திருப்புகழ் 1269 மதிதனையிலாத  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1269 madhidhanaiyilAdha  (common)
Thiruppugazh - 1269 madhidhanaiyilAdha - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனான தான தனதன தனான தான
     தனதன தனான தான ...... தனதான

......... பாடல் .........

மதிதனை யிலாத பாவி குருநெறி யிலாத கோபி
     மனநிலை நிலாத பேயன் ...... அவமாயை

வகையது விடாத பேடி தவநினை விலாத மோடி
     வரும்வகை யிதேது காய ...... மெனநாடும்

விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை
     வினையிகல் விடாத கூள ...... னெனைநீயும்

மிகுபர மதான ஞான நெறிதனை விசார மாக
     மிகுமுன துரூப தான ...... மருள்வாயே

எதிர்வரு முதார சூர னிருபிள வதாக வேலை
     யியலொடு கடாவு தீர ...... குமரேசா

இனியசொல் மறாத சீலர் கருவழி வராமல் நாளும்
     இளமையது தானு மாக ...... நினைவோனே

நதியுட னராவு பூணு பரமர்குரு நாத னான
     நடைபெறு கடூர மான ...... மயில்வீரா

நகைமுக விநோத ஞான குறமினுட னேகு லாவு
     நவமணி யுலாவு மார்ப ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மதிதனை யிலாத பாவி ... அறிவு என்பதே இல்லாத பாவி,

குருநெறி யிலாத கோபி ... குரு சொன்ன வழியில் நிற்காத
சினமுள்ளவன்,

மனநிலை நிலாத பேயன் ... மனம் ஒரு நிலையில் நிற்காத
பேய் போன்று அலைபவன்,

அவமாயை வகையது விடாத பேடி ... பயனற்ற மாயையின்
பொய்யான போக்குக்களை விடாத பேடி,

தவநினைவிலாத மோடி ... தவம் என்ற நினைப்பே இல்லாத முரடன்,

வரும்வகை யிதேது காயமெனநாடும் விதியிலி ... இந்த உடம்பு
எப்படிப் பிறந்தது என்று ஆராயும் பாக்கியம் இல்லாதவன்,

பொலாத லோபி ... மிகக் கொடிய கஞ்சன்,

சபைதனில் வராத கோழை ... சபைகளில் வந்து பேசும் தைரியம்
இல்லாதவன்,

வினையிகல் விடாத கூளனெனைநீயும் ... தீவினையின்
வலிமையை நீக்கமாட்டாத பயனற்றவன் ஆகிய என்னை நீயும்

மிகுபரம் அதான ஞான நெறிதனை விசாரமாக ... மிக மேலான
ஞானமார்க்கத்தை ஆராய்ச்சி செய்ய

மிகுமுனது ரூப தானம் அருள்வாயே ... மிக்கு விளங்கும்
உன்னுடைய சாரூபம் (வடிவ தரிசனம்) என்ற பரிசை அடியேனுக்குத்
தந்தருள்க.

எதிர்வரும் உதார சூரன் இருபிள வதாக வேலை ... எதிர்த்து
வந்த மிக்க வலிய சூரன் இரண்டு பிளவாகும்படியாக வேலாயுதத்தை

இயலொடு கடாவு தீர குமரேசா ... தக்க முறையில் செலுத்தின
தீரனே, குமரேசனே,

இனியசொல் மறாத சீலர் கருவழி வராமல் ... இனிய
சொற்களையே மறக்காமல் பேசும் பெரியோர்கள் மீண்டும்
கருவழியடைந்து பிறவாதபடியும்,

நாளும் இளமையது தானு மாக நினைவோனே ... எப்போதும்
இளமையுடன் விளங்கும்படியும், நினைத்து அருள் செய்பவனே,

நதியுடன் அராவு பூணு பரமர்குரு நாதனான ... கங்கைநதியுடன்,
பாம்பையும் அணிந்த பரமேசுரர் சிவபெருமானுக்கு குருமூர்த்தியானவனே,

நடைபெறு கடூர மான மயில்வீரா ... நடையிலேயே கடுமையான
வேகம் காட்டும் மயிலையுடைய வீரனே,

நகைமுக விநோதஞான குறமினுடனேகுலாவு ... சிரித்த
முகத்தாளும், அற்புத ஞானத்தைக் கொண்டவளுமான குறப் பெண்
வள்ளியுடன் கொஞ்சுகின்றவனே,

நவமணி யுலாவு மார்ப பெருமாளே. ... நவரத்தின மாலை
விளங்கும் மார்பை உடைய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.628  pg 3.629  pg 3.630  pg 3.631 
 WIKI_urai Song number: 1268 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)



 பாடல் ரா - 1    song R1 


 பாடல் ரா - 2    song R2 

Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1269 - madhidhanaiyilAdha (common)

mathithanai yilAtha pAvi GuruneRi yilAtha kOpi
     mananilai nilAtha pEyan ...... avamAyai

vakaiyathu vidAtha pEdi thavaninai vilAtha mOdi
     varumvakai yithEthu kAya ...... menanAdum

vithiyili polAtha lOpi sapaithanil varAtha kOzhai
     vinaiyikal vidAtha kULa ...... nenaineeyum

mikupara mathAna njAna neRithanai visAra mAka
     mikumuna thurUpa thAna ...... maruLvAyE

ethirvaru muthAra cUra nirupiLa vathAka vElai
     yiyalodu kadAvu theera ...... kumarEsA

iniyasol maRAtha seelar karuvazhi varAmal nALum
     iLamaiyathu thAnu mAka ...... ninaivOnE

nathiyuda narAvu pUNu paramarguru nAtha nAna
     nadaipeRu kadUra mAna ...... mayilveerA

nakaimuka vinOtha njAna kuRaminuda nEku lAvu
     navamaNi yulAvu mArba ...... perumALE.

......... Meaning .........

mathithanai yilAtha pAvi: I am a sinner with no intelligence whatsoever;

GuruneRi yilAtha kOpi: I am a hot-tempered one never following the directions of my master;

mananilai nilAtha pEyan: I am a devil with an unsteady mind;

avamAyai vakaiyathu vidAtha pEdi: I am a coward never giving up the useless methods arising from delusion;

thavaninaivilAtha mOdi: I am a ruffian who never thinks about doing penance at all;

varumvakai yithEthu kAyamenanAdum vithiyili: I am not destined to ponder how this body originated;

polAtha lOpi: I am a wicked miser;

sapaithanil varAtha kOzhai: I do not have the guts to speak in public;

vinaiyikal vidAtha kULanenai: and I am a worthless fellow incapable of freeing myself from the clutches of bad deeds.

neeyum mikuparam athAna njAna neRithanai visAramAka: Kindly let me delve into the most supreme subject, namely, the path of True Knowledge

mikumunathu rUpa thAnam aruLvAyE: and grant me the gift of Your Divine vision.

ethirvarum uthAra cUran irupiLa vathAka: The mighty SUran who confronted You in the battlefield was split into two by

vElai iyalodu kadAvu theera kumarEsA: the Spear wielded by You so promptly, Oh Brave One, Kumaresa!

iniyasol maRAtha seelar karuvazhi varAmal: Those wise ones who never forget to speak kind words will not enter another womb for rebirth,

nALum iLamaiyathu thAnu mAka ninaivOnE: and are able to maintain their youth all the time because of Your blessing!

nathiyudan arAvu pUNu paramarguru nAthanAna: You are the Master of the Supreme Lord SivA who wears Ganga River and snakes on His tresses.

nadaipeRu kadUra mAna mayilveerA: You have the peacock whose strides are fierce, Oh valorous One!

nakaimuka vinOthanjAna kuRaminudanEkulAvu: You caress VaLLi, the smiling young damsel of the KuRavAs, who has wisdom!

navamaNi yulAvu mArba perumALE.: On Your chest dangles the necklace made of nine precious gems, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1269 madhidhanaiyilAdha - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]