திருப்புகழ் 1272 மாதர் மயல் தனில்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1272 mAdharmayalthanil  (common)
Thiruppugazh - 1272 mAdharmayalthanil - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தனத்ததந்த, தானதன தனத்ததந்த
     தானதன தனத்ததந்த ...... தனதான

......... பாடல் .........

மாதர்மயல் தனிற்கலந்து காமபனி யெனப்புகுந்து
     மாடவிய லெனச்சுழன்று ...... கருவூறி

மாறிபல வெனச்சுமந்து தேனுகுட மெனத்திரண்டு
     மாதமிது வெனத்தளர்ந்து ...... வெளியாகி

வேதபுவி தனிற்கழன்று ஏனமென வெனத்தவழ்ந்து
     வீறுமணி களைப்புனைந்து ...... நடைமேலாய்

வேணவித மெனத்திரிந்து நாறுபுழு குடற்றிமிர்ந்து
     வேசிவலை தனிற்கலந்து ...... மடிவேனோ

ஆதிசர ணெனக்கயங்கு லாவமுத லையைக்கிடங்கி
     லாரவுடல் தனைப்பிளந்த ...... அரிநேமி

ஆமைகய லெனச்செயங்கொள் கோலகுற ளரித்தடங்கை
     யானஅர வணைச்சயந்தன் ...... மருகோனே

சோதியுரு வெனத்திரண்டு கோலஅரு ணையிற்கலந்த
     சோமனணி குடிற்சிலம்ப ...... னருள்பாலா

தோகைமயி லெனச்சிறந்த ரூபிகுற மகட்கிரங்கி
     தோள்களிறு கிடப்புணர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மாதர் மயல் தனில் கலந்து காம பனி எனப் புகுந்து ...
பெண்ணோடு காம மயக்கத்தில் ஈடுபட்டு, அன்பினால் ஏற்பட்ட பனி
போல ஒரு துளி உட்சென்று,

மாட(ம்) இயல் எனச் சுழன்று கரு ஊறி ... ஓர் உளுந்து போலச்
சுழற்சி உற்று, கர்ப்பத்தில் ஊறி,

மாறி பல(லா) எனச் சுமந்து தேனு குடம் எனத் திரண்டு ...
உருவம் மாறுதல் ஏற்பட்டு, பலாப் பழம் போல ஆன வயிற்றைச் சுமந்து,
பசுவின் பனிக்குடம் போலப் பருத்து,

மாதம் இது எனத் தளர்ந்து வெளி ஆகி வேத புவி தனில்
கழன்று
... பேறு காலம் வந்தது என்று கூற, வயிறு தளர்ந்து,
குழந்தையாக வெளிப்பட்டு, வேதத்தில் சொல்லப்பட்ட இந்தப் பூமியில்
விழுந்து பிறந்து,

ஏனம் என எனத் தவழ்ந்து வீறு மணிகளைப் புனைந்து நடை
மேலாய்
... பன்றிக்குட்டி புரள்கிறது போல உள்ளது என்று
சொல்லும்படித் தவழ்ந்து, ஒளி வீசும் மணிகளை, அணிந்து கொண்டு,
நடைகள் மிகவும் பழகி,

வேண விதம் எனத் திரிந்து நாறு புழுகு உடல் திமிர்ந்து வேசி
வலை தனில் கலந்து மடிவேனோ
... மனம் போன போக்கின்படிப்
பலவகையாகத் திரிந்து, நறுமணம் வீசும் புனுகு வாசனைப் பண்ட
வகைகளை உடலில் பூசி, விலைமாதர்களின் வலையில் அகப்பட்டு
இறந்து படுவேனோ?

ஆதி சரண் எனக் கயம் குலாவு அ(ம்) முதலையைக் கிடங்கில்
ஆர உடல் தனைப் பிளந்த அரி நேமி
... ஆதி மூலமே,
அடைக்கலம் என்று (கஜேந்திரன் என்னும்) யானை கொண்டாடிக்
கூப்பிட, (அதைப் பற்றி நின்ற) முதலையை மடுவில் உடலை நன்றாகப்
பிளந்த சக்கரத்தை ஏந்திய திருமால்,

ஆமை கயல் எனச் செயம் கொள் கோல குறள் அரித்தடங்கை
யான அரவணை சயந்தன் மருகோனே
... ஆமை, கயல் மீன்
என்றும், வெற்றி கொண்ட பன்றி, வாமனர், விசாலமான கைகள் உடைய
நரசிங்கம் என்றும் அவதாரங்கள் எடுத்த திருமால், பாம்பு அணையில்
பள்ளி கொண்டவன் ஆகிய திருமாலின் மருகனே,

சோதி உரு எனத் திரண்டு கோல அருணையில் கலந்த
சோமன் அணி குடில் சிலம்பன் அருள் பாலா
... ஜோதி
உருவத்துடன் பிழம்பாக, அழகிய திருவண்ணாமலையில் தோன்றி
நின்றவனும், நிலவை (சடையில்) அணிந்தவனுமான, கயிலை
மலைவாசன் ஆகிய சிவபெருமான் அருளிய குழந்தையே,

தோகை மயில் எனச் சிறந்த ரூபி குற மகட்கு இரங்கி
தோள்கள் இறுகிடப் புணர்ந்த பெருமாளே.
... கலாபம் கொண்ட
மயில் போல விளங்கும் உருவத்தினளாகிய குறப் பெண் வள்ளியிடம்
பேரன்பு வைத்து, தோள்களை அழுந்த அணைத்து, அவளுடன் சேர்ந்த
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.634  pg 3.635  pg 3.636  pg 3.637 
 WIKI_urai Song number: 1271 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1272 - mAdhar mayal thanil (common)

mAtharmayal thaniRkalanthu kAmapani yenappukunthu
     mAdaviya lenacchuzhanRu ...... karuvURi

mARipala venacchumanthu thEnukuda menaththiraNdu
     mAthamithu venaththaLarnthu ...... veLiyAki

vEthapuvi thaniRkazhanRu Enamena venaththavazhnthu
     veeRumaNi kaLaippunainthu ...... nadaimElAy

vENavitha menaththirinthu nARupuzhu kudatRimirnthu
     vEsivalai thaniRkalanthu ...... madivEnO

Athisara Nenakkayamku lAvamutha laiyaikkidangi
     lAravudal thanaippiLantha ...... arinEmi

Amaikaya lenaccheyamkoL kOlakuRa Lariththadangai
     yAnAra vaNaicchayanthan ...... marukOnE

sOthiyuru venaththiraNdu kOlAru NaiyiRkalantha
     sOmanaNi kudiRchilampa ...... naruLbAlA

thOkaimayi lenacchiRantha rUpikuRa makatkirangi
     thOLkaLiRu kidappuNarntha ...... perumALE.

......... Meaning .........

mAthar mayal thanil kalanthu kAma pani enap pukunthu mAda(m) iyal enas suzhanRu karu URi: Out of a passionate union with a woman, a dew-like drop of love enters the body; it goes through the gyration like a grain of lentil and soaks in the womb;

mARi pala(a) enac chumanthu thEnu kudam enath thiraNdu: it undergoes a metamorphosis, and a jack-fruit-like abdomen is carried which swells like the stomach of a pregnant cow;

mAtham ithu enath thaLarnthu veLi Aki vEtha puvi thanil kazhanRu: at the stipulated time of delivery, the belly loosens, and the baby is born, coming out and falling gently on the earth described in the scriptures;

Enam ena enath thavazhnthu veeRu maNikaLaip punainthu nadai mElAy: the crawling of the child is compared by people to the rolloing over of a swine; wearing bright ornaments embedded with gems, the child learns to toddle in many a gait;

vENa vitham enath thirinthu nARu puzhuku udal thimirnthu vEsi valai thanil kalanthu madivEnO: (growing up,) he roams about in several ways to wherever his mind directs, smearing many fragrant perfumes like the musk on his body; will I also be ensnared in the net spread out by the whores and eventually face my death?

Athi saraN enak kayam kulAvu a(m) muthalaiyaik kidangil Ara udal thanaip piLantha ari nEmi: When the elephant (GajEndran) implored ardently calling Him "Oh Primordial Lord, I seek refuge in You", He destroyed the crocodile (that grabbed the elephant) by utterly splitting it into two with the disc held in His Hand; He is Lord VishNu;

Amai kayal enas seyam koL kOla kuRaL ariththadamkai yAna aravaNai sayanthan marukOnE: He incarnated as the turtle, kayal fish, the triumphant boar, the dwarf (VAmanar) and Narasimham (Man-Lion) with widespread hands; He is the Lord slumbering on a serpent-bed; and You are the nephew of that Lord VishNu!

sOthi uru enath thiraNdu kOla aruNaiyil kalantha sOman aNi kudil silampan aruL pAlA: He stood in ThiruvaNNAmalai in the form of a dazzling effulgence; He wears the crescent moon (on His matted hair); His abode is Mount KailAsh; and You are the child of that Lord SivA!

thOkai mayil enas siRantha rUpi kuRa makadku irangki thOLkaL iRukidap puNarntha perumALE.: She looks like the peacock with a beautiful plume; You lovingly hugged the shoulders of that VaLLi, the damsel of the KuRavAs, and united with her, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1272 mAdhar mayal thanil - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]