திருப்புகழ் 1270 மலம் தோல் சலம்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1270 malamthOlsalam  (common)
Thiruppugazh - 1270 malamthOlsalam - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்
     தனந்தாத் தனத்தம் ...... தனதான

......... பாடல் .........

மலந்தோற் சலந்தேற் றெலும்பாற் கலந்தீட்
     டிடுங்கூட் டினிற்றங் ...... கிடுமாய

மயங்காத் தியங்காப் பயங்கோட் டிடுங்காற்
     றுடன்போக் குறத்தந் ...... தையுமாதும்

குலந்தாய்க் குடம்பாற் பிறந்தேற் றிடுங்கோத்
     தடங்கூப் பிடத்தம் ...... புவியாவும்

குலைந்தார்ப் பெழுங்காட் டிலந்தாட் களன்பாற்
     குணங்காத் துனைக்கும் ...... பிடஆளாய்

தலந்தாட் டொடண்டாத் தளைந்தார்க் கிளங்காத்
     தடந்தாட் புடைத்தன் ...... பினர்வாழத்

தருங்கூத் தரும்பார்த் துகந்தேத் திடஞ்சாத்
     திரஞ்சாற் றிநிற்கும் ...... பெருவாழ்வே

அலைந்தாற் றெழுங்கோச் சலந்தீக் கலந்தாட்
     டரம்போச் செனக்கன் ...... றிடும்வேலா

அறங்காத் துறங்காத் திறம்பார்த் திருந்தோர்க்
     கயர்ந்தோர்க் களிக்கும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மலம் தோல் சலம் தேற்று எலும்பால் கலந்து ஈட்டிடும்
கூட்டினில் தங்கிடு மாயம்
... மலம், தோல், நீர் ஆகியவைகளும்,
செறிந்துள்ள எலும்பு இவைகளும் கலந்து கூட்டப்பட்ட கூடாகிய இந்த
உடம்பில் தங்கியிருக்கும் மாய வாழ்க்கையில்,

மயங்காத் தியங்காப் பயம்(ன்) கோட்டிடும் காற்றுடன்
போக்குற
... மயங்கியும், சஞ்சலப்பட்டும், பயன் தர வைக்கப்பட்ட
பிராண வாயுவுடன் நீங்க (உடலை விட்டு விலக),

தந்தையு(ம்) மாதும் குலம் தாய்க்கு உடம்பால் பிறந்து
ஏற்றிடும் கோத்து அடம் கூப்பிட
... தந்தையும், மனைவியும்,
சிறந்த தாயுடன், கூடப் பிறந்தவர்களாய் விளங்கும் கூட்டத்தினர்
(உறவினர்கள்) மிகப் பலமாய்க் கூப்பிட,

தம் புவி யாவும் குலைந்து ஆர்ப்பு எழும் காட்டில் ... தாம் வாழ்ந்த
இடத்தில் உள்ள யாவரும் உள்ளம் சோர்வுற்று அழுகை ஓசை எழும்
சுடுகாட்டிலும்,

அம் தாள்கள் அன்பால் குணம் காத்து உனைக் கும்பிட
ஆளாய்
... (உனது) அழகிய திருவடிகளை அன்புடனே நல்ல
குணத்துடன் மனதில் இறுத்தி, உன்னைக் கும்பிட்டு வணங்கும்படி
என்னை ஆட்கொண்டருளுக.

தலம் தாள் தொடு அண்டாத் தளைந்தார்க்கு ... திருவடியாகிய
இடத்தைத் தொட்டு, நெருங்கிக் கட்டிப் பிடித்த அடியவர்களுக்கும்,

இளங்காத் தடம் தாள் புடைத்த அன்பினர் வாழத் தரும்
கூத்தரும் பார்த்து உகந்து ஏத்திட
... இளம் பூஞ்சோலை, குளிர்ந்த
பொய்கை ஆக விளங்கும் திருவடியை ஆரவாரத்துடன் போற்றிய
அன்பர்களுக்கும் வாழ்வுறும்படி உதவுகின்ற கூத்தப் பெருமானும் கண்டு
மகிழ்ந்து போற்றி செய்ய,

அம் சாத்திரம் சாற்றி நிற்கும் பெரு வாழ்வே ... அழகிய
ஞானநூலை சிவனாருக்கு உபதேசித்து நின்ற பெருஞ் செல்வமே,

அலைந்த ஆற்று எழும் கோச் சலம் தீக் கலந்து ஆள் தரம்
போச்சு எனக் கன்றிடும் வேலா
... வெள்ள நீர் அசைந்து ஆற்றில்
எதிர்ந்து எதிரே வந்த உனது சொல் (நீ திருஞான சம்பந்தராக எழுதிவிட்ட
திருப்பாசுர ஏட்டின் பெருமையைக் கண்டு) நீரிலும், நெருப்பிலும் (சபதம்
செய்து போட்டியில்) கலந்து, நமது ஆண்மையும் தொலைந்தது என்று
(சமணர்கள்) சொல்லும்படி (அவர்களைக்) கோபித்த வேலனே,

அறம் காத்து உறங்காத் திறம் பார்த்து இருந்தோர்க்கு
அயர்ந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே.
... தரும நெறியைக்
காப்பாற்ற, தூங்காமலும் சோர்வு அடையாமலும் இருக்கும் வகையைக்
கண்டிருந்த பெரியோர்களுக்கும், (உன்னைப்) பூஜித்து
வழிபடுவோர்களுக்கும் (வரங்களைத்) தருகின்ற பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.630  pg 3.631  pg 3.632  pg 3.633 
 WIKI_urai Song number: 1269 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1270 - malam thOl salam (common)

malanthOR chalanthEt RelumpAR kalantheet
     tidungkUt tinitRang ...... kidumAya

mayangAth thiyangAp payangkOt tidungkAt
     RudanpOk kuRaththan ...... thaiyumAthum

kulanthAyk kudampAR piRanthEt RidungkOth
     thadangkUp pidaththam ...... puviyAvum

kulainthArp pezhungkAt tilanthAt kaLanpAR
     kuNangkAth thunaikkum ...... pidaALAy

thalanthAt todaNdAth thaLainthArk kiLangAth
     thadanthAt pudaiththan ...... pinarvAzhath

tharungkUth tharumpArth thukanthEth thidanjchAth
     thiranjchAt RiniRkum ...... peruvAzhvE

alainthAt RezhungkOc chalantheek kalanthAt
     tarampOc chenakkan ...... RidumvElA

aRangkAth thuRangAth thiRampArth thirunthOrk
     kayarnthOrk kaLikkum ...... perumALE.

......... Meaning .........

malam thOl chalam thEtRu elumpAl kalanthu eettidum kUttinil thangidu mAyam: In this delusory life, the body is a nest with a collection of faeces, skin and water, along with plenty of bones;

mayangAth thiyangAp payam(n) kOttidum kAtRudan pOkkuRa: when this body swoons and suffers, and (ultimately) after the life gas (oxygen) meant for the benefit of the body departs,

thanthaiyu(m) mAthum kulam thAykku udampAl piRanthu EtRidum kOththu adam kUppida: the father, the wife, the great mother and the relatives who are like brothers assemble and call out by name at the top of their voice;

tham puvi yAvum kulainthu Arppu ezhum kAttil: people who live in the same town gather in the cremation ground with a depressed heart and weep loudly;

am thALkaL anpAl kuNam kAththu unaik kumpida ALAy: (even at that time,) kindly take charge of me so that I could hold on to Your hallowed feet firmly with love and purity in my heart and offer my prostration at those feet!

thalam thAL thodu aNdAth thaLainthArkku: Upon those devotees who touch the spot of Your hallowed feet and clasp it tight,

iLangkAth thadam thAL pudaiththa anpinar vAzhath tharum kUththarum pArththu ukanthu Eththida: and upon those loved ones who hail loudly Your holy feet deeming them to be a fresh flowery garden and a cool pond, prosperity is bestowed by Lord SivA, the dancing NadarAja, Who acclaims You happily with an applause;

am sAththiram sAtRi niRkum peru vAzhvE: to that Lord SivA, You preached the great Text of VEdic Knowledge, Oh Great Treasure!

alaintha AtRu ezhum kOc chalam theek kalanthu AL tharam pOcchu enak kanRidum vElA: When the palm-leaf on which You scribed the ManthrA (coming as ThirugnAna Sambandhar) went against the current of the flood water in the river, the ChamaNas who had challenged and vowed against you lost in both competitions on fire and water and felt emasculated by Your rage, Oh Lord with the spear!

aRam kAththu uRangAth thiRam pArththu irunthOrkku ayarnthOrkku aLikkum perumALE.: You grant boons to all those wakeful elders who have found a way to remain tireless so as to preserve the righteous path and to all the devotees who worship You, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1270 malam thOl salam - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]