திருப்புகழ் 1268 மதன் இக்கு அது  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1268 madhanikkuadhu  (common)
Thiruppugazh - 1268 madhanikkuadhu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனத் தனதன தனனத் தனதன
     தனனத் தனதன ...... தனதான

......... பாடல் .........

மதனிக் கதுகொடு பதுமப் புதுமலர்
     மலையப் படவிடு ...... வலியாலே

வனமுற் றினவளை யினநித் திலமலை
     வலையத் துகள்வளை ...... கடலாலே

விதனப் படுமதி வதனக் கொடியற
     வெருவிப் பரிமள ...... அணைமீதே

மெலியக் கலைதலை குலையத் தகுமினி
     விரையக் குரவலர் ...... தரவேணும்

புதனைச் சதுமுக விதியச் சுதனெதிர்
     புனைவித் தவர்தொழு ...... கழல்வீரா

பொருகைச் சரிவரி பெருகச் செறிவுறு
     புனமெய்க் குறமகள் ...... மணவாளா

முதுநற் சரவண மதனிற் சததள
     முளரிப் பதிதனி ...... லுறைவோனே

முதுமைக் கடலட ரசுரப் படைகெட
     முடுகிப் பொரவல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மதன் இக்கு அது கொடு பதுமப் புது மலர் மலையப் பட விடு
வலியாலே
... மன்மதன் கரும்பு வில்லைக் கொண்டு புதிய தாமரை மலர்
அம்பை (என் மகள் மீது) பகைத்து எய்ததால் ஏற்பட்ட வலியாலும்,

வனம் முற்றின வளை இன(ம்) நித்தில மலை வலையத்து
உகள் வளை கடலாலே
... அழகு நிறைந்த சங்குகளின் கூட்டமான
முத்துக்கள் அலைகளாகிய வட்டச் சுழலில் சிதறி விழுகின்ற,
வளைந்துள்ள கடலாலும்,

விதனப் படு(ம்) மதி வதனக் கொடி அற வெருவிப் பரிமள
அணை மீதே
... துயரப்படும் நிலவு போன்ற முகத்தை உடைய, வஞ்சிக்
கொடி போன்ற என் பெண் மிகவும் அச்சம் அடைந்து, நறுமணம் உள்ள
படுக்கையின் மேல் (தூக்கமின்றி)

மெலியக் கலை தலை குலையத் தகும் இனி விரையக் குர
அலர் தர வேணும்
... மெலிந்து போதலும், ஆடையும் தலைக் கூந்தலும்
குலைந்து போதலும் தகுமோ? இனிமேல் வாசம் மிக்க குர மாலையை
நீ தந்தருள வேண்டும்.

புதன் ஐச் சது முக விதி அச்சுதன் எதிர் புனைவித்தவர்
தொழு கழல் வீரா
... புதனுடைய தந்தையாகிய சந்திரனை, நான்முக
பிரமன், திருமால் (இவர்களின்) எதிரே சூடிக் கொண்டவராகிய
சிவபெருமான் தொழுகின்ற திருவடியை உடைய வீரனே,

பொரு கைச் சரி வரி பெருகச் செறிவுறு புனம் மெய்க் குற
மகள் மணவாளா
... பொருந்திய கையில் வளையல்களை வரிசையாக
அடுக்கியவளும், நெருங்கி வளர்ந்துள்ள பயிர்கள் உள்ள தினைப்
புனத்தில் இருந்தவளும், உண்மை நிறைந்த குறப் பெண்ணுமாகிய
வள்ளியின் கணவனே,

முது நல் சரவணம் அதனில் சத தள முளரிப் பதி தனில்
உறைவோனே
... பழைய நல்ல சரவணப் பொய்கையில் நூறு
இதழ்களைக் கொண்ட தாமரையின் மேலும், பொற்றாமரைப் பதியாகிய
மதுரையிலும் வீற்றிருப்பவனே,

முதுமைக் கடல் அடர் அசுரப் படை கெட முடுகிப் பொர
வ(ல்)ல பெருமாளே.
... பழைய கடலில் நெருங்கியிருந்த அசுரர்கள்
சேனைகள் கெட்டு அழிய, விரைவில் சென்று சண்டை செய்ய வல்ல
பெருமாளே.


இப்பாடல் அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில், முருகனைப் பிரிந்த
தலைவிக்காக அவளது நற்றாய் பாடியது. மன்மதன், மலர்க் கணைகள், அலை
வீசும் கடல் - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.626  pg 3.627  pg 3.628  pg 3.629 
 WIKI_urai Song number: 1267 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1268 - madhan ikku adhu (common)

mathanik kathukodu pathumap puthumalar
     malaiyap padavidu ...... valiyAlE

vanamut RinavaLai yinanith thilamalai
     valaiyath thukaLvaLai ...... kadalAlE

vithanap padumathi vathanak kodiyaRa
     veruvip parimaLa ...... aNaimeethE

meliyak kalaithalai kulaiyath thakumini
     viraiyak kuravalar ...... tharavENum

puthanaic chathumuka vithiyac chuthanethir
     punaivith thavarthozhu ...... kazhalveerA

porukaic charivari perukac cheRivuRu
     punameyk kuRamakaL ...... maNavALA

muthunaR saravaNa mathaniR sathathaLa
     muLarip pathithani ...... luRaivOnE

muthumaik kadalada rasurap padaikeda
     mudukip poravala ...... perumALE.

......... Meaning .........

mathan ikku athu kodu pathumap puthu malar malaiyap pada vidu valiyAlE: Because of the pain she suffers from the impact of the new lotus arrow shot aggressively by Manmathan (God of Love) from his bow of sugar-cane,

vanam mutRina vaLai ina(m) niththila malai valaiyaththu ukaL vaLai kadalAlE: and because of the curvy sea on whose wavy whirlpools beautiful pearls from bunches of conch-shells are strewn;

vithanap padu(m) mathi vathanak kodi aRa veruvip parimaLa aNai meethE: my daughter, with a face like the sorrowing moon and a waist like the creeper vanji (rattan reed), is very scared and lying on the aromatic bed (sleeplessly);

meliyak kalai thalai kulaiyath thakum ini viraiyak kura alar thara vENum: Is it fair that she should weaken becoming thinner and that her attire, as well as her hair, should become dishevelled? Now at least, kindly grant her Your fragrant kurA garland!

puthan aic chathu muka vithi acchuthan ethir punaiviththavar thozhu kazhal veerA: As the four-faced BrahmA and Lord VishNu witnessed, He wore on His matted hair the crescent moon, father of Mercury (Bhudhan); that Lord SivA prostrated at Your hallowed feet, Oh valorous One!

poru kaic chari vari perukac cheRivuRu punam meyk kuRa makaL maNavALA: She wears a row of bangles on her arm aptly; She lives in the millet-field with full grown crops of grain clustering together; She is the truthful damsel of the KuRavAs; and You are the consort of that VaLLi!

muthu nal saravaNam athanil satha thaLa muLarip pathi thanil uRaivOnE: You are seated on the hundred-petalled lotus in the old and holy pond of SaravaNa and in Madhurai, the city with the golden lotus pond, Oh Lord!

muthumaik kadal adar asurap padai keda mudukip pora va(l)la perumALE.: You are capable of swiftly fighting with the armies of the demons flocking the old sea and killing them all, Oh Great One!


This song has been written in the Nayaka-Nayaki BhAva where the poet has assumed the role of a mother portraying the pangs of separation of her daughter from Lord Murugan.
The Love God, the flowery arrows and the wavy sea are some of the sources which aggravate the agony of separation from the Lord.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1268 madhan ikku adhu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]