பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 517 தேசத் தடைத்து - தேசம் - ஒளியை (அடைத்து) தன்னுடன் கொண்டும் (அல்லது - தேசங்கள்ை எல்லாம் தன் சிறகால் மூடி) (பிரகாசித்து) ஒளி வீசியும், ஒலி செய்தும், கோடுகளை உடைய (சேடன்) ஆதிசேடனைப் பிடித்து உதறி எறியும் மயில் வீரனே! தேடித் துதித்த நீ வீற்றிருக்கும் ஆறுபடை வீடு முதலிய பல தலங்களையும் தேடி உன்னைப் போற்றும் அடியார்களுடைய உள்ளத்தே நின்று அருள்பாலிக்கும் சிறப்பையும் அழகையும் கொண்ட (பதத்தி திருவடிகளை உடையவனே (அரி) திருமாலின் மருகனே! (அல்லது தேடித் துதித்த அடியார்களுக்கு அருளும் (பதத்த அரி) திருவடிகள்ை உடைய திருமாலின் மருகனே! (நேசப் படுத்தி, நேசம் படுத்தி - அன்பை அழித்து அன்பு இல்லாமல் தேவர்களைக் கெடுத்த (முழு நீசற்கு முற்றிலும் இழிந்த தன்மையராம் அசுரர்களுக்கு (அனத்தம் உற) அனர்த்தம் (கேடு) உண்டாகும்படி செலுத்தின வேலாயுதனே! அன்பு நிறைந்த குறத்தி) வள்ளி (மயலோடு) உன்மீது காதலுடனே (உற்ப்வித்த) பிறந்த (புவிக்குள்) இடமாகிய_வள்ளி மன்லியில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே (பொ(ன்)ணி) நீர் காவிரியாறு பாயும் (பொன்) அழகிய (புவிக்குள்) (வயலூர், திரிசிராப்பள்ளி, சாமிமலை, முதலிய தலங்களில் மகிழ்ச்சி கொள்ளும் பெருமாளே! (மயல் ஒழியாதோ) 1213. சையும் அன்பும் காட்டி மயக்குபவர்கள், அங்Tசி தேடுவதிலேய்ே மனத்தைச் செலுத்துபவர்கள், உயிரும் சோர்ந்து போகும் படி (உள்ளத்தை) உருக்குபவர்கள், தெருவில் போகும் எல்லாருடனும் சிரிப்பவர்கள், (வேறு கூறு விளைப்பவர்) குணம் வேறுபடும் தன்மையை (விள்ைவிப்பவர்கள்) உண்டு பண்ணுபவர்கள் - குணம் மாறுபாடு அடைதலுக்குக் காரண பூதராயிருப்பவர்கள், ஆலகால விஷம் போன்ற கண்களை உடையவர்கள், மலைபோலப் பருத்தும் மறு (குற்றம்) இல்லாததுமான கொங்கையை உடையவர்கள், ஆடைநெகிழும்படி நடப்பவர்கள், வாரிக்கூந்தலை முடிப்பவர்கள், எப்போதும் இடைவிடாது வாயில் நின்றும் இதழ் ஊறலைத் தருபவர்கள், (நாளுநாளும்) நாள்தோறும் த்ங்களை ஆழ்கு ப்டுத்திக் கொள்பவர்கள் ஆகிய பொது மகளிருடைய (வாசல் தேடி) வீட்டு வாயிலைத்தேடி நடக்கும் வழக்கத்தை (குணத்தை விடமாட்டேனோ!