAs; on her plumpy and showy bosom, wearing a string of pearls, the pollen grains from the flowers of Your garlands rubs off, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |