திருப்புகழ் 1197 வடிகட்டிய தேன் என  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1197 vadikattiyathEnena  (common)
Thiruppugazh - 1197 vadikattiyathEnena - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனத்தன தானன தானன
     தனனத்தன தானன தானன
          தனனத்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

வடிகட்டிய தேனென வாயினி
     லுறுதுப்பன வூறலை யார்தர
          வரைவிற்றிக ழூடலி லேதரு ...... மடவார்பால்

அடிபட்டலை பாவநிர் மூடனை
     முகடித்தொழி லாமுன நீயுன
          தடிமைத்தொழி லாகஎ நாளினி ...... லருள்வாயோ

பொடிபட்டிட ராவணன் மாமுடி
     சிதறச்சிலை வாளிக ளேகொடு
          பொருகைக்கள மேவிய மாயவன் ...... மருகோனே

கொடுமைத்தொழி லாகிய கானவர்
     மகிமைக்கொள வேயவர் வாழ்சிறு
          குடிலிற்குற மானொடு மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வடி கட்டிய தேன் என வாயினில் உறு துப்பு அ(ன்)ன
ஊறலை ஆர்தர
... வடிகட்டப்பட்ட தேன் என்று சொல்லும்படி
வாயினில் நுகர் பொருளாகிய இதழ் ஊறலை அனுபவிக்க,

வரைவில் திகழ் ஊடலிலே தரு மடவார் பால் அடி பட்டு
அலை பாவ நிர் மூடனை
... ஓரளவு ஊடலை நிகழ்த்தி, பின்பு
தருகின்ற மாதர்களிடத்தே அலைப்புண்டு அலைகின்ற பாவியும்
முழு முட்டாளுமாகிய என்னை,

முகடித் தொழில் ஆம் முன் நீ உனது அடிமைத் தொழிலாக
எ(ந்)நாளினில் அருள்வாயோ
... கீழ்த்தரமான தொழிலையே
மேற்கொண்டவனாய் இழிந்த நிலையை அடைவதற்கு முன்னம், உனக்கு
அடிமைப் பணி செய்யும் (பாக்கியத்) தொழில் எனக்குக் கிடைக்கும்படி
எந்த நாளில் அருள்வாயோ?

பொடி பட்டிட ராவணன் மா முடிசிதறச் சிலை வாளிகளே
கொ(ண்)டு பொருகைக் கள(ம்) மேவிய மாயவன்
மருகோனே
... பொடிபட்டுப் போய் ராவணனுடைய சிறந்த முடிகள்
சிதறும்படி வில்லும் அம்புகளும் கொண்டு சண்டை செய்வதற்கு
போர்க்களத்தை அடைந்த மாயவனாகிய ராமனின் மருகனே,

கொடுமைத் தொழில் ஆகிய கானவர் மகிமைக் கொளவே
அவர் வாழ் சிறு குடிலில் குறமானொடு மேவிய பெருமாளே.
...
கொடுந் தொழிலைச் செய்யும், காட்டில் வாழும் வேடர்கள் பெருமை
அடையுமாறு, அவர்கள் வாழ்ந்திருந்த சின்னக் குடிசையில் மான்
போன்ற குறப்பெண் வள்ளியோடு வீற்றிருந்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.490  pg 3.491 
 WIKI_urai Song number: 1196 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1197 - vadikattiya thEn ena (common)

vadikattiya thEnena vAyini
     luRuthuppana vURalai yArthara
          varaivitRika zhUdali lEtharu ...... madavArpAl

adipattalai pAvanir mUdanai
     mukadiththozhi lAmuna neeyuna
          thadimaiththozhi lAkae nALini ...... laruLvAyO

podipattida rAvaNan mAmudi
     sithaRacchilai vALika LEkodu
          porukaikkaLa mEviya mAyavan ...... marukOnE

kodumaiththozhi lAkiya kAnavar
     makimaikkoLa vEyavar vAzhsiRu
          kudiliRkuRa mAnodu mEviya ...... perumALE.

......... Meaning .........

vadi kattiya thEn ena vAyinil uRu thuppu a(n)na URalai Arthara: To enjoy the imbibing of saliva, that tastes like filtered honey, oozing from their mouth,

varaivil thikazh UdalilE tharu madavAr pAl adi pattu alai pAva nir mUdanai: which they concede after a little spat, I have been roaming about driven around by the whores; I am a sinner and an utter fool;

mukadith thozhil Am mun nee unathu adimaith thozhilAka e(n) nALinil aruLvAyO: before I debase myself any lower by doing these despicable acts, when will You kindly grant me the (propitious) task of serving You as Your slave?

podi pattida rAvaNan mA mudisithaRas silai vALikaLE ko(N)du porukaik kaLa(m) mEviya mAyavan marukOnE: To shatter to pieces the lofty heads of RAvaNan, He armed Himself with bow and arrows and went to fight in the battlefield; You are the nephew of that mystic RAmA, Oh Lord!

kodumaith thozhil Akiya kAnavar makimaik koLavE avar vAzh siRu kudilil kuRamAnodu mEviya perumALE.: The hunters in the forest, who resort to horrific acts, were elated when You decided to reside in their little hut along with deer-like VaLLi, the damsel of the KuRavAs, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1197 vadikattiya thEn ena - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]