திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1276 வரிபரந் திரண்டு (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1276 variparanthiraNdu (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனந் தனந்த தனதனந் தனந்த தனதனந் தனந்த ...... தனதான ......... பாடல் ......... வரிபரந் திரண்டு நயனமுஞ் சிவந்து வதனமண் டலங்கள் ...... குறுவேர்வாய் மணிசிலம் பலம்ப அளகமுங் குலைந்து வசமழிந் திழிந்து ...... மயல்கூர இருதனங் குலுங்க இடைதுவண் டனுங்க இனியதொண் டையுண்டு ...... மடவார்தோள் இதமுடன் புணர்ந்து மதிமயங் கினும்பொ னிலகுநின் பதங்கள் ...... மறவேனே விரிபரந் தியங்கு முததியுங் கலங்க விடமினும் பிறந்த ...... தெனவானோர் வெருவிநெஞ் சமஞ்சி யுரனொடுந் தயங்கி விரைபதம் பணிந்து ...... முறையோவென் றுரைமறந் துணங்க அயில்தொடும் ப்ரசண்ட உயர்தலங் குலுங்க ...... வருதோகை ஒருபெருஞ் சிகண்டி மயிலமர்ந் திலங்கி உலகமும் புரந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... வரி பரந்து இரண்டு நயனமும் சிவந்து வதன மண்டலங்கள் குறு வேர்வாய் ... ரேகைகள் பரந்துள்ள இரண்டு கண்களும் சிவப்பாகி, முக வட்டம் சிறு வேர்வைத் துளிகளைக் கொண்டதாய், மணி சிலம்பு அலம்ப அளகமும் குலைந்து வசம் அழிந்து இழிந்து மயல் கூர ... ரத்தினச் சிலம்பு ஒலிக்க, கூந்தலும் சரிந்து கலைய, தன் வசம் கெட்டு இழி நிலையை அடைந்து காமப் பித்து மிக, இரு தனம் குலுங்க இடை துவண்டு அனுங்க இனிய தொண்டை உண்டு மடவார் தோள் இதமுடன் புணர்ந்து மதி மயங்கினும் ... இரண்டு மார்பகங்களும் குலுங்கி அசைய, இடை நெகிழ்ந்து வருந்த, இனிமையான வாயூறலைப் பருகி, மாதர்களின் தோள்களை இன்பச் சுவையுடன் அணைந்து சேர்ந்து என் புத்தி கெட்டுப் போனாலும், பொன் இலகு நின் பதங்கள் மறவேனே ... தங்க மயமான உன்னுடைய திருவடிகளை நான் மறக்க மாட்டேன். விரி பரந்து இயங்கும் உததியும் கலங்க விடம் இ(ன்)னும் பிறந்தது என வானோர் வெருவி நெஞ்சம் அஞ்சி உரனொடும் தயங்கி ... விரிந்து பரந்து அசைகின்ற கடலும் கலக்கம் உற, ஆலகால விஷம் தான் மீண்டும் பிறந்து விட்டதோ என்று தேவர்கள் அச்சமுற்று உள்ளம் பயந்து, திண்மையும் குலைந்து, விரை பதம் பணிந்து முறையோ என்று உரை மறந்து உணங்க அயில் தொடும் ப்ரசண்ட ... உனது நறு மணம் வீசும் திருவடிகளைப் பணிந்து வணங்கி, முறையோ என்று ஓலமிட்டு இன்னது சொல்லுவதென்று அறியாது சிந்தை வாடி நிற்க, வேலைச் செலுத்திய வீரனே, உயர் தலம் குலுங்க வரு தோகை ஒரு பெரும் சிகண்டி மயில் அமர்ந்து இலங்கி உலகமும் புரந்த பெருமாளே. ... சிறந்த பூமிகள் எல்லாம் குலுங்கி அசையும்படியாக வந்த தோகை உடைய, ஒப்பற்ற பெரிய சிகண்டி என்னும் பெயரை உடைய மயில் மேல் வீற்றிருந்து விளங்கி, உலகத்தைக் காத்த பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.644 pg 3.645 WIKI_urai Song number: 1275 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1276 - variparandhu (common) variparan thiraNdu nayanamunj chivanthu vathanamaN dalangaL ...... kuRuvErvAy maNisilam palampa aLakamum kulainthu vasamazhin thizhinthu ...... mayalkUra iruthanang kulunga idaithuvaN danunga iniyathoN daiyuNdu ...... madavArthOL ithamudan puNarnthu mathimayan ginumpo nilakunin pathangaL ...... maRavEnE viriparan thiyangu muthathiyum kalanga vidaminum piRantha ...... thenavAnOr veruvinen jamanji yuranodun thayangi viraipatham paNinthu ...... muRaiyOven RuraimaRan thuNanga ayilthodum prasaNda uyarthalam kulunga ...... varuthOkai oruperum sikaNdi mayilamarn thilangi ulakamum purantha ...... perumALE. ......... Meaning ......... vari paranthu iraNdu nayanamum sivanthu vathana maNdalangaL kuRu vErvAy: Both their eyes, filled with capillary blood vessels, became very red; their circular face perspired, covered with little beads of sweat; maNi silampu alampa aLakamum kulainthu vasam azhinthu izhinthu mayal kUra: their anklets, embedded with gems, made a jingling sound; their hair became loose, sliding down; they lost their self-control, being obsessed with passion; iru thanam kulunga idai thuvaNdu anunga iniya thoNdai uNdu madavAr thOL ithamudan puNarnthu mathi mayanginum: both their breasts shook; their waist caved in, becoming sore; imbibing their sweet saliva, I hugged the shoulders of those whores losing my mind; nonetheless, pon ilaku nin pathangaL maRavEnE: I would never forget Your golden and hallowed feet, Oh Lord! viri paranthu iyangum uthathiyum kalanga vidam i(n)num piRanthathu ena vAnOr veruvi nenjam anji uranodum thayangi: When the wide expanse of sea was stirred with great agitation, the celestials wondered if the AlakAla poison was forming again for the second time, becoming scared and losing their confidence; virai patham paNinthu muRaiyO enRu urai maRanthu uNanga ayil thodum prasaNda: they fell on Your fragrant and hallowed feet and screamed asking if it were fair; they did not know what else to say and stood there in absolute shock with a depressed mind when You wielded Your Spear, Oh valorous One! uyar thalam kulunga varu thOkai oru perum sikaNdi mayil amarnthu ilangi ulakamum purantha perumALE.: All the great worlds shuddered when Your matchless peacock, named SikaNdi, flew with its feathers raised; mounting that peacock and seated on it elegantly, You protected the world, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |