பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 501 கயிலை யாளியாகிய சிவபிரானும், குலிசாயுத (வஜ்ராயுத) கரத்தனான இந்திரனும், (திருமாலின் உந்தித்) தாமரையில் தோன்றினவனான ரமதேவனும், (புயகேசன்) பாம்புகளுக்குத் தலைவனான ஆதிசேடனுடைய கூட்டமான படங்களின் முகம் கிழிய மோத வல்ல கொடிய கருட வாகனத்தில் ஏறும் - (புயல்) மேக வண்ணராம் திருமாலும், (இலேகரும்) தேவர்களும் (பரவ) போற்றி நிற்க (வானிலும்) ஆகாயத்திலும், (புணரி மீதினும்) கடல்மீதும், மலைமீதும் (இருந்து) சண்டை செய்த (நிசாசரன்) அசுரனாம் சூரனுடைய மார்பிலே புதைந்து அழுந்தும்படி வேலைச் செலுத்தின பெருமாளே! (தருண பாதமும் தரவேணும்) 1206. (அருக்கி) அருமை பாராட்டி நன்றாகத் தோள்களை (திருத்தியுற்று) ஒழுங்கு படுத்தியும், மார்பை அசைத்தும், தம்மைக் கண்டு மகிழும் மோகம் கொண்ட இளைஞர்களை அழைத்து (மிக்க காசு இழைத்து) நிரம்பப் பணத்தை (அவர்கள்) (இழைத்து) தரும்படிச் செய்து, மெத்தையின்மீது அணைத்து, நிரம்பக் காமப்பற்று மிகும்படி - (அவர்கள்) மனத்தை உருக்கி, (உட்கொள்) தம்வசப் படுத்தும் மாதர்களிடையே நான் இளைப்புற்று, நா வறண்டு அச்சத்துடன் நாணம் கொண்டவனாய் (மேவி) இருந்து (உழைக்கும் அத்தை) உழைக்குமதை - உழைப்பதை காலம் தள்ளுவதை நீ ஒழித்தருளி, நான் (முத்தி பாலுற) முத்தி வீட்டை அடைய (உனது) குணத்த -மேன்மை தங்கிய திருவடியைத் தந்தருளுக (சுருக்கம் உற்ற மால்) குறள் ரூபம் எடுத்த (வாமணராய் வந்த) திருமாலாலும் அளவிட முடியாது நின்ற ஒப்பற்ற பெருமான், மிகச்சிறந்த நடனம் ஆடும் (சுகத்தில் அத்தர்) இன்பம் கொண்ட பெருமான் - ஆகிய சிவபிரானுக்கு மிக்க பக்தி முதிர்ந்து பெருக (ஞான) வித்தை (ஞான) மூலப்பொருளை (அல்லது ஞான வித்தையை) உபதேசித்து அருளியவனே! - O வித்தை வித்தை - ஞானம்; வித்தை வித்தினை எனவும் கொள்ளலாம்; வித்து - மூலப் பொருள் "ஒமெனுப தேச வித்து'என்ற இடத்துக் காண்க (திருப்புகழ், 790)