திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1259 பரிமள மலரடு (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1259 parimaLamalaradu (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தனதனத் தனதன தனதனத் தனதன தனதனத் ...... தனதான ......... பாடல் ......... பரிமள மலரடுத் தகில்மண முழுகிமைப் பரவிய ம்ருகமதக் ...... குழல்மானார் பருமணி வயிரமுத் திலகிய குழையினிற் படைபொரு வனவிழிக் ...... கயலாலே எரியுறு மெழுகெனத் தனிமன மடையநெக் கினிமையோ டுருகவிட் ...... டவமேயான் இருவினை நலியமெய்த் திறலுட னறிவுகெட் டிடர்படு வதுகெடுத் ...... தருள்வாயே சொரிமத அருவிவிட் டொழுகிய புகர்முகத் தொளைபடு கரமலைக் ...... கிளையோனே துடியிடை யொருகுறக் குலமயில் புளகிதத் துணைமுலை தழுவுபொற் ...... புயவீரா அரியன பலவிதத் தொடுதிமி லையுமுடுக் கையுமொகு மொகுவெனச் ...... சதகோடி அலகையு முடனடித் திடவடி யயிலெடுத் தமர்செயு மறுமுகப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பரிமள மலர் அடுத்து அகில் மணம் முழுகி மைப் பரவிய ம்ருகமதக் குழல் மானார் ... நறு மணம் உள்ள மலர்கள் வைக்கப் பெற்றதாய், அகிலின் நறு மணத்தில் முழுகியதாய், கருநிறம் பரந்துள்ளதாய், கஸ்தூரி அணிந்துள்ள கூந்தலை உடைய மாதர்களின் பரு மணி வயிரம் முத்து இலகிய குழையினில் படை பொருவன விழிக் கயலாலே ... பருத்த ரத்தினங்கள், வைரம், முத்து (இவை) விளங்கும் காதணியின் மீது போர் புரிவது போல் (நீண்டு பாயும்) கயல் மீன் போன்ற கண்ணாலே, எரி உறு மெழுகு எனத் தனி மனம் அடைய நெக்கு இனிமையொடு உருகவிட்டு ... நெருப்பில் இடப்பட்ட மெழுகைப் போல் துணையின்றி நிற்கும் என் மனம் நன்று நெகிழ்ந்து, அந்தச் சிற்றின்பத்தில் உருகும்படி விட்டு, அவமே யான் இரு வினை நலிய மெய்த் திறலுடன் அறிவு கெட்டு இடர் படுவது கெடுத்து அருள்வாயே ... வீணிலே நான் இரண்டு வினைகளும் என்னை வாட்ட, உண்மை வலிமையுடன் அறிவும் கெட்டுப்போய் வேதனைப்படுவதை ஒழித்து அருள் புரிவாயாக. சொரி மத அருவி விட்டு ஒழுகிய புகர் முகத் தொளை படு கர மலைக்கு இளையோனே ... சொரிகின்ற மத நீரை அருவி போல் ஒழுக்கெடுக்கும் புள்ளி கொண்ட முகமும், தொளை கொண்ட துதிக்கையையும் உடைய யானையாகிய கணபதிக்குத் தம்பியே, துடி இடை ஒரு குறக் குல மயில் புளகித துணை முலை தழுவு பொன் புய வீரா ... உடுக்கை போன்ற இடையை உடைய, ஒப்பற்ற குறக்குலத்து மயில் போன்ற வள்ளியின் புளகாங்கிதம் கொண்ட இரண்டு மார்பகங்களையும் தழுவும் அழகிய புயங்களை உடைய வீரனே, அரியன பல விதத்தொடு திமிலையும் உடுக்கையும் மொகு மொகு எனச் சத கோடி அலகையும் உடன் நடித்திட ... அருமையான பல வகைப்பட்ட திமிலை என்ற பறை வகைகளும், உடுக்கை வாத்தியமும் மொகு மொகு என்று ஒலிக்கவும், நூற்றுக் கணக்கான பேய்களும் கூடவே நடனமாட, வடி அயில் எடுத்து அமர் செயும் அறு முகப் பெருமாளே. ... கூர்மையான வேலாயுதத்தை எடுத்து போர் செய்கின்ற, ஆறு திரு முகங்களை உடைய, பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.610 pg 3.611 WIKI_urai Song number: 1258 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1259 - parimaLa malaradu (Common) parimaLa malaraduth thakilmaNa muzhukimaip paraviya mrukamathak ...... kuzhalmAnAr parumaNi vayiramuth thilakiya kuzhaiyiniR padaiporu vanavizhik ...... kayalAlE eriyuRu mezhukenath thanimana madaiyanek kinimaiyo durukavit ...... tavamEyAn iruvinai naliyameyth thiRaluda naRivuket tidarpadu vathukeduth ...... tharuLvAyE sorimatha aruvivit tozhukiya pukarmukath thoLaipadu karamalaik ...... kiLaiyOnE thudiyidai yorukuRak kulamayil puLakithath thuNaimulai thazhuvupoR ...... puyaveerA ariyana palavithath thoduthimi laiyumuduk kaiyumoku mokuvenac ...... chathakOdi alakaiyu mudanadith thidavadi yayileduth thamarseyu maRumukap ...... perumALE. ......... Meaning ......... parimaLa malar aduththu akil maNam muzhuki maip paraviya mrukamathak kuzhal mAnAr: The hair of these women is decked with fragrant flowers, soaked with the scent of akil (incence) and smeared with musk; paru maNi vayiram muththu ilakiya kuzhaiyinil padai poruvana vizhik kayalAlE: large gemstones, diamond and pearls adorn their ear-lobes up to which their kayal-fish-like eyes jump as if they are invading; eri uRu mezhuku enath thani manam adaiya nekku inimaiyodu urukavittu: my lonely heart melts totally like wax on fire, with erotic thoughts about them; avamE yAn iru vinai naliya meyth thiRaludan aRivu kettu idar paduvathu keduththu aruLvAyE: I am being devastated by both karmAs (good and bad deeds) tormenting my true strength and intellect; kindly stop my being agonised like this and bless me! sori matha aruvi vittu ozhukiya pukar mukath thoLai padu kara malaikku iLaiyOnE: You are the younger brother of Lord GaNapathi in the form of an elephant whose ferocious saliva oozes like a waterfall, and who has a spotted face and a trunk with a hole! thudi idai oru kuRak kula mayil puLakitha thuNai mulai thazhuvu pon puya veerA: She has a slender waist like a hand-drum; she is like a peacock belonging to the lineage of the KuRavAs; she is VaLLi, and You hug her twin exhilarated breasts with Your broad shoulders, Oh valorous One! ariyana pala vithaththodu thimilaiyum udukkaiyum moku moku enac chatha kOdi alakaiyum udan nadiththida: Against the background noise of the beating of several rare drums called thimilai and the sound of "mogu mogu" made by the hand-drums (udukkai), hundreds of devils danced vadi ayil eduththu amar seyum aRu mukap perumALE.: when You took Your sharp spear and fought the battle, Oh Great One with six hallowed faces! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |