திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1278 விழையும் மனிதரை (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1278 vizhaiyummanidharai (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனன தனதனன தனதனன தனதனன தத்தத் தனந்தனம் தத்தத் தனந்தனம் ...... தந்ததான ......... பாடல் ......... விழையுமனி தரையுமுநி வரையுமவ ருயிர் துணிய வெட்டிப் பிளந்துளம் பிட்டுப் பறிந்திடுஞ் ...... செங்கண்வேலும் விரையளக முகிலுமிள நகையும்ருக மதகனவி சித்ரத் தனங்களுந் தித்தித்த தொண்டையும் ...... புண்டரீகச் சுழிமடுவு மிடையுமழ கியமகளிர் தருகலவி சுட்டித் திரிந்திஙன் தட்டுப் படுங்கொடும் ...... பங்கவாழ்வுந் தொலைவில்பிற வியுமகல வொருமவுன பரமசுக சுத்தப் பெரும்பதஞ் சித்திக்க அன்புடன் ...... சிந்தியாதோ எழுதரிய அறுமுகமு மணிநுதலும் வயிரமிடை யிட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களுந் ...... துங்கநீள்பன் னிருகருணை விழிமலரு மிலகுபதி னிருகுழையும் ரத்நக் குதம்பையும் பத்மக் கரங்களுஞ் ...... செம்பொனூலும் மொழிபுகழு முடைமணியு மரைவடமு மடியிணையு முத்தச் சதங்கையுஞ் சித்ரச் சிகண்டியுஞ் ...... செங்கைவேலும் முழுதுமழ கியகுமர கிரிகுமரி யுடனுருகு முக்கட் சிவன்பெருஞ் சற்புத்ர வும்பர்தந் ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... விழையும் மனிதரையும் முநிவரையும் அவர் உயிர் துணிய வெட்டிப் பிளந்து ... தம்மீது ஆசை கொண்ட மனிதர்களையும், முனிவர்களையும் கூட, அவர்களுடைய உயிரே அறுபடும்படி இரக்கமின்றி வெட்டிப் பிளந்து, உ(ள்)ளம் பிட்டுப் பறிந்திடும் செம் கண் வேலும் ... மனத்தையும் பறித்துப் பிடுங்குகின்ற சிவந்த கண்களாகிய வேலும், விரை அளகம் முகிலும் இள நகையும் ம்ருகமத கனவிசித்ரத் தனங்களும் ... நறு மணம் கொண்டுள்ள, மேகம் போல் கரிய கூந்தலும், புன் சிரிப்பும், கஸ்தூரி அணிந்த பெருத்த, அதிசயிக்கத் தக்க மார்பகங்களும், தித்தித்த தொண்டையும் புண்டரீகச் சுழி மடுவும் இடையும் ... இனிக்கும் குரலும், தாமரை போன்ற குழிந்துள்ள கொப்பூழ்த் தடமும், இடுப்பும், அழகிய மகளிர் தரு கலவி சுட்டித் திரிந்து ... இவை எல்லாம் கொண்டு அழகு நிறைந்த விலைமாதர்கள் தருகின்ற புணர்ச்சி இன்பத்தை வேண்டித் திரிந்து, இங்ஙன் தட்டுப் படும் கொடும் பங்க வாழ்வும் தொலைவு இல் பிறவியும் அகல ... இந்த விதமாகத் தடை படுகின்ற கொடுமையான இடர் நிறைந்த வாழ்க்கையும், முடிவே இல்லாத பிறப்புக்களும் என்னை விட்டு நீங்க, ஒரு மவுன பரம சுக சுத்தப் பெரும் பதம் சித்திக்க அன்புடன் சிந்தியாதோ ... ஒப்பற்ற மெளுனமாகிய, மேலான சுகமான, பரிசுத்தமான பெரிய திருவடி எனக்குக் கிடைக்குமாறு நீ அன்புடன் நினைக்கக் கூடாதோ? எழுத அரிய அறுமுகமும் அணி நுதலும் வயிரம் இடையிட்டுச் சமைந்த செம் சுட்டிக் கலன்களும் ... எழுத முடியாத எழிலுடைய ஆறு திரு முகங்களும், அழகிய நெற்றியும், வைரம் மத்தியில் பொதிக்கப்பட்டு அமைந்துள்ள செவ்விய சுட்டி முதலிய அணிகலன்களும், துங்க நீள் பன்னிரு கருணை விழி மலரும் இலகு பதினிரு குழையும் ... பரிசுத்தமான, நீண்ட பன்னிரண்டு கருணை பொழியும் கண் மலர்களும், விளங்கும் பன்னிரண்டு குண்டலங்களும், ரத்நக் குதம்பையும் பத்மக் கரங்களும் செம் பொன் நூலும் ... ரத்னக் காதணியும், தாமரை போன்ற கைகளும், செம்பொன்னால் ஆகிய பூணூலும், மொழி புகழும் உடை மணியும் அரை வடமும் அடி இணையும் ... சொல்லிப் புகழத் தக்க உடை மணியும், அரையில் கட்டிய நாணும், இரு திருவடிகளும், முத்தச் சதங்கையும் சித்ரச் சிகண்டியும் செம் கை வேலும் முழுதும் அழகிய குமர ... முத்தாலான கிண்கிணியும், அழகிய மயிலும், திருக் கரத்தில்வேலாயுதமும், (இவ்வாறு) முழுதும் அழகு மயமாக உள்ள குமரனே, கிரி குமரியுடன் உருகும் முக்கண் சிவன் பெறும் சற் புத்ர ... இமய மலையின் மகளாகிய பார்வதிக்காக மனம் நெகிழ்ந்த முக்கண்ணனாகிய சிவ பெருமான் பெற்ற நற்குணம் பொருந்திய பிள்ளையே, உம்பர் தம் தம்பிரானே. ... தேவர்களின் தம்பிரானே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.646 pg 3.647 pg 3.648 pg 3.649 pg 3.650 pg 3.651 WIKI_urai Song number: 1277 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 1278 - vizhaiyum manidharai (common) vizhaiyu manidharaiyu munivaraiyum avar uyir thuNiya vettip piLandhuLam pittup paRindhidum ...... senkaN vElum virai aLaga mugilum iLanagaiyu mrugamadha gana vi chithrath thanangaLum thiththithath thoNdaiyum ...... pundareeka suzhimaduvum idaiyum azhagiya magaLir tharu kalavi suttith thirindhingan thattuppadu kodum ...... pangavAzhvum tholaivil piRaviyum agala oru mavuna paramasuka sudhdha perumpadhan sidhdhikka anbudan ...... chinthiyAdhO ezhudhariya aRumugamu maNinudhalum vayiramidai ittuch samaindha sensuttik kalangaLum ...... thunganeeL pan nirukaruNai vizhimalarum ilagu padhiniru kuzhaiyum rathna kudhambaiyum padhmak karangaLum ...... sempon nUlum mozhipugazhum udaimaNiyum araivadamum adiyiNaiyu muththach chadhangaiyum chithrach chikaNdiyum ...... senkai vElum muzhudhum azhagiya kumara girikumari udan urugu mukkat sivanpeRun saRputhra umbarthan ...... thambirAnE. ......... Meaning ......... vizhaiyu manidharaiyu munivaraiyum avar uyir thuNiya vettip piLandhu: Hacking to death the men and even the sages who fall for them, uLam pittup paRindhidum senkaN vElum: their hearts are also snatched away by those reddish spear-like eyes; virai aLaga mugilum iLanagaiyu mrugamadha gana vichithrath thanangaLum: their fragrant hair like the dark cloud, their smile, their large and wondrous bosom splashed with the paste of musk; thiththithath thoNdaiyum pundareeka suzhimaduvum idaiyum: their sweet voice; their concave navel shaped like a lotus; their (slender) waist; azhagiya magaLir tharu kalavi suttith thirindhu: - with all these beautiful features, the whores offer carnal pleasure; roaming all around in search of it, ingan thattuppadu kodum pangavAzhvum tholaivil piRaviyum agala: my life is cut short by such cruel distractions. To end this miserable life and to eradicate the endless recurrence of birth, oru mavuna paramasuka sudhdha perumpadhan sidhdhikka anbudan chinthiyAdhO: will You not kindly consider granting me Your hallowed and grand feet, the seat of matchless tranquility and supreme bliss? ezhudhariya aRumugamu maNinudhalum vayiramidai ittuch samaindha sensuttik kalangaLum: Your six hallowed faces whose beauty is beyond description, the elegant forehead, the exquisitely dainty jewels studded with diamonds, thunganeeL pannirukaruNai vizhimalarum ilagu padhiniru kuzhaiyum: the twelve pure and long flower-like eyes showering compassion, the twelve graceful hanging ear-rings, rathna kudhambaiyum padhmak karangaLum sempon nUlum: the studs made of gems, lotus-like hands, the reddish golden sacred thread, mozhipugazhum udaimaNiyum araivadamum adiyiNaiyu: the praiseworthy beads of gems on Your outfit, the waist-band, Your holy feet, muththach chadhangaiyum chithrach chikaNdiyum senkai vElum muzhudhum azhagiya kumara: Your lilting anklets with pearls set inside, Your beautiful Peacock, and the Spear in Your hand - all these aspects of Yours are splendid, Oh Kumara! girikumari udan urugu mukkat sivanpeRun saRputhra umbarthan thambirAnE.: You are the virtuous son of the three-eyed Lord SivA who dotes on PArvathi, the daughter of HimavAn! You are the Lord of all the celestials, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |