திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1273 முத்து மணி ஆரம் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1273 muththumaNiAram (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்ததன தானனத் தத்ததன தானனத் தத்ததன தானனத் ...... தனதான ......... பாடல் ......... முத்துமணி யாரமொய்த் திட்டஇரு கோடுமுற் பட்டகரி போலுமத் ...... தனமாதர் முற்றுமதி யார்முகத் துற்றமுனை வேலுறப் பட்டுமுகில் போல்மனத் ...... திருள்மூடிச் சுத்தமதி போய்வினைத் துட்டனவ னாய்மனத் துக்கமுற வேமிகச் ...... சுழலாதே சொற்கள்பல நாவினிற் றொட்டுனிரு தாடொழச் சொற்கமல வாழ்வுசற் ...... றருள்வாயே கொத்துமுடி யானபத் தற்றுவிழ வேகுறிப் புற்றஅதி கோபனச் ...... சுதன்மாயன் கொற்றமரு காகுறக் கொச்சைமற மாதினுக் கிச்சைமொழி கூறுநற் ...... குமரேசா பத்தியுட னேநினைத் தெத்துமடி யார்வினைப் பற்றுவிடு மாமறைப் ...... பொருளானாய் பத்திவர ஞானசொற் கற்றவர்கள் பாடுநற் பக்ஷபத தேவர்மெய்ப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... முத்து மணி ஆரம் மொய்த்திட்ட இரு கோடும் முற்பட்ட கரி போலும் அத் தன மாதர் ... முத்தாலும், ரத்தினத்தாலும் ஆன மாலைகள் நெருங்கியுள்ள இரண்டு மலைகள் போலவும், எதிர்த்து வரும் யானைகள் போலவும் உள்ள அந்த மார்பகங்களை உடைய விலைமாதர்களின் முற்று மதி ஆர் முகத்து உற்ற முனை வேல் உறப் பட்டு முகில் போல் மனத்து இருள் மூடி ... பூரண சந்திரன் போன்ற முகத்தில் உள்ள கூரிய வேல் போன்ற கண்களால் தாக்கப்பட்டு, கரிய மேகம் போல் மனத்தில் அஞ்ஞான இருள் வந்து மூடி, சுத்த மதி போய் வினைத் துட்டன் அவனாய் மனத் துக்கம் உறவே மிகச் சுழலாதே ... தெளிவான தூய அறிவு போய் செயலில் துஷ்டத்தனம் உடையவனாய், மனத்தில் துக்கம் கொண்டவனாய் மிகவும் கலக்கம் உறாமல், சொற்கள் பல நாவினில் தொட்டு உன் இரு தாள் தொழச் சொல் கமல வாழ்வு சற்று அருள்வாயே ... பல வகையான சொற்களை நாவால் தொடுத்து, பாடித் துதித்து, உனது இரு திருவடிகளைத் தொழ, புகழ் மிக்க தாமரைப் பாதங்களை கொஞ்சம் தயை புரிந்து அருள் செய்வாயாக. கொத்து முடியான பத்து அற்று விழவே குறிப்பு உற்ற அதி கோபன் அச்சுதன் மாயன் கொற்ற மருகா ... (ராவணனுடைய) கொத்தாக இருந்த பத்துத் தலைகளும் அறுபட்டு விழ, குறி வைத்து அம்பு எய்த, மிக்க கோபம் கொண்டவனாகிய அச்சுதனாம் ராமன், மாயவனின் (திருமாலின்) வீரம் வாய்ந்த மருகனே, குறக் கொச்சை மற மாதினுக்கு இச்சை மொழி கூறு நல் குமரேசா ... குறக் குலத்துச் சாதாரண வேட்டுவப் பெண்ணாம் வள்ளிக்கு காம இச்சை காட்டும் பேச்சுக்களைப் பேசிய நல்ல குமரனே, பத்தியுடனே நினைத்து எத்தும் அடியார் வினைப் பற்று விடு(ம்) மா மறைப் பொருள் ஆனாய் ... பக்தியுடன் உன்னைத் தியானித்துப் போற்றும்அடியார்களுடைய வினைப் பற்றைப் போக்க வல்ல சிறந்த வேதப் பொருள் ஆனவனே, பத்தி வர ஞானம் சொல் கற்றவர்கள் பாடு நல் பக்ஷபத தேவர் மெய்ப் பெருமாளே. ... பக்தி, சிறந்த ஞானம் இவைகளைக் கொண்ட சொற்களைக் கற்றவர்கள் பாடுகின்ற நல்ல அன்புக்கு உரியவனே, தேவர்களின் உண்மைப் பொருளான பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.636 pg 3.637 pg 3.638 pg 3.639 WIKI_urai Song number: 1272 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 1273 - muththu maNi Aram (common) muththumaNi yAramoyth thittairu kOdumuR pattakari pOlumath ...... thanamAthar mutRumathi yArmukath thutRamunai vEluRap pattumukil pOlmanath ...... thiruLmUdi suththamathi pOyvinaith thuttanava nAymanath thukkamuRa vEmikac ...... chuzhalAthE soRkaLpala nAvinit Rottuniru thAdozhac choRkamala vAzhvusat ...... RaruLvAyE koththumudi yAnapath thatRuvizha vEkuRip putRAthi kOpanac ...... chuthanmAyan kotRamaru kAkuRak kocchaimaRa mAthinuk kicchaimozhi kURunaR ...... kumarEsA paththiyuda nEninaith theththumadi yArvinaip patRuvidu mAmaRaip ...... poruLAnAy paththivara njAnasoR katRavarkaL pAdunaR pakshapatha thEvarmeyp ...... perumALE. ......... Meaning ......... muththu maNi Aram moyththitta iru kOdum muRpatta kari pOlum ath thana mAthar: The bosom of the whores looks like two mountains adorned with snugly entwined necklaces studded with pearls and rubies and like raging elephants; mutRu mathi Ar mukaththu utRa munai vEl uRap pattu mukil pOl manaththu iruL mUdi: upon being attacked by their sharp spear-like eyes on their full-moon-like face, my mind has been darkened by the shadow cast by the black cloud of ignorance; suththa mathi pOy vinaith thuttan avanAy manath thukkam uRavE mikac chuzhalAthE: lest my clear and pure knowledge depart, making my action reckless and mischievous and my mind grief-stricken and confused, soRkaL pala nAvinil thottu un iru thAL thozha chol kamala vAzhvu satRu aruLvAyE: kindly bless me with the ability for my tongue to compose songs with several words in praise of You and to worship Your hallowed feet; for that, You will have to bestow compassionately, even if slightly, Your illustrious lotus feet! koththu mudiyAna paththu atRu vizhavE kuRippu utRa athi kOpan acchuthan mAyan kotRa marukA: The bunch of ten heads (of RAvaNan) was felled down when He wielded His arrow aimed accurately; He is the enraged Lord, Rama, the mystic VishNu; and You are His valorous nephew! kuRak kocchai maRa mAthinukku icchai mozhi kURu nal kumarEsA: You are the one who spoke tantalising and passion-provoking words to the ordinary hunter-girl, VaLLi, who hailed from the lineage of the KuRavAs, Oh Lord Kumara! paththiyudanE ninaiththu eththum adiyAr vinaip patRu vidu(m) mA maRaip poruL AnAy: You are the core principle of the great VEdAs capable of removing Your devotees' attachment to their deeds, who extol You with deep contemplation and devotion! paththi vara njAnam sol katRavarkaL pAdu nal pakshapatha thEvar meyp perumALE.: You are governed by the true love of those who sing Your glory and who have learnt words filled with devoutness and deep knowledge; You are the genuine principle cherished by the celestials, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |