திருப்புகழ் 1214 ஆசை நேச மயக்கி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1214 AsainEsamayakki  (common)
Thiruppugazh - 1214 AsainEsamayakki - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தான தனத்தன தான தான தனத்தன
     தான தான தனத்தன ...... தனதான

......... பாடல் .........

ஆசை நேச மயக்கிகள் காசு தேடு மனத்திகள்
     ஆவி சோர வுருக்கிகள் ...... தெருமீதே

யாவ ரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர்
     ஆல கால விழிச்சிகள் ...... மலைபோலு

மாசி லாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர்
     வாரி யோதி முடிப்பவர் ...... ஒழியாமல்

வாயி லூற லளிப்பவர் நாளு நாளு மினுக்கிகள்
     வாசல் தேடி நடப்பது ...... தவிர்வேனோ

ஓசை யான திரைக்கடல் ஏழு ஞால முமுற்றருள்
     ஈச ரோடு றவுற்றவள் ...... உமையாயி

யோகி ஞானி பரப்ரமி நீலி நார ணியுத்தமி
     ஓல மான மறைச்சிசொல் ...... அபிராமி

ஏசி லாத மலைக்கொடி தாய்ம னோம ணிசற்குணி
     ஈறி லாத மலைக்கொடி ...... அருள்பாலா

ஏறு மேனி யொருத்தனும் வேத னான சமர்த்தனும்
     ஈச னோடு ப்ரியப்படு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஆசை நேச மயக்கிகள் காசு தேடு மனத்திகள் ... ஆசையும்
அன்பும் காட்டி மயக்குபவர்கள், பொருள் தேடுவதிலேயே மனத்தைச்
செலுத்துபவர்கள்,

ஆவி சோர உருக்கிகள் தெரு மீதே யாவரோடு நகைப்பவர்
வேறு கூறு விளைப்பவர்
... உயிர் சோர்ந்து போகும்படி உள்ளத்தை
உருக்குபவர்கள், தெருவில் போகும் எல்லோருடனும் சிரிப்பவர்கள்,
குணம் வேறுபடும் தன்மையை உண்டு பண்ணுபவர்கள்,

ஆல கால விழிச்சிகள் மலைபோலும் மாசு இலாத தனத்தியர்
ஆடை சோர நடப்பவர்
... ஆலகால விஷத்தைப் போல கண்களை
உடையவர்கள், மலையைப் போன்று பருத்த, மறு இல்லாததான
மார்பை உடையவர்கள், ஆடை நெகிழும்படி நடப்பவர்கள்,

வாரி ஓதி முடிப்பவர் ஒழியாமல் வாயில் ஊறல் அளிப்பவர்
நாளு நாளு மினுக்கிகள்
... கூந்தலை வாரி முடிப்பவர்கள்,
இடைவிடாது, வாயில் அதர பானம் தருபவர்கள், நாள் தோறும் தங்களை
அழகுபடுத்திக் கொள்ளுபவர்கள் (ஆகிய விலைமாதர்களின்)

வாசல் தேடி நடப்பது தவிர்வேனோ ... வீட்டு வாயிலைத் தேடி
நடக்கும் வழக்கத்தை விடமாட்டேனோ?

ஓசையான திரைக் கடல் ஏழு ஞாலமும் உற்று அருள்
ஈசரோடு உறவு உற்றவள் உமை ஆயி
... ஒலி செய்யும் அலை
வீசும் ஏழு கடல்களிலும், பூமியிலும் ஒன்றி இருந்து அருள்செய்யும்
சிவபெருமானுடன் இணைந்து இருப்பவள், உமை அம்மை,

யோகி ஞானி பரப்ரமி நீலி நாரணி உத்தமி ... யோகத்தில்
இருப்பவள், ஞானி, முழுமுதல் தேவி, நீல நிறத்தி, துர்க்கை, உத்தமி,

ஓலமான மறைச்சி சொல் அபிராமி ஏசு இலாத அமலைக்
கொடி தாய் மனோ மணி சற்குணி
... இசை ஒலியுடன்
ஓதப்படுகின்ற வேதத்தினள், புகழ் கொண்ட அழகி, இகழ்ச்சி என்பதே
இல்லாத தூயவள், கொடி போன்ற இடுப்பை உடையவள், தாய்,
மனத்தை ஞான நிலைக்கு எழுப்புபவள், நற் குணத்தை உடையவள்,

ஈறு இலாத மலைக் கொடி அருள்பாலா ... முடிவில்லாதவள்,
ஹிமவான் என்னும் மலையரசன் பெற்ற கொடியாகிய பார்வதி தேவி
பெற்றருளிய பிள்ளையே,

ஏறு மேனி ஒருத்தனும் வேதனான சமர்த்தனும் ஈசனோடு
ப்ரியப்படு பெருமாளே.
... வராகத்தின் உருவை எடுத்த திருமாலும்,
வேதத்தில் வல்லவனான பிரமனும், சிவபெருமானும் மிக விரும்பும்
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.524  pg 3.525  pg 3.526  pg 3.527 
 WIKI_urai Song number: 1213 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1214 - Asai nEsa mayakki (common)

Aasai nEsa mayakkikaL kAsu thEdu manaththikaL
     Avi sOra vurukkikaL ...... therumeethE

yAva rOdu nakaippavar vERu kURu viLaippavar
     Ala kAla vizhicchikaL ...... malaipOlu

mAsi lAtha thanaththiyar Adai sOra nadappavar
     vAri yOthi mudippavar ...... ozhiyAmal

vAyi lURa laLippavar nALu nALu minukkikaL
     vAsal thEdi nadappathu ...... thavirvEnO

Osai yAna thiraikkadal Ezhu njAla mumutRaruL
     eesa rOdu RavutRavaL ...... umaiyAyi

yOki njAni paraprami neeli nAra Niyuththami
     Ola mAna maRaicchisol ...... apirAmi

Esi lAtha malaikkodi thAyma nOma NisaRkuNi
     eeRi lAtha malaikkodi ...... aruLbAlA

ERu mEni yoruththanum vEtha nAna samarththanum
     eesa nOdu priyappadu ...... perumALE.

......... Meaning .........

Asai nEsa mayakkikaL kAsu thEdu manaththikaL: They enchant with their display of desire and love; they concentrate only on earning money;

Avi sOra urukkikaL theru meethE yAvarOdu nakaippavar vERu kURu viLaippavar: they play havoc on the mind until the life is about to leave the body; they flirt and laugh with everyone on the street; they are capable of completely changing one's character;

Ala kAla vizhicchikaL malaipOlum mAsu ilAtha thanaththiyar Adai sOra nadappavar: their eyes are filled with the evil poison (AlakAlam); they have huge mountain-like and spotless bosom; they walk with a casual gait hanging their clothes deliberately loose;

vAri Othi mudippavar ozhiyAmal vAyil URal aLippavar nALu nALu minukkikaL vAsal thEdi nadappathu thavirvEnO: they tie their combed hair into a knot; they incessantly shower the mouth with kisses; and they put on make-up everyday to show themselves off; - will I ever give up seeking, and knocking at the doors of, such whores?

OsaiyAna thiraik kadal Ezhu njAlamum utRu aruL eesarOdu uRavu utRavaL umai Ayi: She is concorporate with Lord SivA who is the benefactor of the seven wavy and roaring seas and the earth; She is Mother UmA;

yOki njAni paraprami neeli nAraNi uththami: She is in a state of yOgA; She is the Ultimate Knowledge Herself; She is the supreme and primordial Goddess; She is of a blue hue; She is DurgA, the most honorable;

OlamAna maRaicchi sol apirAmi Esu ilAtha amalaik kodi thAy manO maNi saRkuNi: She is in the form of VEdAs chanted musically; She is famous and the most beautiful; She is the purest without any blemish; She has a creeper-like slender waist; She is our Mother who can elevate our mind to enlightenment; She is the most virtuous;

eeRu ilAtha malaik kodi aruLbAlA: She has no end; She is the creeper-like daughter of the Mountain-King HimavAn; and You are the child of that PArvathi DEvi, Oh Lord!

ERu mEni oruththanum vEthanAna samarththanum eesanOdu priyappadu perumALE.: Lord VishNu who took the form of a boar (VarAgam), BrahmA who is well-versed with the VEdAs and Lord SivA adore You, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1214 Asai nEsa mayakki - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]