திருப்புகழ் 1267 மக்கள் தாயர்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1267 makkaLthAyar  (common)
Thiruppugazh - 1267 makkaLthAyar - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தனா தத்ததன தத்தனா தத்ததன
     தத்தனா தத்ததன ...... தனதான

......... பாடல் .........

மக்கள்தா யர்க்குமரு கர்க்குமா மர்க்குமனை
     விக்கும்வாழ் நர்க்குமிக ...... மனதூடே

மைத்தவே லைக்குநெடி துற்றமா யத்துயரம்
     வைத்துவா டச்சமனு ...... முறமேவித்

திக்குநா டிக்கரிய மெய்க்கடா விற்றிருகி
     திக்கஆ விக்களவு ...... தெரியாமுன்

சித்தமோ வித்துயிலு மற்றுவா ழச்சிறிது
     சித்ரபா தக்கமல ...... மருள்வாயே

இக்குவே ளைக்கருக முக்கணா டிக்கனலை
     யிட்டுயோ கத்தமரு ...... மிறையோர்முன்

எச்சரா திக்குமுற நிற்குமா யற்குமுத
     லெட்டொணா வித்தைதனை ...... யினிதீவாய்

பக்கஆர் வத்துடனுள் நெக்குநா டிப்பரவு
     பத்தர்பா டற்குருகு ...... முருகோனே

பக்கம் யானைத்திருவொ டொக்கவா ழக்குறவர்
     பச்சைமா னுக்கினிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மக்கள் தாயர்க்கும் மருகர்க்கும் மாமர்க்கும் மனைவிக்கும்
வாழ்நர்க்கும் மிக மனதூடே
... நான் பெற்ற மக்களுக்கும், என்
தாயாருக்கும், மருமகப் பிள்ளைகளுக்கும், மாமன்மார்களுக்கும்,
மனையாளுக்கும், உடன் வாழ்பவர்களுக்கும், மிகவும் மனத்தில்
வருத்தம் தந்து,

மைத்த வேலைக்கு நெடிது உற்ற மாயத் துயரம் வைத்து
வாட
... கரு நிறம் கொண்ட கடலைக் காட்டிலும் பெரிதாயுள்ள மாயை
காரணமாக வரும் துன்பத்தை உண்டாக்கி மனம் சோர்வு அடைய,

சமனும் உற மேவி திக்கு நாடிக் கரிய மெய்க் கடாவில்
திருகி
... யமனும் இருக்கும் இடத்தைத் தேடி அடைந்து, கரு நிறமான
எருமைக் கடாவின் மீது முறுக்குடன் வந்து

திக்க ஆவிக்கு அளவு தெரியா முன் ... என் சொற்களைக் குழற
வைக்க, என் உயிர் உடலில் தங்கும் கால அளவு தெரிவதற்கு முன்பாக
(அதாவது நான் சற்று நேரத்தில் இறப்பதற்குமுன்),

சித்தம் ஓவித் துயிலும் அற்று வாழ சிறிது சித்ர பாதக் கமலம்
அருள்வாயே
... மனம் நீங்கி ஒடுக்கம் உற்று, நனவும் கனவும் அற்று
நான் வாழ்வதற்கு, நீ சற்று உனது அழகிய திருவடித் தாமரைகளை
அருள்வாயாக.

இக்கு வேளைக் கருக முக்கண் நாடிக் கனலை இட்டு ...
கரும்பு வில்லைக் கொண்ட மன்மதனை, கருகும்படி மூன்றாவதாகிய
(நெற்றிக்) கண் கொண்டு அவனது (காமத்தை மூட்டும்) செயலை
ஆராய்ந்து (அவன் மீது) நெருப்பை ஏவி,

யோகத்து அமரும் இறையோர் முன் ... யோகத்தில் அமர்ந்த
சிவபெருமானுடைய முன்னிலையில்,

எச்சராதிக்கும் உற நிற்கும் மாயற்கு முதல் எட்டொணா
வித்தை தனை இனிது ஈவாய்
... இயங்குகின்ற உயிர்கள் முதலிய
யாவற்றிலும் பொருந்தி நிற்பவராகிய மாயோனாகிய திருமால்
முதலானோர்களுக்கும் எட்ட முடியாத ஞானப் பொருளை நன்கு
உபதேசித்தவனே,

பக்க ஆர்வத்துடன் உள்நெக்கு நாடிப் பரவும் பத்தர் பாடற்கு
உருகும் முருகோனே
... உன்பால் ஆசையுடன் உள்ளம் நெகிழ்ந்து
விரும்பிப் போற்றும் பக்தர்களின் பாடல்களுக்கு மனம் உருகும் முருகனே.

பக்கம் யானைத் திருவோடு ஒக்க வாழ ... உனது (இடது)
பக்கத்தில் தேவயானையாகிய லக்ஷ்மியின் மகளோடு பொருந்தி
வாழ்கின்றவளும்,

குறவர் பச்சை மானுக்கு இனிய பெருமாளே. ... அந்தக்
குறவர்களால் வளர்க்கப்பட்ட பச்சை நிறம் கொண்ட மான்
போன்றவளுமாகிய வள்ளிக்கு இனிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.624  pg 3.625  pg 3.626  pg 3.627 
 WIKI_urai Song number: 1266 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1267 - makkaL thAyar (common)

makkaLthA yarkkumaru karkkumA markkumanai
     vikkumvAzh narkkumika ...... manathUdE

maiththavE laikkunedi thutRamA yaththuyaram
     vaiththuvA daccamanu ...... muRamEvith

thikkunA dikkariya meykkadA vitRiruki
     thikkaA vikkaLavu ...... theriyAmun

siththamO viththuyilu matRuvA zhacciRithu
     cithrapA thakkamala ...... maruLvAyE

ikkuvE Laikkaruka mukkaNA dikkanalai
     yittuyO kaththamaru ...... miRaiyOrmun

eccharA thikkumuRa niRkumA yaRkumuthal
     ettoNA viththaithanai ...... yinitheevAy

pakkaAr vaththudanuL nekkunA dipparavu
     paththarpA daRkuruku ...... murukOnE

pakkam yAnaiththiruvo dokkavA zhakkuRavar
     pacchaimA nukkiniya ...... perumALE.

......... Meaning .........

makkaL thAyarkkum marukarkkum mAmarkkum manaivikkum vAzhnarkkum mika manathUdE: My children, mother, nephews, uncles, wife and other relatives living with me will all be saddened;

maiththa vElaikku nedithu utRa mAya thuyaram vaiththu vAda: causing misery due to delusion that is darker than black sea, I will become disheartened;

samanum uRa mEvi thikku nAdik kariya meyak kadAvil thiruki: Yaman, the God of Death, mounted on the black buffalo, will come in search of my place putting on airs of uppity;

thikka Avikk(u) aLavu theriyA mun: my speech will falter; before the determination of the remaining duration of my life (in other words, before my imminent death),

siththam Ovith thuyilum atRu vAzha siRithu cithra pAthak kamalam aruLvAyE: to enable my mind to cease its activity and to leave me in a dreamless and wakeless state, will You kindly grant me, at least slightly, Your hallowed lotus feet?

ikku vELaik karuka mukkaN nAdik kanalai ittu: He assessed the action (of provoking lust) of Manmathan, God of Love, who held the bow of sugarcane; and He opened His third (fiery) eye upon Manmathan and burnt him down;

yOkaththu amar iRaiyOr mun: then He sat in deep meditation (yOgA); to that Lord SivA,

eccharAthikkum uRa niRkum mAyaRku muthal ettoNA viththai thanai inithu eevAy: You taught happily the primordial principle of True Knowledge that is inconceivable even to the mystical Lord VishNu who pervades all sentient and insentient beings!

pakka Arvaththudan uLnekku nAdip paravum paththar pAdaRku urukum murukOnE: Oh MurugA, Your heart simply melts for the songs of Your devotees who poignantly extol Your glory with deep affection!

pakkam yAnaith thiruvOdu okka vAzha: On Your (left) side is Your consort, DEvayAnai, the daughter of Lakshmi, with whom She lives in accord;

kuRavar pacchai mAnukku iniya perumALE.: She is VaLLi, who looks like a green deer, reared by the hunters; You are Her sweetheart, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1267 makkaL thAyar - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]