திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1198 வட்ட முலைக்கச்சு (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1198 vattamulaikkachchu (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்த தனத்தத் தனத்த தத்தன தத்த தனத்தத் தனத்த தத்தன தத்த தனத்தத் தனத்த தத்தன ...... தனதான ......... பாடல் ......... வட்ட முலைக்கச் சவிழ்த்து வைத்துள முத்து வடத்தைக் கழுத்தி லிட்டிரு மைக்கு வளைக்கட் குறிப்ப ழுத்திய ...... பொதுமாதர் மட்ட மளிக்குட் டிருத்தி முத்தணி மெத்தை தனக்குட் செருக்கி வெற்றிலை வைத்த பழுப்பச் சிலைச்சு ருட்கடி ...... யிதழ்கோதிக் கட்டி யணைத்திட் டெடுத்து டுத்திடு பட்டை யவிழ்த்துக் கருத்தி தத்தொடு கற்ற கலைச்சொற் களிற்ப யிற்றுள ...... முயல்போதுங் கைக்கு ளிசைத்துப் பிடித்த கட்கமும் வெட்சி மலர்ப்பொற் பதத்தி ரட்சணை கட்டு மணிச்சித் திரத்தி றத்தையு ...... மறவேனே கொட்ட மிகுத்திட் டரக்கர் பட்டணம் இட்டு நெருப்புக் கொளுத்தி யத்தலை கொட்டை பரப்பச் செருக்க ளத்திடை ...... யசுரோரைக் குத்தி முறித்துக் குடிப்ப ரத்தமும் வெட்டி யழித்துக் கனக்க ளிப்பொடு கொக்க ரியிட்டுத் தெரித்த டுப்பன ...... வொருகோடிப் பட்ட பிணத்தைப் பிடித்தி ழுப்பன சச்ச ரிகொட்டிட் டடுக்கெ டுப்பன பற்கள் விரித்துச் சிரித்தி ருப்பன ...... வெகுபூதம் பட்சி பறக்கத் திசைக்குள் மத்தளம் வெற்றி முழக்கிக் கொடிப்பி டித்தயில் பட்ட றவிட்டுத் துரத்தி வெட்டிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... வட்ட முலைக் கச்சு அவிழ்த்து வைத்துள முத்து வடத்தைக் கழுத்தில் இட்டு இரு மைக் குவளைக் கண் குறிப்பு அழுத்திய பொது மாதர் ... வட்ட வடிவான மார்பகத்தில் அணிந்த கச்சை அவிழ்த்து வைத்திருக்கின்ற, முத்து மாலையை கழுத்தில் போட்டுக் கொண்டு மை பூசப்பட்ட இரண்டு குவளை மலர் போன்ற கண் கொண்டு தங்களது விருப்பத்தை நன்றாகத் தெரியப்படுத்துகின்ற விலைமாதர்கள். மட்டு அமளிக்குள் திருத்தி முத்து அணி மெத்தை தனக்குள் செருக்கி வெற்றிலை வைத்த பழுப் பச்சிலைச் சுருள் கடி இதழ் கோதி ... நறுமணப் படுக்கையில் அவர்களுடைய முத்தாலான அணிகலன்களை ஒழுங்கு படுத்தி, மெத்தையில் களிப்புடன் இருந்து, வெற்றிலையில் வைத்த பழுத்த பாக்குடன் கூடிய பசுமையான இலைச் சுருளைக் கடிக்கும் வாயிதழ் ஊறலைச் சிறிது சிறிதாகப் பருகி, கட்டி அணைத்திட்டு எடுத்து உடுத்திடு பட்டை அவிழ்த்துக் கருத்து இதத்தோடு கற்ற கலைச் சொற்களில் பயிற்று உள(ம்) முயல் போதும் ... கட்டி அணைத்திட்டு எடுத்து, அவர்கள் அணிந்துள்ள பட்டாடையை அவிழ்த்து, மனதில் இன்பத்தோடு நான் கற்ற சிற்றின்ப நூல்களில் உள்ள சொற்களின் பயிற்சியில் என் மனம் முயற்சி செய்த போதிலும், கைக்குள் இசைத்துப் பிடித்த கட்கமும் வெட்சி மலர்ப் பொன் பதத்து இரட்சணை கட்டு மணிச் சித்திரத் திறத்தையு(ம்) மறவேனே ... உனது திருக்கையில் பொருந்த வைத்துப் பிடித்துள்ள வாளையும், வெட்சி மலர் சூழ்ந்த அழகிய திருவடியாகிய காப்பையும் உடை மணி முதலிய கட்டியுள்ள அழகிய சாமர்த்தியத்தையும் மறக்கவே மாட்டேன். கொட்ட(ம்) மிகுத்திட்ட அரக்கர் பட்டணம் இட்டு நெருப்புக் கொளுத்தி அத் தலை கொட்டை பரப்பச் செருக் களத்து இடை அசுரோரைக் குத்தி முறித்துக் குடிப்ப ரத்தமும் வெட்டி அழித்து ... இறுமாப்பு மிகுந்திட்ட அசுரர்களுடைய பட்டணங்களை தீயிட்டுக் கொளுத்தி, அவ்விடத்தில் அசுரர்களை போர்க்களத்தில் சிதறுண்ண வைக்க, (அப்போது) குத்தி முறித்து ரத்தத்தைக் குடிக்க வெட்டி அழித்து, கனக் களிப்பொடு கொக்கரி இட்டுத் தெரித்து அடுப்பன ஒரு கோடிப் பட்ட பிணத்தைப் பிடித்து இழுப்பன சச்சரி கொட்டிட்டு அடுக்கு எடுப்பன பற்கள் விரித்துச் சிரித்து இருப்பன வெகு பூதம் ... மிக்க மகிழ்ச்சியுடன் ஆரவாரத்துடன கர்ச்சனை செய்து வெளிப்பட்டுக் கூடிய, ஒரு கோடிக்கணக்கில் அழிந்த பிணங்களைப் பிடித்து இழுப்பனவும், வாத்தியதைக் கொட்டிக் கொண்டு அடுக்குப் பாத்திரம் போல் எடுத்து அடுக்குவனவும், பற்களை விரியக் காட்டி சிரித்துக் கொண்டிருப்பனவுமாகிய நிறைய பூதங்கள். பட்சி பறக்கத் திசைக்குள் மத்தளம் வெற்றி முழக்கிக் கொடிப் பிடித்து அயில் பட்டு அற விட்டுத் துரத்தி வெட்டிய பெருமாளே. ... கருடன் முதலிய பறவைகள் மேலே பறந்து, திசைகள் தோறும் மத்தளங்கள் ஜெய பேரிகை முழக்க, வெற்றிக் கொடியை ஏந்தி, வேலாயுதத்தை நன்றாகச் செலுத்தி அசுரர்களைத் துரத்தி வெட்டிய பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.490 pg 3.491 pg 3.492 pg 3.493 WIKI_urai Song number: 1197 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1198 - vatta mulaikkachchu (common) vatta mulaikkac chavizhththu vaiththuLa muththu vadaththaik kazhuththi littiru maikku vaLaikkat kuRippa zhuththiya ...... pothumAthar matta maLikkut tiruththi muththaNi meththai thanakkut cherukki vetRilai vaiththa pazhuppac chilaicchu rutkadi ...... yithazhkOthik katti yaNaiththit teduththu duththidu pattai yavizhththuk karuththi thaththodu katRa kalaicchoR kaLiRpa yitRuLa ...... muyalpOthung kaikku Lisaiththup pidiththa katkamum vetchi malarppoR pathaththi ratchaNai kattu maNicchith thiraththi Raththaiyu ...... maRavEnE kotta mikuththit tarakkar pattaNam ittu neruppuk koLuththi yaththalai kottai parappac cherukka Laththidai ...... yasurOraik kuththi muRiththuk kudippa raththamum vetti yazhiththuk kanakka Lippodu kokka riyittuth theriththa duppana ...... vorukOdip patta piNaththaip pidiththi zhuppana saccha rikottit tadukke duppana paRkaL viriththuc chiriththi ruppana ...... vekupUtham patchi paRakkath thisaikkuL maththaLam vetRi muzhakkik kodippi diththayil patta Ravittuth thuraththi vettiya ...... perumALE. ......... Meaning ......... vatta mulaik kacchu avizhththu vaiththuLa muththu vadaththaik kazhuththil ittu iru maik kuvaLaik kaN kuRippu azhuththiya pothu mAthar: They loosen the knot binding the blouse covering their round bosom. Wearing a string of pearls and showing off their painted eyes that look like two black lilies, these whores express their desire overtly. mattu amaLikkuL thiruththi muththu aNi meththai thanakkuL serukki vetRilai vaiththa pazhup pacchilaic churuL kadi ithazh kOthi: Tidying up the jewellery made of pearls scattered over their fragrant bed, reclining on the mattress with relish gently imbibing the saliva gushing from their mouth that munches the curled-up tender-green betel leaves packed with dried and brown betelnuts, katti aNaiththittu eduththu uduththidu pattai avizhththuk karuththu ithaththOdu katRa kalaic choRkaLil payitRu uLa(m) muyal pOthum: taking them in my hands with a tight hug and untying their silky upper garment, I attempted to indulge in an exercise of speaking sensuous words that I had learnt in erotic texts. Nonetheless, kaikkuL isaiththup pidiththa katkamum vetchi malarp pon pathaththu iratchaNai kattu maNic chiththirath thiRaththaiyu(m) maRavEnE: I shall never forget the sword held aptly in Your hallowed hand, Your lovely feet of solace that are adorned with vetchi flowers and the cute manner in which You are wearing the bell-bordered attire, Oh Lord! kotta(m) mikuththitta arakkar pattaNam ittu neruppuk koLuththi ath thalai kottai parappac cheruk kaLaththu idai asurOraik kuththi muRiththuk kudippa raththamum vetti azhiththu: Igniting fire in the cities of the extremely arrogant demons and leaving them scattered in the battlefield, You knocked them down breaking the bodies so that their blood could be devoured kanak kaLippodu kokkari ittuth theriththu aduppana oru kOdip patta piNaththaip pidiththu izhuppana sacchari kottittu adukku eduppana paRkaL viriththuc chiriththu iruppana veku pUtham: by a multitude of fiends that came out roaringly displaying their wide-open mouth full of teeth expressing their joy and pulling out millions of corpses and stacking them like a heap of vessels against the background beating of percussion instruments. patchi paRakkath thisaikkuL maththaLam vetRi muzhakkik kodip pidiththu ayil pattu aRa vittuth thuraththi vettiya perumALE.: Many birds like the white-beaked eagles flew in the sky, and drums announcing victory were beaten in all directions when You held high the staff of Triumph, powerfully wielding the spear and chasing away the demons and cutting them, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |