பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 625 வாழத்தரும் வாழ்வுறும்படி உதவுகின்ற கூத்தரும் - கூத்தப் பிரானாம் சிவபிரானும், பார்த்து மகிழ்ந்து (ஏத்திட) போற்றி செய்ய, அம் - அழகிய சாத்திரம் - ஞான நூலைச் சாற்றி நிற்கும் - (அவருக்கு) உபதேசித்து நின்ற பெருஞ் செல்வமே! அலைந்த வெள்ளநீர் அசைந்து வந்த ஆற்றெழும் - வைகை ஆற்றில் எதிர்ந்து எழுந்து எதிரேறிவந்த கோ - (உனது) சொல் (நீ எழுதிவிட்ட திருப்பாசுரத்தின் பெருமையைக் கண்டு) சலம் -- நீரிலும், தி - நெருப்பிலும் கலந்து - சபதத்திற் போட்டியிற் கலந்து, ஆள் தரம் போச்சு - நமது ஆண்மைத்தரம் - நமது ஆண்மைத்தரம் நமது ஆண்மையும் மேன்மையும் போச்சு - தொலைந்தன என - என்று (சமணர்கள்) சொல்லும்படி, கன்றிடும் - கோபித்த வேலனே (சம்பந்த மூர்த்தியே): அறம் காத்து தருமநெறியைக் காப்பாற்றி அந்த நெறியில் உறங்காத் திறம் பார்த்து உறங்காத - துரங்காத சோர்வு உறாத வகையைக் கண்டு இருந்தோர்க்கு இருந்த பெரியோர் ங்கும் அயர்ந்தோர்க்கு (உன்னைப்) பூசித்து வழிபடுவோர்க்கும் அளிக்கும் வரங்கள் தருகின்ற அல்லது அருள் செய்கின்ற பெருமாளே (உனைக் கும்பிட ஆளாய்) 1270. மனத்திலே நூறு கோடிக் கணக்கான துன்பங்கள் ஒரு நொடிப் பொழுதிலே நினைந்து, மதன் ஊடலே - காமனது ஊடலே கலவிப் பிணக்கத்திலே (முயங்கி) ஈடுபட்டு, மிக்க அழகுள்ள மடமாதர் - இளம்பருவத்துப் பெண்கள் மீது ஆசை பூண்டு, இப்பூமியிலே மயங்கி - மதி மயங்கி - மருண்டு, ( எல்லாம்) அறிவு, மதிப்பு, இவை எல்லாம் கெட்டுக் கொடிய கடுமையான வினை மூடித்திரிந்து இப் பூமியிலே (பல இடத்தும்) திரிந்து, விரகால் - தந்திர உபாயச் செயல்களின் பயனாக மெய்யே தளர்ந்து உடல் தளர்ந்து போய் விடுகின்ற அந்த நாளில் அந்த இறுதி நாளில். வேகம் வாய்ந்த தோகையுடன் கூடிய (துங்க) பெருமை வாய்ந்த மயிலில் ஏறி, விரைவில் வந்து, பரவெளியாம் ஞான முத்தி வீட்டைத் தந்து அருளுவாயாக! திணைப்புனத்தில் வேடர்களின் காவல் உள்ள மலைப்புறம், காட்டின் புறம் எல்லாம் திரிந்து, அங்கிருந்த சிறு பேதைப் பெண். வள்ளியின் அடிகளிற் பணிந்த குமரேசனே!