திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1167 நிமிர்ந்த முதுகு (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1167 nimirndhamudhugu (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனந்த தனனந் தனந்த தனந்த தனனந் தனந்த தனந்த தனனந் தனந்த ...... தனதான ......... பாடல் ......... நிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி நிறைந்த வயிறுஞ் சரிந்து ...... தடியூணி நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங் கிருண்டு நினைந்த மதியுங் கலங்கி ...... மனையாள்கண் டுமிழ்ந்து பலருங் கடிந்து சிறந்த வியலும் பெயர்ந்து உறைந்த உயிருங் கழன்று ...... விடுநாள்முன் உகந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து ஒடுங்கி நினையும் பணிந்து ...... மகிழ்வேனோ திமிந்தி யெனவெங் கணங்கள் குணங்கர் பலவுங் குழும்பி திரண்ட சதியும் புரிந்து ...... முதுசூரன் சிரங்கை முழுதுங் குடைந்து நிணங்கொள் குடலுந் தொளைந்து சினங்க ழுகொடும் பெருங்கு ...... ருதிமூழ்கி அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ்கொண்டு மண்ட அடர்ந்த அயில்முன் துரந்து ...... பொருவேளே அலங்க லெனவெண் கடம்பு புனைந்து புணருங் குறிஞ்சி அணங்கை மணமுன் புணர்ந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... நிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி ... நிமிர்ந்திருந்த முதுகும் கூன் விழுந்து, பரந்து விளங்கிய முகமும் சுருக்கம் கண்டு, நிறைந்த வயிறுஞ் சரிந்து தடியூணி ... நிறைந்து ஒழுங்காய் இருந்த வயிறும் சரிதலுற்று, தடியை ஊன்றும் நிலை ஏற்பட்டு, நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங்கு இருண்டு ... நெகிழ்வுற்று உடம்பு தளர்ச்சி அடைந்து, ஒளியுடன் இருந்த கண்கள் அங்கு இருள் அடைந்து, நினைந்த மதியுங் கலங்கி ... நினைவோடு இருந்த அறிவும் கலக்கம் அடைந்து, மனையாள் கண்டுமிழ்ந்து பலருங் கடிந்து ... மனையவள் இந்த நிலையைக் கண்டு சீ என உமிழ்ந்து, பிறரும் வசைகள் பல பேசி, சிறந்த இயலும் பெயர்ந்து ... சிறப்பாக இருந்த குணத்தன்மையும் நீங்கி, உறைந்த உயிருங் கழன்று விடுநாள்முன் ... உடலில் குடிகொண்டிருந்த உயிரும் பிரிந்து விடும் நாள் வருவதற்கு முன்பாக, உகந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து ... மனமகிழ்ச்சியுடன் உள்ளக் குளிர்ச்சியுடன் நல்ல பயனைத் தரும் தர்மங்களைச் செய்து, ஒடுங்கி நினையும் பணிந்து மகிழ்வேனோ ... என் ஆணவம் ஒடுங்கி, உன்னைப் பணிந்து மகிழ மாட்டேனோ? திமிந்தி யெனவெங் கணங்கள் குணங்கர் பலவுங் குழும்பி ... திமிந்தி என்ற ஒலியோடு பிசாசுக் கணங்கள் பல வகையானவை ஒன்று கூடி திரண்ட சதியும் புரிந்து ... கூட்டமாக நின்று தாளத்துடன் கூத்தாடி, முதுசூரன் சிரம் கை முழுதுங் குடைந்து ... பழையவனான சூரனின் தலை, கை இவையாவற்றையும் நோவுபடச் செய்து, நிணங்கொள் குடலுந் தொளைந்து ... மாமிசம் நிறைந்த குடலைத் தொளை செய்து, சினங் கழுகொடும் பெருங்குருதிமூழ்கி ... கோபம் கொண்ட கழுகுகளுடன், அந்தச் சூரனின் மிகுத்துப் பெருகும் ரத்தத்தில் முழுகி, அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ்கொண்டு மண்ட ... அமிழ்ந்தும், நிரம்பப் பிணங்களை உண்டும், மகிழ்ச்சி கொண்டு நெருங்கும்படியாக, அடர்ந்த அயில்முன் துரந்து பொருவேளே ... தாக்கும் வேலாயுதத்தை முன்பு செலுத்திப் போர் செய்த செவ்வேளே. அலங்க லெனவெண் கடம்பு புனைந்து ... மாலையாக வெண்மையான கடப்பமலரை அணிந்து கொண்டு, புணருங் குறிஞ்சி அணங்கை மணமுன் புணர்ந்த பெருமாளே. ... உன்னுடன் சேர்ந்த மலைநாட்டுப் பெண்ணான வள்ளியை முன்பு திருமணம் செய்து கூடிய பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.412 pg 3.413 pg 3.414 pg 3.415 WIKI_urai Song number: 1167 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1167 - nimirndha mudhugu (common) nimirntha muthukum kuninthu siRantha mukamum thirangi niRaintha vayiRum carinthu ...... thadiyUNi nekizhnthu sadalam thaLarnthu viLangu vizhiyan giruNdu ninaintha mathiyum kalangi ...... manaiyALkaN dumizhnthu palarum kadinthu siRantha viyalum peyarnthu uRaintha uyirum kazhanRu ...... vidunALmun ukanthu manamum kuLirnthu payankoL tharumam purinthu odungi ninaiyum paNinthu ...... makizhvEnO thiminthi yenaveng kaNangaL kuNangar palavum kuzhumpi thiraNda sathiyum purinthu ...... muthucUran siramkai muzhuthum kudainthu niNangkoL kudalun thoLainthu sinangka zhukodum perumku ...... ruthimUzhki amizhnthi mikavum piNangaL ayinRu makizhkoNdu maNda adarntha ayilmun thuranthu ...... poruvELE alanga lenaveN kadampu punainthu puNarum kuRinji aNangai maNamun puNarntha ...... perumALE. ......... Meaning ......... nimirntha muthukum kuninthu siRantha mukamum thirangi: My erect back will stoop down; my bright face will become wrinkled; niRaintha vayiRum carinthu thadiyUNi: my normally flat belly will develop a paunch; I will have to lean on a walking stick; nekizhnthu sadalam thaLarnthu viLangu vizhiyan giruNdu: my firm torso will loosen and become weak; my gleaming eyes will turn gloomy; ninaintha mathiyum kalangi: my lucid thinking will become confused and incoherent; manaiyALkaNdumizhnthu: even my wife will spit at me with disdain and abhorrence; palarum kadinthu siRantha viyalum peyarnthu: many others will rebuke me; my pleasant demeanor will undergo a change; uRaintha uyirum kazhanRu vidunALmun: prior to that day when life lingering in my body slowly slips away, ukanthu manamum kuLirnthu payankoL tharumam purinthu: shall I be able to perform useful and righteous deeds willingly and heartily odungi ninaiyum paNinthu makizhvEnO: and derive pleasure by giving up my arrogance and prostrating at Your feet? thiminthi yenaveng kaNangaL kuNangar palavum kuzhumpi: The herd of many diverse devils gathered making the noise "Thiminthi" thiraNda sathiyum purinthu: and danced together to the beats; muthucUran siramkai muzhuthum kudainthu: they inflicted pain on the head, hands and other limbs of the old demon, SUran, niNangkoL kudalun thoLainthu: piercing his intestines full of flesh sinangka zhukodum perumkuruthimUzhki amizhnthi: and bathed along with angry eagles by immersing in the gushing blood; mikavum piNangaL ayinRu makizhkoNdu maNda: they devoured many a corpse and thronged with glee adarntha ayilmun thuranthu poruvELE: while You fought with Your attacking spear, Oh Lord! alanga lenaveN kadampu punainthu: Wearing a white kadappa garland, puNarum kuRinji aNangai maNamun puNarntha perumALE.: You wedded the belle from the hills, namely VaLLi, who united with You in holy matrimony, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |