பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 485 (மட்டு அமளிக்குள்) நறுமணப் படுக்கையில் (முத்தணி திருத்தி) அவர்களுடைய முத்தாபரணங்களை பகு படுத்தி, மெத்தையில் (செருக்கி) களிப்புடன் இருந்து, வெற்றிலை வைத்த பழு பச்சிலைச் சுருள் - வெற்றிலையில் வைத்த பழுத்த பாக்குடன் பசுமையான இலைச்சுருளைக் கடிக்கும் வாயிதழை (ஊறலை) கோதிசிறிது சிறிதாகப் பருகி (உண்டு) கட்டி அணைத்திட்டு எடுத்து, (உடுத்திடு) அவர்கள் அணிந்துள்ள பட்டுப்புடவையை அவிழ்த்துக் கருத்து இதத்தொடு, கருத்தில் இன்பத்தோடு, கற்ற கலைகளில் உள்ள கொக்கோக சாத்திர நூலில் உள்ள சொற்களின் - பயிற்சியிலே - (உளம்) என் உள்ளம் முயற்சி செய்யும் போதும் உனது திருக்கையில் பொருத்திவைத்துப் பிடித்துள்ள (கட்கமும்) வாளையும், வெட்சி மலர் சூழ்ந்த அழகிய திருவடியாம் (ரட்சனை) காப்பையும், (கட்டு மணி) உடைமணி முதலிய கட்டியுள்ள அழகிய (திறத்தையும்) சாமர்த்தியத்தையும் அல்லது கட் - துளசாமணி முதலிய கட்டியிருந்த வள்ளியின் விசித்திரமான சன்மார்க்கத்திறத்தையும் நான் மறவேன். (கொட்டம்) இறுமாப்பு மிகுத்திட்ட மிக்கிருந்த அசுரர்களுடைய பட்டண்ங்களை (இட்டு நெருப்புக் கொளுத்தி) தியிட்டுக் கொளுத்தி (அத்தலை அவ்விடத்தில் (கொட்டைபரப்பச் செருக்களத்திட்ை அசுரோரை) அசுரர்களைப் போர்க்களத்தில் அடியோடு கொட்டை பரப்ப - சிதறுண்ண வைத்து அழிக்க (அப்போது) குத்தி முறித்து (குடிப்ப ரத்தமும்) ரத்தத்தைக் குடிக்க, வெட்டி அழித்து மிக்க (களிப்போடு) மகிழ்ச்சியுடன் (கொக்கரியிட்டு) ஆரவாரத்துடன் கர்ச்சனை செய்து தெரித்து (அடுப்பன) வெளிப்ப்ட்டுக் கூடுவன ஒரு கோடிக் கணக்கில் அழிந்துபட்ட பிணங்களைப் பிடித்து இழுப்பன: (சச்சரி) வாத்தியத்தைக் கொட்டிக்கொண்டு (அடுக்கு எடுப்பன) அடுக்குப் பாத்திரம் போல (அப்பினங்களை) எடுத்து அடுக்குவன: பற்களை விரியக்காட்டிச் சிரித்துக்கொண்டிருப்பன, வெகு பூதங்கள் கருடன் முதலிய பட்சிகள் மேலே பறந்து திசை தோறும் வட்டமிட, மத்தளங்கள் ஜயம் (ஜயபேரிகையை) முழக்கி (வெற்றிக்கொடி பிடித்து (அயில்) வேலாயுதத்தைப்படும்படி நன்றாகச் செலுத்தி (அசுரர்களைத்) துரத்தி அவர்களை வெட்டிய பெருமாளே! (கட்கம் - ரட்சணை திறம் மறவேன்)