திருப்புகழ் 1206 அயில் விலோசனம்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1206 ayilvilOsanam  (common)
Thiruppugazh - 1206 ayilvilOsanam - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தானனம் தனன தானனம்
     தனன தானனம் ...... தனதான

......... பாடல் .........

அயில்வி லோசனங் குவிய வாசகம்
     பதற ஆனனங் ...... குறுவேர்வுற்

றளக பாரமுங் குலைய மேல்விழுந்
     ததர பானமுண் ...... டியல்மாதர்

சயில பாரகுங் குமப யோதரந்
     தழுவு மாதரந் ...... தமியேனால்

தவிரொ ணாதுநின் கருணை கூர்தருந்
     தருண பாதமுந் ...... தரவேணும்

கயிலை யாளியுங் குலிச பாணியுங்
     கமல யோனியும் ...... புயகேசன்

கணப ணாமுகங் கிழிய மோதுவெங்
     கருட வாகனந் ...... தனிலேறும்

புயலி லேகரும் பரவ வானிலும்
     புணரி மீதினுங் ...... கிரிமீதும்

பொருநி சாசரன் தனது மார்பினும்
     புதைய வேல்விடும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அயில் விலோசனம் குவிய வாசகம் பதற ஆனனம் குறு
வேர்வுற
... வேல் போன்ற கண்கள் குவியவும், பேச்சு பதறவும், முகத்தில்
சிறு வேர்வை துளிர்க்கவும்,

அளக பாரமும் குலைய மேல் விழுந்து அதர பானம் உண்டு ...
இறுகக் கட்டியிருந்த கூந்தல் பாரம் கலையவும், மேல் விழுந்து வாயிதழ்
ஊறலைப் பருகி,

இயல் மாதர் சயில பார(ம்) குங்கும பயோதரம் தழுவும் ஆதரம்
தமியேனால் தவிர ஒணாது நின் கருணை கூர் தரும் தருண
பாதமும் தரவேணும்
... அழகிய வேசியர்களின் மலை போன்று கனத்த,
குங்குமம் கொண்ட மார்பகங்களைத் தழுவ வேண்டும் என்கின்ற ஆசை
அடியேனால் நீக்க முடியாததாய் இருக்கின்றது. (இவ்வாசையை நீக்க)
உனது கருணை மிக்குள்ள இளமை பொலியும் திருவடிகளை எனக்குத்
தந்தருள வேண்டும்.

கயிலை யாளியும் குலிச பாணியும் கமல யோனியும் புயகேசன்
கண பணா முகம் கிழிய மோது வெம் கருட வாகனம் தனில்
ஏறும் புயல் இலேகரும் பரவ
... கயிலைக்குத் தலைவனான
சிவபெருமானும், வஜ்ராயுத கரத்தனான இந்திரனும், திருமாலின் உந்தித்
தாமரையில் தோன்றிய பிரமனும், பாம்புகளுக்குத் தலைவனான
ஆதிசேஷனுடைய கூட்டமான படங்களின் முகம் அறும்படி மோத வல்ல
கொடிய கருட வாகனத்தின் மேல் ஏறும் மேக வண்ணனாம் திருமாலும்,
தேவர்களும் போற்ற,

வானிலும் புணரி மீதினும் கிரி மீதும் பொரு நிசாசரன் தனது
மார்பினும் புதைய வேல் விடும் பெருமாளே.
... ஆகாயத்திலும்,
கடல் மீதும், மலை மீதும் இருந்து சண்டை செய்யும் அசுரனாகிய சூரன்
மார்பிலே புதைந்து அழுந்தும்படி வேலைச் செலுத்திய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.506  pg 3.507  pg 3.508  pg 3.509 
 WIKI_urai Song number: 1205 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1206 - ayil vilOsanam (common)

ayilvi lOchanang kuviya vAsakam
     pathaRa Ananang ...... kuRuvErvut

RaLaka pAramung kulaiya mElvizhun
     thathara pAnamuN ...... diyalmAthar

sayila pArakung kumapa yOtharan
     thazhuvu mAtharan ...... thamiyEnAl

thaviro NAthunin karuNai kUrtharun
     tharuNa pAthamun ...... tharavENum

kayilai yALiyung kulisa pANiyung
     kamala yOniyum ...... puyakEsan

kaNapa NAmukang kizhiya mOthuveng
     karuda vAkanan ...... thanilERum

puyali lEkarum parava vAnilum
     puNari meethinung ...... kirimeethum

poruni sAsaran thanathu mArpinum
     puthaiya vElvidum ...... perumALE.

......... Meaning .........

ayil vilOchanam kuviya vAsakam pathaRa Ananam kuRu vErvuRa: Their spear-like eyes closed in ecstasy; their speech quivered; beads of perspiration formed on their face;

aLaka pAramum kulaiya mEl vizhunthu athara pAnam uNdu : their tightly-knotted and dense hair became dishevelled; falling all over them and imbibing the saliva from their lips,

iyal mAthar sayila pAra(m) kungkuma payOtharam thazhuvum Atharam thamiyEnAl thavira oNAthu nin karuNai kUr tharum tharuNa pAthamum tharavENum: I have been desperately desiring to hug the mountain-like bosom, smeared with vermillion, of those beautiful whores; that desire is something I could never get rid of; (to remove that desire), kindly grant me Your compassionate, youthful and glorious hallowed feet, Oh Lord!

kayilai yALiyum kulisa pANiyum kamala yOniyum puyakEsan kaNa paNA mukam kizhiya mOthu vem karuda vAkanam thanil ERum puyal ilEkarum parava: Lord SivA presiding over the Mount KailAsh, IndrA armed with the thunderbolt (VajrA), Lord Brahma who emerged on the lotus that stemmed from the belly of Lord VishNu, the dark-cloud-complexioned VishNu mounting the fierce Eagle (Garudan) that is capable of ripping the multitude of hoods of AdhisEshan, the leader of all serpents, and all the celestials stood in prayer

vAnilum puNari meethinum kiri meethum poru nisAsaran thanathu mArpinum puthaiya vEl vidum perumALE.: as You wielded the spear to deeply penetrate the heart of the demon SUran who fought with valour in the sky, upon the sea and on the mountain, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1206 ayil vilOsanam - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]