திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1166 நரையொடு பல் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1166 naraiyodupal (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தத்த தந்த தானத்த தனதன தத்த தந்த தானத்த தனதன தத்த தந்த தானத்த ...... தனதான ......... பாடல் ......... நரையொடு பற்க ழன்று தோல்வற்றி நடையற மெத்த நொந்து காலெய்த்து நயனமி ருட்டி நின்று கோலுற்று ...... நடைதோயா நழுவும்வி டக்கை யொன்று போல்வைத்து நமதென மெத்த வந்த வாழ்வுற்று நடலைப டுத்து மிந்த மாயத்தை ...... நகையாதே விரையொடு பற்றி வண்டு பாடுற்ற ம்ருகமத மப்பி வந்த வோதிக்கு மிளிருமை யைச்செ றிந்த வேல்கட்கும் ...... வினையோடு மிகுகவி னிட்டு நின்ற மாதர்க்கு மிடைபடு சித்த மொன்று வேனுற்றுன் விழுமிய பொற்ப தங்கள் பாடற்கு ...... வினவாதோ உரையொடு சொற்றெ ரிந்த மூவர்க்கு மொளிபெற நற்ப தங்கள் போதித்து மொருபுடை பச்சை நங்கை யோடுற்று ...... முலகூடே உறுபலி பிச்சை கொண்டு போயுற்று முவரிவி டத்தை யுண்டு சாதித்து முலவிய முப்பு ரங்கள் வேவித்து ...... முறநாகம் அரையொடு கட்டி யந்த மாய்வைத்து மவிர்சடை வைத்த கங்கை யோடொக்க அழகுதி ருத்தி யிந்து மேல்வைத்து ...... மரவோடே அறுகொடு நொச்சி தும்பை மேல்வைத்த அரியய னித்தம் வந்து பூசிக்கும் அரநிம லர்க்கு நன்றி போதித்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... நரை ஒடு பல் கழன்று தோல் வற்றி ... மயிர் நரைக்கவும், பற்கள் கழன்று விழவும், தோல் வற்றிப் போகவும், நடை அற மெத்த நொந்து கால் எய்த்து ... நடை அற்றுப் போகவும், மிகவும் நோவுற்று கால்கள் இளைத்துப் போகவும், நயனம் இருட்டி நின்று கோல் உற்று நடை தோயா ... கண்கள் இருளடைந்து பார்வையை இழந்து நின்று, தடியை ஊன்று கோலாகக் கொண்டு நடை பயின்று, நழுவும் விடக்கை ஒன்று போல் வைத்து ... நழுவி மறைந்து (இறந்து) போகும் இந்த மாமிச உடலை நிலைத்து நிற்கும் ஒரு பொருள் போல் நினைத்து, நமது என மெத்த வந்த வாழ்வு உற்று ... நம்முடையது என்று உடைமைகளைப் பாராட்டி, அப்படிச் சேகரித்து வந்த நல்வாழ்வை அடைந்து, நடலை படுத்தும் இந்த மாயத்தை நகையாதே ... (முடிவில்) துன்பப் படுத்தும் இந்த மாய வாழ்க்கையை நான் சிரித்து விலக்காமல், விரையொடு பற்றி வண்டு பாடு உற்ற ... நறு மணத்தை நுகர்ந்து வண்டுகள் பாட ம்ருகமதம் அப்பி வந்த ஓதிக்கு ... கஸ்தூரியைத் தடவித் தோய்ந்துள்ள கூந்தலுக்கும், மிளிரும் மையைச் செறிந்த வேல்கட்கும் ... விளங்கும் மை தீட்டிய வேல் போன்ற கண்களுக்கும், வினையோடு மிகு கவின் இட்டு நின்ற மாதர்க்கும் ... தந்திர எண்ணத்துடன் மிக்க அழகைச் செய்துகொண்டு அலங்காரத்துடன் நின்ற விலைமாதர்களுக்கும் இடைபடு சித்தம் ஒன்றுவேன் ... மத்தியில் அவதிப்படுகின்ற மனமோகம் உடையவனாகிய நான் உற்று உன் விழுமிய பொன் பதங்கள் பாடற்கு வினவாதோ ... அன்பு உற்று உனது சிறந்த அழகிய திருவடியைப் பாடிப் புகழ்தற்கு ஆராய்ந்து மேற் கொள்ளமாட்டேனோ? உரையொடு சொல் தெரிந்த மூவர்க்கும் ... பொருளோடு, சொல்லும் தெரிந்த (அதாவது, சிவம், சக்தி இவைகளின் உண்மை தெரிந்த) சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்னும் சைவக்குரவர் மூவர்க்கும் ஒளி பெற நல் பதங்கள் போதித்தும் ... அவர்கள் புகழ் ஒளி பெறுவதற்கு, சிறந்த எழுத்துக்களான (நமசிவாய என்ற) ஐந்தெழுத்தை உபதேசம் செய்தும், ஒரு புடை பச்சை நங்கையோடு உற்றும் ... தமது ஒரு பக்கத்தில் பச்சை நிறப் பெருமாட்டியாகிய பார்வதியோடு அமைந்தும், உலகூடே உறு பலி பிச்சை கொண்டு போய் உற்றும் ... உலகம் முழுவதும் கிடைக்கும் பிச்சையை ஏற்றுக் கொண்டும், உவரி விடத்தை உண்டு சாதித்தும் ... பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தை உண்டு தமது பரத்தையும் அழியாமையையும் நிலை நிறுத்திக் காட்டியும், உலவிய முப்புரங்கள் வேவித்தும் ... பறந்து உலவிச் செல்லவல்ல திரிபுரங்களையும் எரித்துச் சாம்பலாக்கியும், உற நாகம் அரையொடு கட்டி அந்தமாய் வைத்தும் ... பொருந்தும்படி விஷப்பாம்பை இடுப்பில் கட்டி அழகாக அமைத்தும், அவிர் சடை வைத்த கங்கையோடு ஒக்க ... விளங்கும் சடையில் தரித்துள்ள கங்கையுடன் ஒத்திருக்க, அழகு திருத்தி இந்து மேல்வைத்தும் ... அழகாகச் சிங்காரித்து பிறைச் சந்திரனை மேலே வைத்தும், அரவோடே அறுகொடு நொச்சி தும்பை மேல் வைத்த ... பாம்புடன் அறுகம் புல்லோடு நொச்சியையும், தும்பையையும் மேலே சூடியுள்ளவரும், அரி அயன் நித்தம் வந்து பூசிக்கும் ... திருமாலும், பிரமனும் நாள்தோறும் வந்து பூஜை செய்யும் அர நிமலர்க்கு நன்று போதித்த பெருமாளே. ... சிவபெருமான் ஆகிய நிர்மல மூர்த்திக்கு நல்ல உபதேசப் பொருளைப் போதித்த பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.410 pg 3.411 pg 3.412 pg 3.413 WIKI_urai Song number: 1166 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1166 - naraiyodu pal (common) naraiyodu paR kazhandru thOl vatri nadai aRa meththa nondhu kAleyththu nayanam irutti nindru kOlutru ...... nadai thOyA nazhuvum vidakkai OndrupOl vaiththu namadhena meththa vandha vAzhvutru nadalai paduththum indha mAyaththai ...... nagaiyAdhE viraiyodu patri vaNdu pAdutra mrigamadham appi vandha Odhikku miLiru maiyaich cherindha vElgatkum ...... vinaiyOdu migu kavinittu nindra mAdharkkum idaipadu chiththam ondruvEn utrun vizhumiya poRpadhangaL pAdaRku ...... vinavAdhO uraiyodu sotrerindha mUvarkkum oLipeRa naRpadhangaL bOdhiththum orupudai pachchai nangaiyOd utrum ...... ulagUdE uRubali pichchai koNdu pOyutrum uvari vidaththai uNdu sAdhiththum ulaviya muppurangaL vEviththum ...... uRanAgam araiyodu katti andhamAy vaiththum avirsadai vaiththa gangaiyOd okka azhagu thiruththi indhu mEl vaiththum ...... aravOdE aRugodu nochchi thumbai mElvaiththa ariaya niththam vandhu pUjikkum ara nimalarkku nandri bOdhiththa ...... perumALE. ......... Meaning ......... naraiyodu paR kazhandru thOl vatri: My black hair has turned gray; all my teeth have fallen; the skin of my body is full of wrinkles; nadai aRa meththa nondhu kAleyththu: being unable to walk, my legs have become painfully weak; nayanam irutti nindru kOlutru nadai thOyA: my eyes see only darkness having lost their vision; and I rely on a walking stick, tottering about. nazhuvum vidakkai OndrupOl vaiththu: Wishfully thinking that my slippery and degenerating body of flesh is going to last for ever, namadhena meththa vandha vAzhvutru: and that all my possessions will be mine for ever, I enjoyed the so-called comfortable life. nadalai paduththum indha mAyaththai nagaiyAdhE: Ultimately, I have been subject to this misery and delusion. Rather than laughing off this plight, viraiyodu patri vaNdu pAdutra mrigamadham appi vandha Odhikkum: (I indulged in) the fragrant hair of women soaked in musk, strong enough to attract humming beetles, miLiru maiyaich cherindha vElgatkum: their spear-like showy eyes with a rich coat of mascara, and vinaiyOdu migu kavinittu nindra mAdharkkum: deceitful harlots who stood showing off their overly made up face and figure; idaipadu chiththam ondruvEn: tossed between these, my mind was torn apart by excessive lust. utrun vizhumiya poRpadhangaL pAdaRku vinavAdhO: Will I not ever pause to contemplate and begin to sing the glory of Your hallowed feet lovingly? uraiyodu sotrerindha mUvarkkum: The three great Saivite Poet-Patrons (namely, Appar, Sundarar and Sambandhar) knew not only the apppropriate words but also their meanings (the interpretation of Sivam and Shakti); oLipeRa naRpadhangaL bOdhiththum: He illuminated them all by preaching the ManthrA, NamasivAya; orupudai pachchai nangaiyOd utrum: He holds on one side of His body the emerald-green consort, PArvathi; ulagUdE uRubali pichchai koNdu pOyutrum: He roams around the entire world gladly accepting the alms offered to Him; uvari vidaththai uNdu sAdhiththum: the terrible poison, AlakAlam, that emerged from the milky ocean was imbibed by Him to demonstrate His Omnipotence and indestructibility to the world; ulaviya muppurangaL vEviththum: He burnt down the three evil empires, Thiripuram, which were capable of flying in the sky; uRanAgam araiyodu katti andhamAy vaiththum: as an elegant belt around His waist, He wears the poisonous snake; avirsadai vaiththa gangaiyOd okka: to match the River Ganga adorning His tresses, azhagu thiruththi indhu mEl vaiththum: He has decorated His matted hair with the crescent moon sitting pretty, aravOdE aRugodu nochchi thumbai mElvaiththa: along with a snake, and placed the aRugam (cynodon) grass and flowers like nochchai and thumbai; ariaya niththam vandhu pUjikkum: He is worshipped daily by Lords Vishnu and BrahmA; ara nimalarkku nandri bOdhiththa perumALE.: He is that immaculate Lord SivA to whom You preached the most important ManthrA effectively, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |